தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பெரியாரைக் கொண்டாட வைத்த சீமானுக்கு நன்றி!

01:13 PM Jan 28, 2025 IST | admin
Advertisement

பெரியாரை ஏற்பவர்கள் அவரின் அத்தனை சிந்தனைகளையும் ஏற்பதில்லை. ஏற்க அவசியமும் இல்லை. பெரியார் என்றில்லை..!எந்த சிந்தனையாளராக இருந்தாலும் அவரின் அத்தனைக் கருத்துக்களும் ஏற்புடையதாக இருக்காது. அவரவர் பின்னணி மற்றும் அறிவுக்கேற்ப சில கருத்துக்களுடன் முரண்கள் தோன்றும். திருக்குறள் உலகத்திற்கே பொது மறை என்கிறோம். அதில் சிலருக்கு கடவுள் வாழ்த்து, மறு ஜென்மம், மோட்சம் தொடர்பான கருத்துக்களை ஏற்கவியலாது. சிலருக்கு புலால் மறுப்பை ஏற்க முடியாது. சிலருக்கு பெண்களைக் குறைவாய் கருதி ஆணாதிக்கம் எட்டிப் பார்க்கும் குறள்களை ஏற்கவியலாது. ஆனால் ஏற்க முடிகிற கருத்துக்கள் யாவுமே பொக்கிஷங்கள்.

Advertisement

அதைப் போல பெரியாரே ஒரு காலக்கட்டத்தில் கண்டித்ததை ஒரு காலக் கட்டத்தில் கொண்டாடியவர். ( உதாரணங்கள்: தமிழ் மொழி குறித்தான கருத்தும், திருக்குறள் குறித்தான கருத்தும்.)அந்த சிந்தனை மாற்றம் நிகழ்ந்தால்தான் அது அறிவின் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி.தன் கருத்துக்களை பரிசீலனை செய்துபார்த்து ஒத்துவராதவற்றை புறக்கணியுங்கள் என்று உலக வரலாற்றிலேயே எந்தத் தலைவனும் சொன்னதில்லை.சமூக நீதி, பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு இவற்றைப் பற்றியெல்லாம் இவர் மட்டும்தானா பேசினார் என்றால்.. இவர் அதையே தன் வாழ்நாள் முழுதும் 94 வயது வரை உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் பேசினார் என்பதால் சிறப்பு மரியாதை.

Advertisement

நான் பெரியாரிஸ்ட் இல்லை. எந்த இயக்கத்திலும் இல்லை. ஆனால் பெரியாரின் பெரும்பாலான சமூக சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவன். அவரின் சில கருத்துகளின் மீது எனக்கும் விமரிசனங்கள் உண்டு. கல்லைப் பொறுக்கிப் போட்டுவிட்டு அரிசியை மட்டும் சமைப்பது போல நான் நல்லவற்றை மட்டும் பார்க்கிறேன்.ஒரு காலக் கட்டத்தில் பெரியாரைக் கொண்டாடிவிட்டு இப்போது மிகவும் தீவிரமாக எதிர்க்கும் சீமான்  இப்போதுதான் அவரை முழுமையாகப் புரிந்தது என்பது முழுக்க அரசியல்.பெரியார் பற்றிய கருத்துக்களை பெருமைகளை இன்றைய தலைமுறைக்கு பலரும் எடுத்துச் சொல்ல ஒரு வாய்ப்பாக அவரின் விமரிசனங்கள் அமைந்து இருப்பதால்..ஒரு வகையில் அவருக்கு நன்றி.!

பட்டுக்கோட்டை பிரபாகர்

Tags :
evr periyarperiyarseemanசீமான்பெரியார்
Advertisement
Next Article