For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சட்டசபைக்கு கவர்னர் வந்தார், சென்றார்! - ஏன்? முழு விபரம்!

06:35 PM Jan 06, 2025 IST | admin
சட்டசபைக்கு கவர்னர் வந்தார்  சென்றார்    ஏன்  முழு விபரம்
Advertisement

மிழ்நாடு சட்டசபையில் உரையை வாசிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இது குறித்து கவர்னர் மாளிகை வெளியிட்ட விளக்கத்தில், “அரசமைப்புக்கும், தேசிய கீதத்துக்கும் அப்பட்டமான அவமரியாதை செய்பவர்களுடன் துணை நிற்கக்கூடாது என்பதால் கவர்னர் வருத்தத்துடன் அவையில் இருந்து வெளியேறினார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அமைச்சர் சிவசங்கர்,''தமிழக சட்டசபையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடுவதுதான் மரபு. தேசிய கீதத்தை அவமதிக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு எப்போதும் இருந்தது இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட தான் பெரியவர் என்ற மனநிலையில் கவர்னர் செயல்படுகிறார். தமிழக சட்டமன்றத்தின் மரபுகளை மாற்ற கவர்னர் முயற்சிக்கிறார். சட்டசபையில் நடந்த நிகழ்வுகளுக்கு கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும். தேசிய கீதம் பாடும்வரை காத்திருக்காமல், தேசிய கீதத்தை அவமதித்ததே கவர்னர் ஆர்.என்.ரவிதான்."' என்று குற்றம் சாட்டினார்.

Advertisement

தமிழக சட்டசபையில் புத்தாண்டின் முதல் கூட்டம் இன்று கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கியது. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு வருகை தந்தனர். சபாநாயகர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரும் அவைக்கு வருகை தந்தனர்.

Advertisement

கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை சட்டசபை மண்டபத்துக்கு வருகை தந்தார். அவரை சபாநாயகர் மு.அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும் கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை வாசிக்காமலேயே சட்டசபையிலிருந்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். கூட்டம் தொடங்கிய 3 நிமிடத்தில் அங்கிருந்து வெளியேறி காரில் புறப்பட்டு சென்றார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக சட்டசபை இன்று காலை கூடியவுடன் தேசிய கீதம் இசைக்க கவர்னர் வலியுறுத்தியதாகவும், ஆனால் அதனைவிடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதால் கவர்னர் அதிருப்தியடைந்து அவையில் இருந்து வெளியேறியது 2வது முறையாகும். கடந்த ஆண்டு உரையை கவர்னர் ஆர்.என்.ரவி முழுமையாக வாசிக்காமல் முதல் பக்கத்தையும், கடைசி பக்கத்தையும் மட்டும் வாசித்துவிட்டு சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள விள்ளக்கத்தில், “இந்திய அரசியலமைப்பும், தேசிய கீதமும் மீண்டும் தமிழக சட்டசபையில் இன்று அவமதிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் படி தேசிய கீதத்தை மதிப்பது என்பது முதன்மையான அடிப்படையான கடமையாகும். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரை தொடங்கும் முன்னர் தேசிய கீதமே இசைக்கப்படுகிறது. அதேபோல் அனைத்து சட்டசபைகளிலும் தேசிய கீதம் தான் கூட்டத் தொடர் தொடங்கும் போதும், முடியும் போதும் இசைக்கப்படுகிறது.

ஆனால் இன்று கவர்னர் வருகையின்போது அவையில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. கவர்னர் அவைக்கு இதனை சுட்டிக்காட்டி சட்டசபையில் தேசிய கீதத்தை இசைத்து அவை தனது அரசமைப்பு கடமையை செய்யும்படி சபாநாயகருக்கு, முதல்வருக்கும் வலியுறுத்தினார். ஆனால் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இது உற்று கவனிக்கப்பட வேண்டிய விவகாரம். அரசமைப்புக்கும், தேசிய கீதத்துக்கும் அப்பட்டமான அவமரியாதை செய்பவர்களுடன் துணை நிற்கக்கூடாது என்பதால் கவர்னர் வருத்தத்துடன் அவையில் இருந்து வெளியேறினார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டசபையில் கவர்னர் ஆங்கிலத்தில் உரையாற்றிய பிறகு, சபாநாயகர் அப்பாவு தமிழில் அந்த உரையை வாசிப்பது வழக்கம். ஆனால் கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமலே வெளியேறியதால், அவரது உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கவர்னர் இன்று நடந்து கொண்ட விதம் என்பது தமிழ்நாடு மக்களையும், சட்டமன்றத்தையும் அவமதிக்கும் செயல் - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் என்று தெரிவித்துள்ளார். பாரம்பரியமாக சட்டமன்றத்தில் நடைபெறும் நிகழ்வை மாற்றும் முயற்சியில் கவர்னர் நடந்து கொள்கிறார். தேசிய கீதத்தை பாடும் வரை காத்திராமல் அதை அவமதித்ததே கவர்னர்தான். கவர்னர் உரையை வாசித்தால் அரசின் சாதனைகளை அடுக்கடுக்காக பட்டியிலிட வேண்டும் என்பதால் ஒரு நாடகத்தை அரங்கேற்றி சென்றுள்ளார். சட்டமன்ற அவையை அவமதித்த கவர்னர் உடனடியாக மன்னிப்பு வேண்டும்''என்று சிவசங்கர் தெரிவித்துள்ளார்

Tags :
Advertisement