'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' அழைப்பிதழ் வெளியானது!
முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்கவும், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் https://muthamizhmuruganmaanadu2024.com/ என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டு, மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் 15.07.2024 ஆம் தேதிக்குள்ளும், ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்பும் பேராளர்கள் / ஆய்வு மாணவர்கள் 10.07.2024 ஆம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து 1,003 ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டு, அவற்றை பரிசீலிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்பதற்கு பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்கிட வேண்டுமென பல்வேறு தரப்பினரிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் ஒருங்கிணைப்பு குழு முடிவுகளின்படி பங்கேற்பாளர்கள் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 2024 ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்த நிலையில் இதற்கான அழைப்பிதழ் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மாநாட்டில் உலகளாவிய சமய சான்றோர்கள், முக்கிய பிரமுகர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்விழாவில் பல்வேறு அரங்குகள் அமைகின்றன. குறிப்பாக, விழாவில் கலைநிகழ்ச்சி அரங்கம், ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்க ஆய்வரங்கம், கந்தன் புகழ் பேசும் கண்காட்சி, மக்கள் அனைவரும் வழிபடும் வகையில் வேல்கோட்டம் மற்றும் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் மாநாடு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
துவக்க விழா
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில், அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி, சச்சிதானந்தம், எம்.பி., சச்சிதானந்தம், எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் துவக்க விழா நடைபெறுகிறது.
நல்ஆசியுரை வழங்கும் ஆதீனங்கள்
அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் திருவாவடுதுறை ஆதீனம்
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் திருவண்ணாமலை ஆதீனம்
சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேரூர் ஆதீனம்
சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான சுவாமிகள் குருமகா சந்நிதானம், செங்கோல் ஆதீனம்
குமரகுருபர சுவாமிகள் சிரவை ஆதீனம்
சிவ சண்முக ஆறுமுகம் மெய்ஞான சிவாசாரியா சுவாமிகள்
திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலயம்
சீர்வளர்சீர் தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தருமபுரம் ஆதீனம்
சீர்வளர்சீர் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் மதுரை ஆதீனம்
சிவஞான பாலய சுவாமிகள் மயிலம் பொம்மபுர ஆதீனம்
காசிவாசி முத்துக்குமார சுவாமித் தம்பிரான் குருமகா சந்நிதானம், திருப்பனந்தாள் காசிமடம்
மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் சூரியனார்கோயில் ஆதீனம்
சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் வேளாக்குறிச்சி ஆதீனம்
நிறைவு விழா
மாநாட்டின் நிறைவு நாளில் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகம் அறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில் 15 முருகனடியார்களின் பெயரில் நீதிபதி பி.வேல்முருகன் விருதுகளை வழங்குகிறார்.