தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு!

08:09 PM Apr 17, 2024 IST | admin
Advertisement

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் ஃபிலிம்ஸ் இணைந்து சியான் விக்ரமின் பிறந்த நாளில், அவர் நடிப்பில் தயாராகி, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான 'தங்கலான்' திரைப்படத்திலிருந்து முதல் காட்சி துணுக்கை (கிளிம்ப்ஸை) வெளியிட்டது.

Advertisement

இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸும், கே. ஈ. ஞானவேல் ராஜாவிற்கு சொந்தமான முன்னணி தயாரிப்பு மற்றும் திரைப்பட விநியோக நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸுடன் இணைந்து, இந்திய சினிமாவில் தனித்துவமான நடிகரான சியான் விக்ரம் நடிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான பா. ரஞ்சித் இயக்கத்தில், பிரம்மாண்டமான பட்ஜெட்டில் 'தங்கலான்' படத்தினை தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது.‌

Advertisement

படத்தின் வெளியீட்டிற்காக பெருகிவரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் சியான் விக்ரமின் பிறந்த நாளான இன்று, அவரது ரசிகர்களுக்கு படக்குழுவினர் ஒரு சிறப்பான விருந்தை அளித்துள்ளனர். பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 'தங்கலான்' திரைப்படத்தின் சில காட்சிகளை வெளியிட்டுள்ளனர். இதில் சியான் விக்ரம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்காக அவரின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை... பிரமிக்க வைக்கும் மாற்றத்தைக் கண்டு, ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

இந்த காணொளி குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், '' தங்கலான் திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று சாகச கதையாக உருவாகி இருக்கிறது. இப்படத்திற்காக. சியான் விக்ரம் முழுமையான ஈடுபாட்டுடன் கூடிய பங்களிப்பை அளித்திருக்கிறார். ஒட்டுமொத்த படக்குழுவினரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸ்- எங்கள் தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல் ராஜாவுடன் இணைந்திருப்பதால் நான் மிகவும் உற்சாகமாக உள்ளேன். ஞானவேல் ராஜா இந்த திரைப்படத்தை வழங்குகிறார். இந்தத் திரைப்படம் ஜியோ ஸ்டுடியோஸின் வலிமையான சர்வதேச திரைத் தொடர்புகளின் பின்னணியால் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை சென்றடையும் என நம்புகிறேன். விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்திற்காக அவர் மேற்கொண்ட கடின உழைப்பை வெளிப்படுத்தவும், அவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சியை போற்றவும், படத்தின் மீதான கவனத்தை அதிகரிக்கவும், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைக்கவும், இந்த காணொளியை வெளியிடுகிறோம். மேலும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை இந்த காணொளி அதிகரிக்கும் என்று நம்புகிறேன் '' என்றார்.

தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த நட்சத்திர நடிகரான விக்ரம் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவர். ஒவ்வொரு படத்திலும் அவர் ஏற்கும் மாறுபட்ட கதாபாத்திரத்திற்காக கொண்டாடப்படுகிறார். சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதை வென்ற சியான் விக்ரம் - ஏழுமுறை ஃபிலிம்ஃபேர் விருதையும் வென்றிருக்கிறார். அவரது சிறந்த நடிப்பிற்காக தமிழ்நாடு மாநில அரசின் விருதுகளையும் ஐந்து முறை வென்றுள்ளார். அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்பு மற்றும் தொழில் முறையிலான அணுகுமுறைக்காக மிகவும் போற்றப்படும் விக்ரமின் நடிப்பில் 'சேது', 'காசி', 'தில்', 'தூள்', 'ஜெமினி', 'சாமி', 'அந்நியன்', 'பிதாமகன்', 'ஐ', 'ராவணன்:, 'தெய்வத்திருமகள்', 'இரு முகன்', 'கோப்ரா', 'மகான்', 'பொன்னியின் செல்வன் 1& 2' ஆகிய படங்களின் மூலம் சர்வதேச அளவில் பிரபலமானவர்.

'தங்கலான்' படத்தில் சியான் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி கிருஷ்ணன், அன்புதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸின் ஜோதி தேஷ் பாண்டே மற்றும் ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் நிறுவனத்தின் கே. ஈ. ஞானவேல் ராஜா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

1900 களின் முற்பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க கோலார் தங்க வயல்களின் ( கே.ஜி.எஃப்) பின்னணியில் அமைக்கப்பட்ட 'தங்கலான்'- நிஜ வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்து அதன் அழுத்தமான கதையம்சத்துடன் பார்வையாளர்களை கவர தயாராகி உள்ளது. தென்னிந்தியாவில் தங்கத்தை ஆராய்வதில் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அழிக்கப்பட்ட பங்களிப்பை விவரிக்கும் ஒரு வரலாற்று சாகச படைப்பாகும். இப்படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை பெற்றிருக்கிறது. மேலும் இந்த ஆண்டில் தென்னிந்திய சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வெளியீடுகளில் ஒன்றாகவும் திகழ்கிறது.

'தங்கலான்' திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உலக அளவில் திரையரங்குகளில் பிரம்மாண்டமான முறையில் வெளியாகவிருக்கிறது.

Tags :
Birthday Tribute VideoChiyaan VikramG VPrakashKumarKE GnanavelrajaPaRanjithThangalaan
Advertisement
Next Article