For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

உலக சுகாதார தினம்- உணர்த்தும் உண்மைகள்!

08:17 AM Apr 07, 2024 IST | admin
உலக சுகாதார தினம்  உணர்த்தும் உண்மைகள்
Advertisement
லகின் உள்ள அனைவருக்கும் இயன்றவரை ஆகக் கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே உலக சுகாதார அமைப்பின் நோக்கமாகும். இந்நிறுவனம் உலக பொது சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்பு பணிகளை செய்யும் அதிகாரம் படைத்தது. இந்நிறுவனம் 1948-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ளது. இதன் முக்கிய வேலை திட்டம் தொற்றுநோய்கள் போன்ற நோய் நொடிகளுடன் போராடுதல் மற்றும் உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் பொது சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதாகும். அந்த அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் 7-ம் தேதியை உலக சுகாதார தினமாக கொண்டாடுகின்றனர்.

சுகாதாரம் என்பது உடல் அளவிலும் மனதளவிலும் நலமாக இருப்பதுதான். அதன்படி, தற்பொழுது மக்கள் அனைவரும் நலமாக இருக்கிறார்களா என்றால், பெரும்பாலோரிடம் இருந்து, இல்லை என்றுதான் பதில் வரும்.இயற்கை நாம் வாழ்வதற்கு எல்லா விதமான வளங்களை வழங்குகின்றது, இருந்தும் இயற்கையை, நாம் நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவருகிறோம். இயற்கை நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஐந்து பெரும் சக்திகளில் மாற்றங்கள் இருந்தாலும் இந்த இயற்கை நம்மை எப்போதுமே சம நிலையை தாண்டி நடத்துவதில்லை. பஞ்ச பூதங்கள் என கூறப்படும் நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஐந்தும் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமில்லை. இவையனைத்தும் ஈ,எறும்பு, நாய், பூனை போன்ற அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. இந்த உலகம் பல அற்புதங்கள் நிறைந்தவை, இந்த அழகான சுற்றுச்சூழலை பாதுகாப்பது மனிதர்களுடைய தலையாய கடமை.

Advertisement

நாம் சுற்றுசூலை சரியாக பயன்படுத்திக்கொண்டால், அது நம்மை காக்கும், காக்க தவறினால் சுற்றுச்சூழலை காக்க தவறும்போது சுனாமி, பூமி வெப்பமடைதல், நிலநடுக்கம் போன்ற பல இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாம் சுற்றியுள்ள இயற்கை வளத்தை நல்வழியில் பயன்படுத்தினால் நமக்கு எந்தவித உடல்ரீதியான நோயும் வராது. தவிர, சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக்கொண்டால் மனரீதியான அமைதியும் ஏற்படுகிறது. மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களான கடற்கரை, காடுகள், மலைகள், ஏறி குளம் போன்ற இடங்கள் அதை பயன்படுத்துபவர்களால் அசுத்தமாக்கப்படுகின்றன. இது காற்று மாசுபாடு, மக்கள்தொகை பெருக்கம், கழிவுகளை அகற்றுதல், காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். மனிதனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே சமநிலையை நிலைநாட்டும் நோக்கத்துடன் பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

Advertisement

மனிதனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவதே உலக சுற்றுச்சூழல் தினத்தின் நோக்கமாகும். சுற்றுச்சூழல் பிரச்சினைகளின் இன்றைய சூழ்நிலையில் காலநிலை மாற்றம் மிகப்பெரிய கவலைகளில் ஒன்றாகும். இயற்கை வாழ்விடங்களின் அழிவு, புவி வெப்பமடைதல், அதிக மக்கள் தொகை மற்றும் மாசுபாடு ஆகியவற்றின் வருகையுடன் கடந்த சில தசாப்தங்களாக காலநிலை மாற்றம் அதிகரித்துள்ளது. பூமியின் வெப்பநிலையை அதிகரிக்கும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாகும். சுற்றுச்சூழல் மாற்றங்கள் பனிப்பாறைகள் உருகுதல், பருவநிலை மாற்றங்கள், தொற்றுநோய்கள் போன்ற அழிவுகரமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் ‘இயற்கையை வணங்கு’ என்று நம் முன்னோர் அறிவுறுத்தியதை அறவே புறக்கணித்து விட்டது இன்றைய சமுதாயம். நம்மை அறியாமலேயே, நாம் எதையும் கேட்காமலேயே, நாம் உயிர் வாழ எல்லா நன்மைகளையும் செய்து வருகிறது இயற்கை.

