For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஜோசப் விஜய் அரசியல்: வசனம் ஓகே, வெற்றி நோ வே!- அதிரடி ரியல் சர்வே ரிப்போர்ட்!

08:58 PM Mar 29, 2025 IST | admin
ஜோசப் விஜய் அரசியல்  வசனம் ஓகே  வெற்றி நோ வே   அதிரடி ரியல் சர்வே ரிப்போர்ட்
Advertisement

கோலிவுட்டாகி போய் விட்ட தமிழ் சினிமாவில் இன்றைக்கும் நிஜமான பொன் முட்டை இடும் முன்னணி நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் (TVK) மூலம் அரசியல் களத்தில் இறங்கி ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. ஆனால், இந்த புது முக அரசியல் நாயகனின் நிஜ தரம் என்ன? என்பதை ஆந்தை ரிப்போர்ட்டர் நியூஸ் சேனல் நடத்திய சத்தியமான , உண்மையான, நிஜமான,பிராமிஸான,ஃபேக்டான,லேட்ட்டஸ்டான சர்வேயின்படி, விஜய்யின் அரசியல் பயணம் சினிமா செட் போலவே ஒரு "நடிப்பு" என்று பொதுமக்கள் கருதுகின்றனர். ஆம்.. இந்த விபரங்களை புள்ளி விவரங்களுடன் பார்க்கலாம்—இது வெறும் வசனமா, இல்லை வெற்றிக்கு வழியா?

Advertisement

இதோ சர்வே முழு முடிவுகள்: விஜய்யின் அரசியல் முகம்

Advertisement

மார்ச் 15 முதல் 25;- 2025 வரை , தமிழகத்தின் 10 மாவட்டங்களில் (சென்னை, மதுரை, கோவை உட்பட) 5,000 வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட சர்வேயில் (குரல்,ஆன் லைன்,ஒன் டூ ஒன்., இத்யாதி வடிவில்) எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் 58% பேர் "விஜய் அரசியலில் சினிமா பாணியில் நடிக்கிறார்" என்று கருதுகின்றனர்.

72% பேர் அவரது பொதுக்கூட்ட வசனங்களை "மாஸ்" என்று பாராட்டினாலும், 65% பேர் "அரசியல் தலைவராக அவரை நம்ப முடியாது" என்று தெரிவித்துள்ளனர்.

இளைஞர்களிடையே (18-30 வயது) ஆதரவு 40% உள்ளது, ஆனால் மூத்த வாக்காளர்களிடையே (45+) இது வெறும் 12% மட்டுமே.

வாக்கு சதவீத கணிப்பு: TVK-வின் பலவீனம்

2026 சட்டமன்றத் தேர்தலில், TVK-வுக்கு 8-11% வாக்கு வங்கி கிடைக்கலாம் என்று ஆந்தை ரிப்போர்ட்டரின் கணிப்பு தெரிவிக்கிறது. ஆனால், திமுக (38%) மற்றும் அதிமுக (32%) ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், இது வெற்றிக்கு வெகுதூரத்தில் இருக்கிரது.

234 தொகுதிகளில், TVK 2-4 இடங்களை மட்டுமே ஆளும், எதிர்கட்சிகளின் மீதான் வெறுப்பால் விஜய்-க்கு வாய்ப்புள்ளதாகவும், அதே சமயம் இது அந்த பச்சமண்ணு விஜய்-க்குக் கூட தெரியவில்லை என்று அரசியல் ஆய்வாளர் ரமேஷ் என்ற வாத்தீ கணித்துள்ளார். மேலும் "விஜய்யின் ரசிகர் பட்டாளம் வாக்கு எந்திரமாக மாறாது," என்றும் அவர் அடித்து கூறுகிறார்.

அதே சமயம் இளையோர் நோட்டாவுக்கு பதில் விஜய்வுக்கு வோட் போட யோசிக்கிறோம் என்றார்கள்

சமூக ஊடகம்: வெறும் சத்தமா?

