தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

வாயை வச்சிகிட்டு என்ன பண்றீங்க?- தங்கர்பச்சான் ஆவேசம்!

08:04 PM Jun 18, 2024 IST | admin
Advertisement

டலூர் தொகுதி பாமக.,வுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் பாமக சார்பில் திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் போட்டியிட்டார். ஜூன் 4ல் வெளியான தேர்தல் முடிவுகளில் அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 1.85 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். தேமுதிக.,வின் சிவகொழுந்து 2வது இடத்தையும், பாமக.,வின் தங்கர்பச்சான் 3வது இடத்தையும் பிடித்தனர். தங்கர்பச்சான் வாங்கிய ஓட்டுகள் 2,05,244 (19.9 சதவீதம்). தேர்தலில் தோல்வியடைந்தாலும், தனக்கு ஓட்டளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க கடலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிக்கு தங்கர் பச்சான் சென்றுள்ளார்.

Advertisement

அப்போது பேசிய தங்கர் பச்சான், “என்னை பார்ப்பவர்கள் நீங்கள் எப்படிப்பட்ட படங்களை எடுப்பவர், தயவு செய்து உங்களுக்கு அரசியல் வேண்டாம் என்று சொல்கிறார்கள். அரசியலை தூய்மையாக்கவே நான் வந்துள்ளேன். வெற்றி, தோல்வி எல்லாம் என்னை ஒன்றும் செய்யாது.40 இடங்களிலும் திமுக கூட்டணியை வெற்றிபெறச் செய்துள்ளீர்களே.. இந்த கொண்டாட்டம் எல்லாம் கொஞ்ச காலம்தான். ஒரு மாசம் கழிச்சி பாருங்க..!

Advertisement

உங்களுக்கு (பொதுமக்கள்) தேர்தல் என்பது ஒரு விளையாட்டா இருக்குது. சும்மா நல்ல உடை உடுத்திகிட்டு மேக்கப் போட்டுக்கிட்டு உள்ளே போய் விரலில் மையை பூசிக்கொண்டு வந்து டிவியை பார்த்துவிட்டு இருப்பது தான் தேர்தலா?. தேர்தல் கொண்டாட்டம் எல்லாம் ஒரே நாளில் முடிந்துபோய்விட்டது. தேர்தலை ஒரு நாள் கொண்டாடினீர்கள். அதுக்கு அப்பறம் அவங்க அவங்க வேலையை பார்க்கிறாங்க. நீங்கள் உங்கள் வேலையை பார்க்கிறீங்க.

கடந்த முறை அனுப்பிய 38 பேரும் ஒன்றும் செய்யவில்லை. மறுபடியும் 40 எம்.பி.க்களை தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளீர்கள். இது தமிழ்நாட்டை எங்கு கொண்டு செல்லும்.. கடந்த 5 வருடங்களில் எந்த திட்டத்தையும் மத்திய அரசால் செயல்படுத்த முடியவில்லை. ஏனெனில் தமிழக அரசு முரண்டுபிடிக்கிறது. இனி நாடாளுமன்றத்தில் வெளிநடப்புதான் நடக்கும். அதற்குத்தான் 40 பேரையும் அனுப்பி வச்சிருக்கீங்க” என்றார்.

தொடர்ந்து, “யார் எப்படியோ என்னுடைய மக்களை விட்டுவிட்டு நான் போக முடியாது. மக்களுக்காக பாடுபடக்கூடிய கட்சி பாமக. 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் மக்களுக்குத் தேவையான முக்கியமான மாற்றம் வரும். அந்த மாற்றத்தை நோக்கி நாங்கள் செயல்படுகிறோம். ஆனால், ஆளுங்கட்சியினர் மக்களுக்காக வரமாட்டார்கள். அவர்களுக்கு மணல் திருட்டு, காண்டிராக்ட் எடுப்பது, சாராயம் விற்பது என பல வேலைகள் இருக்கிறது. மக்களாகிய நீங்களும் ஊமையாக இருங்கள். ஒருநாள் போராட்டம் நடத்துங்கள்.. வாய் இருக்கு இல்லே.. வாயை வச்சிகிட்டு என்ன பண்றீங்க? போராட்ட குணம் இல்லாத மக்கள் எதுக்கு உங்களுக்கெல்லாம் ஓட்டு.. ஓட்டை வச்சு என்ன செய்ய போறீங்க.. வாய் இருந்தால் தான் பிழைக்க முடியும். இல்லைணா உங்கள் பிள்ளைங்களும் அந்த சின்னங்களுக்கே ஒட்டு போட்டு அடிமையாகி செத்தே போயிடும்” என்றும்  காட்டமாக பேசினார்.

Tags :
cadallorecandidatepmkthangarbacchanகடலூர்தங்கர்பச்சான்பாமக
Advertisement
Next Article