For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இஸ்ரேலின் போர் அமைச்சரவை(War Cabinet)முடிவுக்கு வந்ததன் பின்னணி!

01:27 PM Jun 18, 2024 IST | admin
இஸ்ரேலின் போர் அமைச்சரவை war cabinet முடிவுக்கு வந்ததன் பின்னணி
Advertisement

மாஸ் விரித்த வலையில் இஸ்ரேல் சிக்கிக் கொண்டது. ஜி-7 மாநாட்டிற்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்னவர் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி! சொல்வதற்கான காரணங்கள்: காஸாவிற்குள் ஆக்ரமிப்பு பயங்கரவாத இஸ்ரேல் ராணுவம் சந்தித்து வரும் தொடர் தோல்விகளே. பிரிட்டனும் அமெரிக்காவும் உலகை மிரட்டப் பயன்படுத்திய மெர்காவா போர் டாங்கிகளால் இதுவரை ஹமாஸை ஒன்றும் செய்ய இயலவில்லை.

Advertisement

மாறாக எந்த ஆயுதத்தாலும் எங்கள் போர் டாங்கிகளை அழிக்கவே முடியாது என்று மார்தட்டிக் கொண்டு காஸாவிற்குள் நுழைந்த ஆயிரத்திரத்திற்கும் அதிகமான மெர்காவா டாங்கிகளை ஹமாஸ் அநாயாசமாக நொறுக்கித் தள்ளியுள்ளது. நொறுக்கித் தள்ளப்பட்ட அந்த டாங்கிகள் காயலான் கடையில் எடைக்கு மட்டுமே போட முடியும் என்கிற பரிதாப நிலையை ஹமாஸ் போராளிகள் ஏகாதிபத்தியங்களுக்கு உருவாக்கியுள்ளனர்.

Advertisement

இந்த நிலையில் தற்போது உள்ள டாங்கிகளை விட அதிக பலம் வாய்ந்த அதிநவீன Fourth Generation மெர்காவா டாங்கிகளை கடந்த வாரம் காஸாவிற்குள் அனுப்பினார்கள். ஒரு டாங்கிக்குள் 15 பேர் அமர்ந்து செல்லக் கூடிய புல்லட் துளைக்காத டாங்கிகள் அவை. அந்த டாங்கிகளையும் ஹமாஸின் யாசின் - 105 ஏவுகனைகள் அநாயாசமாக நொருக்கித் தள்ளியுள்ளன. அதன் காரணமாக இஸ்ரேலும் அமெரிக்காவும் தற்பொழுது நிலைகுழைந்து போயுள்ளன.

அதிக அளவிலான ராணுவத்தினரின் உயிரிழப்பு மற்றும் ஒன்பது மாத காலமாக பொது மக்களை கொன்றதை தவிர போரில் எந்த முன்னேற்றத்தையும் எட்ட முடியாத காரணத்தால் தற்காலிக போர் நிறுத்தம் வேண்டி அமெரிக்கா தற்பொழுது கத்தாரின் கதவுகளுக்கு பின்னால் நின்று கொண்டிருக்கிறது. ஆனால் ஹமாஸ் நிரந்தர போர் நிறுத்தம் எனில் பேச்சு வார்த்தைக்கு தயார் என உறுதியாக அறிவித்துள்ளது.

ஒரு புறம் ஹிஸ்புல்லாக்களுடனான போருக்கு ராணுவத்தை காஸாவிற்குள் இருந்து எடுக்க வேண்டிய கட்டாயம் இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல படைப்பிரிவுகளையும் காஸாவிற்குள்ளிருந்து இஸ்ரேல் திரும்பப் பெற்றதுடன், எந்த வரைமுறையும் இன்றி பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தி வந்த ஆக்ரமிப்பு பயங்கரவாத இஸ்ரேலின் ஆறு பேர் கொண்ட போர் அமைச்சரவை (War Cabinet)முடிவுக்கு வருவதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு லேட்டஸ்ட்டாக அறிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சுதிர்

Advertisement