தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சென்னை மாநிலத்தில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்!

08:05 AM Jan 23, 2025 IST | admin
Advertisement

ம் நாட்டின் தனிச்சிறப்புமிக்க மாநிலங்களில் தமிழ்நாடு தனித்துவமானது. ஒரு மொழியின் பெயரா அமைந்ததுள்ள முதல்மாநிலம் தமிழ்நாடுதான். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரில் விளங்கிய இந்த நிலப்பகுதியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகள் பேசப்பட்டன; ஆட்சிமொழி என்று சொல்லப்படும், நிர்வாகத்துக்கான மொழியாக ஆங்கிலம் இருந்தது. அதாவது நிர்வாகத்தின் எல்லா மட்டங்கள்லயும் ஆங்கிலம் மட்டும்தான் நடைமுறையி இருந்தது. 1835ஆம் வருடம் மெக்காலே ஆங்கிலவழிக் கல்வி தொடர்பான அறிக்கையை வெளியிட்டார். அதன்பிறகு ஆங்கிலமே அதிகாரப்பூர்வ ஆட்சிமொழியா மாறி விட்டது. மேலும் 1844ஆம் வருடம் ஹார்டிங் பிரபு ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மட்டும் அரசுப் பணியில் முன்னுரிமை பெற முடியும் என்று அறிவித்தார். ஆக.,ஆங்கிலம் படிச்சாதான் அரசு வேலை என்ற நிலை ஏற்பட்டதால், மரபு வழி தமிழ்க் கல்விக்கு முக்கியத்துவம் குறைந்து ஆங்கிலக் கல்விக்கு முக்கியத்துவம் அதிகமானது.இதை அடுத்து அந்த காலத்திலிருந்தே மொழிக்கான போராட்டக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியது. மாயூரம் வேதநாயகம் பிள்ளை, பாரதியார், மறைமலையடிகள், திரு.வி.கலியாணசுந்தரனார், பாரதிதாசன், தேவநேயப்பாவாணர்ன்னு பலரும் இதுகுறித்து பேசினார்கள். போராடினார்கள்.

Advertisement

ஆனால் மக்களுக்காக மக்களால் நடத்தப்படுவதுதானே மக்களாட்சி. மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில்- ஒரு மாநிலத்தில் அல்லது நாட்டில் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழி ஆட்சி மொழியாக அமைதல் வேண்டும். அதன்படி தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழியாகத் தமிழ்மொழி விளங்குகின்றது. அதை ஒட்டி தமிழ் நாட்டில் தமிழ்மொழி தான் ஆட்சி மொழி என்று ஒரு வழியாக 27.12.1956 இல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் 1957 ஆம் ஆண்டு இதே ஜனவரித் திங்கள் 23 ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன்படி தமிழ்நாட்டில் தமிழ்மொழிதான் ஆட்சிமொழி என்று உறுதிபடுத்தப்பட்டது.

Advertisement

1957-57ம் ஆண்டிற்கான தமிழக அரசின் வரவு செலவு திட்டம் முதன் முதலாக தமிழில் வழங்கப்பட்டது. அப்படி ஆட்சிமொழி தகுதி அளிக்கப்பட்டாலும் அதனை நடைமுறைபடுத்துவதில் உள்ள சிக்கல்களை உணர்ந்த அப்போதைய முதல்வர் காமராஜர் அதனை களைவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார். 1957ம் ஆண்டு தமிழ் ஆட்சிமொழி அமல்படுத்தும் குழுவை ஏற்படுத்தினார். இவர்கள் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழ் ஆட்சி மொழி செயலாக்கம் பற்றி ஆய்வு செய்து அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை அறிந்து ஆய்வின் போதே அறிவுறைகளை கூறி குறைகளை களைந்து அகராதியில் இல்லாத சொற்களுக்கு இணையான தமிழ் தேவைப்படும் இடங்களில் உடனுக்குடன் எடுத்துரைத்தனர். மற்றும் தாங்கள் சொல்லுகின்ற அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் எளிய அலுவலகத் தமிழ்ச் சொற்களை கோர்த்து ஆட்சிச் சொல் அகராதியை ஏற்படுத்தினர்.

எல்லாத் துறைகளிலும் உபயோகிக்கக் கூடிய வகையில் ஒவ்வொரு துறைக்கும் தமிழ் ஆட்சி மொழி அகராதியும் அதற்கு இணையான ஆங்கிலச் சொல் அகராதியும் வெளியிடப்பட்டு, அனைத்து அரசுத் துறைகளுக்கும் வழங்கப்பட்டது. அனைத்து அரசுத் துரகளுக்கும் தமிழ்த் தட்டச்சு இயந்திரங்கள் வழங்கப்பட்டதோடு தட்டச்சர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது. எல்லாச் சட்டங்களும் தமிழாக்கம் செய்து வெளியிடுவதற்கான முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிகளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. ஒரு மொழியை தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் தமிழ் மொழி உள்ளது.அதே சமயம் இப்போது தமிழ் பேச்சு மொழியாகக் கூட இல்லை என்பது வேதனை. அரசு அலுவலங்களில் தமிழ் இல்லை , அரசுப் பள்ளிகளில் கூட உருப்படியான தமிழ் இல்லை.

ஹூம் வாழ்க தமிழ் !

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
January 23. KamsrajarTamilTamil Official Languageஆட்சி மொழிதமிழ்
Advertisement
Next Article