For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

கிண்டிப்புட்டாய்ங்க.. பட்ஜெட் அல்வா கிண்டிபுட்டாய்ங்க!

08:21 PM Jul 16, 2024 IST | admin
கிண்டிப்புட்டாய்ங்க   பட்ஜெட் அல்வா கிண்டிபுட்டாய்ங்க
Advertisement

வ்வொரு முறையும் பட்ஜெட்டுக்கு முன் நிதியமைச்சர் ஒரு பெரிய சட்டியில் அல்வா கிண்டுவார். அது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன?

Advertisement

இந்தியாவில் எந்த ஒரு நல்ல வேலையைச் செய்வதற்கு முன் இனிப்புகளை சாப்பிடுவது நல்லது என்று கருதப்படுகிறது. இதன் காரணமாகவே பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் இந்த அல்வா விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு முறையும் மத்திய பட்ஜெட் தயாராகும் போது நாடாளுமன்றத்தின் வடக்கு பகுதியில் பிரமாண்டமான சட்டியில், இந்திய பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் நிதியமைச்சரே அல்வா கிளறும் பணியைத் தொடங்கி வைப்பார்.

Advertisement

நிதியமைச்சக அதிகாரிகளின் கடின உழைப்பை உணர்த்தும் வகையிலும் பட்ஜெட் ஆவணங்களை அச்சிடும் பணி தொடங்குவதைக் குறிக்கும் வகையிலும் இந்த அல்வா கிண்டும் நிகழ்வு நடக்கிறது. அல்வா தயாரிக்கும் நாள் முதல் பட்ஜெட் தாக்கல் நடைமுறைகள் முடியும் வரை நிதி அமைச்சகத்தின் எந்த அதிகாரியும் அமைச்சக வளாகத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை.

பட்ஜெட் ஆவணங்கள் கசிவு:

1950ஆம் ஆண்டில் பட்ஜெட் தாக்கலுக்கு முன் முக்கிய பட்ஜெட் ஆவணங்கள் கசிந்ததால், அப்போதைய மத்திய நிதியமைச்சர் ஜான் மத்தாய் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்குப் பிறகு அல்வா கிண்டும் நிகழ்வும் அதன் தொடர்ச்சியாக கட்டுப்பாடுகளும் கண்டிப்புடன் கடைபிடிக்கப்படுகிறது. 1980 முதல் நாடாளுமன்றத்தின் நார்த் பிளாக் கட்டடம் பட்ஜெட் ஆவணங்களை அச்சிடுவதற்கான பிரத்யேகமான இடமாக இருந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதால், அனைவரின் பார்வையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது உள்ளது. ஒவ்வொரு தரப்பினரும் தங்களுக்குச் சாதகமான அறிவிப்புகளை பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறார்கள். வருமான வரி விலக்கு, ஜிஎஸ்டி விலக்கு மற்றும் முக்கியத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் ஆகியவை உற்று கவனிக்கப்படும்.

அடிசினல் ரிப்போர்ட்

பொதுவாக அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டு நிதிநிலை அறிக்கை (பொதுவாக பட்ஜெட் என அழைக்கப்படும்), மானியக் கோரிக்கைகள், நிதி மசோதா உட்பட அனைத்து 14 மத்திய பட்ஜெட் ஆவணங்களும் "யூனியன் பட்ஜெட் மொபைல் செயலியில்" தடங்கல் இல்லாமல் கிடைக்கும்.நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எளிய வடிவிலான இந்த டிஜிட்டல் வசதியைப் பயன்படுத்துவதன் மூலம் பட்ஜெட் ஆவணங்களைப் பெறலாம். இது இருமொழிகளில் (ஆங்கிலம் & ஹிந்தி), ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கும். இந்த செயலியை மத்திய பட்ஜெட் இணையதளத்தில் (www.indiabudget.gov.in) பதிவிறக்கம் செய்யலாம்.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement