தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

தேமுதிக அலுவலகம் இனி கேப்டன் ஆலயம் என அழைக்கப்படும்!

05:37 PM Aug 25, 2024 IST | admin
Advertisement

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் நடிகராக வளர்ந்து வந்த காலத்திலேயே தனது ரசிகர் மன்றம் மூலம் மக்களுக்கான நலத் திட்டங்களில் அதிக அளவில் முனைப்புக் காட்டியவர். ஏழை மக்களின் தேவைகளை அறிந்து செயல்பட்ட அவர், தேவையான விஷயங்களுக்கு நிதியுதவி, நன்கொடை அளித்தல், இளைஞர்களுக்கான பல்வேறு முன்னெடுப்புகள், இலவசத் திருமணங்கள், விளையாட்டு அகாடமி என பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தார்.குறிப்பாக, அனைவருக்கும் பசியாற்றும் குணம் கொண்ட அவரது புகழ், என்றென்றும் மக்கள் நினைவில் இருக்கும். அரசியலில் நுழைந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தவர் விஜயகாந்த்.

Advertisement

இந்நிலையில் மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தேமுதிக சார்பில் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டது.சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், கேப்டன் விஜயகாந்த் மறைந்த பின், வரும் முதல் பிறந்தநாள் என்பதால், அவரது நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டி மற்றும் கட்சியின் நிர்வாகிகள் மனமுடைந்து கண்ணீருடன் மரியாதை செலுத்தினர்.

Advertisement

விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பின், அலுவலகத்தில் விஜயகாந்த்-ன் 8 அடி கொண்ட முழு உருவச் சிலையை திறந்து திறந்து வைத்தார். அப்பொழுது சிலையை கட்டி அணைத்து கண்ணீர் விட்டு அழுதார். இதனையடுத்து, கலங்கிய கண்களுடன் மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா, “தேமுதிக தலைமை அலுவலகம், இன்று முதல் ‘கேப்டன் ஆலயம் ‘என்று அழைக்கப்படும்” என்று அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. பெண்கள், அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. பெண்களுக்கான பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்.விஜயகாந்த் இல்லத்தில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு முன்னறிவிப்பின்றி திரும்பப் பெறப்பட்டுள்ளது. காவலர்கள் பாதுகாப்பு ஆளுங்கட்சி இருக்கும் இடங்களில் மட்டும் அமர்த்தி உள்ளனர். ஆனால், தமிழகத்தில் பெண் அரசியல் தலைவர்களுக்கு இருப்பது இல்லை. பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமையாகும். சென்னை சாலிகிராமத்தில் 2 பெண் தலைவர்கள் இருக்கிறோம். விஜயகாந்த் வாழ்வதற்காக ஆசையாக கட்டப்பட்ட இல்லம் வெகுவிரைவில் திறக்கப்படும்.விஜயகாந்த் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படும். புதியதாக யூ டியூப் சேனல் ஒன்றும் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

Tags :
Captain TempleDMDK OfficePremalathavijaykathகேப்ட்ன்தேமுதிகவிஜயகாந்த்
Advertisement
Next Article