தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

விடாமுயற்சி:அப்டேட் நியூஸ் ஷேர் செய்த அஜித்!

10:11 PM Jun 24, 2024 IST | admin
Advertisement

கோலிவுட்டின் பேவரேட் ஹீரோ தல அஜித் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு "துணிவு" என்கின்ற திரைப்படம் வெளியானது அனைவரும் அறிந்ததே. அவருடைய ரசிகர்கள் மத்தியில் அந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தல அஜித் அவர்களின் அடுத்த திரைப்பட அப்டேட்டுக்காக அவர்கள் ரசிகர்களை காத்துக் கொண்டிருந்தனர்.

Advertisement

அப்பொழுது தான் லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில், தல அஜித் நடிக்க உள்ளதாகவும், அந்த படத்தை பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேறிய நிலையில், அப்பட பணிகளை தொடங்கினார் மகிழ் திருமேனி.

Advertisement

அதன் பிறகு தல அஜித் நடித்து வந்த அந்த திரைப்படத்திற்கு "விடாமுயற்சி" என்ற பெயர் வைக்கப்பட்டது. ஆனால் படத்தின் பெயர் வெளியானதோடு, அடுத்தகட்ட பணிகள் தொடராமல் படத்தின் பணிகள் தாமதமாகி வந்த நிலையில், கடந்த ஆண்டு இறுதி முதல் மீண்டும் விடாமுயற்சி பணிகள் வேகமெடுத்ததுள்ளது.

கடந்த ஜூன் 22ம் தேதி அசர்பைஜான் நாட்டுக்கு தல அஜித் அவர்கள் சென்ற நிலையில், திரிஷா மற்றும் அர்ஜுன் உள்ளிட்ட நடிகர்களும் இந்த முறை படபிடிப்பு பணிகளில் கலந்துகொள்ள உள்ளனர். விடாமுயற்சி படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், நடிகர் ஆரவுடன் இணைந்து தல அஜித், புதிய ஸ்டண்ட் காட்சி ஒன்றில் அனாயசமாக நடிக்கும் வீடியோ இப்பொழுது இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

Tags :
AjithAzerbaijan.shootupdatevidaamuyarchiஅஜித்விடாமுயற்சி
Advertisement
Next Article