ஆனால், நாம் இயற்கையை நம் காலடியில் போட்டு மிதித்து நசுக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு கீழ்க்கண்டவை சான்று:

நிலம்

விளைநிலங்களை எல்லாம் இன்று துண்டு போட்டு, வீட்டு மனைகளாக்கி வருகின்றனர். மணல் குவாரி, மண் குவாரி, கிரானைட் குவாரிகள் மூலம் பூமியைக் குடைகிறார்கள். தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் என்றுமே மக்காத குப்பையாக மாறி பூமியின் வளத்தை அழிக்கின்றன.

நீர்

தண்ணீரில் கலப்படம், குடிநீரில் சாக்கடை நீர் கலப்பது, ஆற்று நீரில்சாயப்பட்டறை மற்றும் தொழிற்சாலையின் கழிவுநீர் கலப்பது போன்ற செயல்கள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. இவ்வாறு மாசுபட்ட நீரை அருந்துவதால், காலரா, பேதி மற்றும் தோல் நோய்கள் வருகின்றன. மேலும் சாயம் கலந்த நீரை அருந்துவதால், பெண்களிடம் குழந்தைப்பேறின்மை அதிகமாகக் காண முடிகிறது.

நெருப்பு

மண் சட்டி வைத்து விறகு அடுப்பினால் செய்த சமையல் எவ்வளவு ருசியாகவும் உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருந்தது. தற்போது சமைப்பதற்கு காஸ், மண்ணெண்ணெய் மற்றும் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறோம்.

காற்று

காற்று இல்லாமல் ஒருசில மணித்துளிகள்கூட உயிரோடு இருக்க முடியாது. வாகனங்கள் விடும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வரும்புகை, புகைபிடிப்பதனால் உண்டாகும்புகை, இவைபோன்ற பல காரணங்களால் சுத்தமான காற்று அசுத்தமடைகிறது. காற்று மண்டலம் புகை மண்டலமாக மாறுகிறது. இதனால் ஆஸ்துமா, மூச்சுத் திணறல், நுரையீரல் கோளாறுகள் போன்ற நோய்கள் அதிகரிக்கின்றன.

ஆகாயம்

மழை பெய்யவும், தட்பவெப்ப நிலை சீராக இருக்கவும் ஆகாயம் நமக்கு பெரிதும் உதவுகிறது. ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுந்து விட்டதாகக் கூறுகிறார்கள். இதனால் அல்ட்ரா வைலைட் கதிர்கள் நம்மை நேரடியாகத் தாக்குகின்றன. இந்த கதிர்வீச்சினால் தோல் புற்றுநோய்கள் வரும் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆகாயத்தில் நச்சுப் பொருட்கள் கூடக்கூட அமில மழை பெய்யும் அபாயமும் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஒலி

வாகனங்கள், ஒலிபெருக்கிகள், தொழிற்சாலைகளில் இருந்து வரும் சப்தம், இவையெல்லாம் அமைதியை கெடுக்கின்றன. வீட்டுக்குள் சென்றால் தொலைக்காட்சி மற்றும் வானொலிப் பெட்டி மூலமும் இரைச்சல்! ஓயாதஇரைச்சலால் காது மிகவும் பாதிக்கப்படுகிறது. தலைவலி, மன பதற்றம், தூக்கமின்மை இவற்றோடு சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பதும் உண்டு.

இதிலிருந்து எவ்வாறு மீளலாம்?

முடிந்த அளவுக்கு செயற்கை உரங்களைத் தவிர்த்து, இயற்கை உரங்களை உபயோகிக்க வேண்டும். உணவு முறையில் சிறு தானியங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும். புகைப்பிடிப்பதை ஒழிக்க தீவிரமான சட்டம் கொண்டு வரவேண்டும்

காடுகளை அழிப்பதைத் தவிர்த்தல், மழைநீரை சேகரித்தல் மற்றும் வீட்டிலும், வெளியிலும் ஒலி இல்லாசமுதாயத்தை உருவாக்க அனைவரும்இணைந்து பாடுபட வேண்டும். வீடு, பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், அனைத்து பொது இடங்களிலும் மரம் நடுதலைக் கட்டாயமாக்க வேண்டும்.ஆகவே, வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலமும், இயற்கையை நேசிப்பதன்மூலமும் நாம் மட்டுமல்ல, நம்முடைய சந்ததியினரும் நலமுடன் வாழ முடியும்.

டாக்டர்.வி.எஸ். நடராஜன்

Tags :
Advertisement