X தளத்தில், #TVK ட்ரெண்டிங் என்றாலும், 55% பதிவுகள் "மீம்ஸ்" மற்றும் விமர்சனங்களாக உள்ளன. "விஜய் அரசியல் = சினிமா 2.0" என்று 1.2 மில்லியன் பயனர்கள் கிண்டல் செய்துள்ளனர். சென்னையில் நடந்த TVK கூட்டத்தில் 30,000 பேர் கலந்துகொண்டதாக சொன்னாலும், அதில் 60% பேர் "ரசிகர்கள் மட்டுமே, வாக்காளர்கள் அல்ல" என்று சர்வே கூறுகிறது.

விஜய்யின் பலம்: வசனமும் கூட்டமும்

விஜய்யின் பேச்சுகள் மக்களை ஈர்க்கின்றன என்பது உண்மைதான்—உதாரணமாக, "மக்களின் துன்பம் என் துன்பம்" என்ற வாசகம் 85% பேருக்கு பிடித்துள்ளது.வாரிசு அரசியலை சுட்டிக் காட்டுவது 90% வரவேற்கிறார்கள். ஆனால்,''இதை சுட்டிக்காட்டி எல்லாம் ஆட்சிக்கு வரவாய்ப்பில்லை ராசா. வாய்ப்பில்லை'' என்று 91% ஜனங்களும் "சொல்வதை எல்லாம் விஜய் செயல்படுத்துவார் என்று நம்பிக்கை இல்லை" என்று 70% பேர் கருதுகின்றனர். அவரது சினிமா பாணி உடைகள் மற்றும் நடை, 45% இளைஞர்களுக்கு "கூலாக" தெரிந்தாலும், 60% மூத்தவர்களுக்கு "சின்ன புள்ளைத்தனமா இருக்கிறது.. கொஞ்சம் கூட சீரியஸ்/மெச்சூரிட்டி இல்லை" என்று தோன்றுவதாக சொன்னார்கள்.

போட்டியாளர்களின் பதிலடி

திமுகவும் அதிமுகவும் விஜய்யை "அரசியல் அமெச்சூர்" என்று கிண்டல் செய்கின்றன. "வசனம் பேசி ஆட்சி செய்ய முடியாது," என்று திமுக பிரமுகர் சின்ன உதயநிதி கூறினார். அதிமுகவின் 40 ஆண்டு அமைப்பு வலிமையும், திமுகவின் 50% தொகுதி ஆதிக்கமும் விஜய்-யை படுபாதாளத்துக்குள் தள்ளிவிடுவது காலத்தின் கட்டாயமாம். TVK-வின் தொண்டர் பலம் 8 லட்சமாக இருந்தாலும், திமுகவின் 25 லட்சத்துடன் ஒப்பிட முடியாது.அது போல ஏகப்ப்ட்ட தேர்தல்களை களவாரியாக கண்டு வரும் சிங்கிள் மேன் சீமானைக் கூட டச் செய்ய முடியாது என்று 73சதவீதம் சூடம் கொளுத்தி சொன்னார்கள் என்பதுதான் ஹைலைட்

முடிவு: வெற்றி சாத்தியமா?

ஆந்தை ரிப்போர்ட்டர் நியூஸ் சேனல் சர்வேயின்படி, விஜய்யின் அரசியல் செல்வாக்கு 2025-ல் 10% வாக்காளர்களை ஈர்த்தாலும், 2026-ல் இது 7% ஆகக் குறையலாம். "சினிமா மாயையை மட்டுமே மக்கள் நம்ப மாட்டார்கள்" என்று 78% பேர் கருதுகின்றனர். விஜய் ஒரு "கிங்மேக்கராக" ஆகலாம், ஆனால் "கிங்" ஆக முடியாது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தமிழக அரசியல் மேடைக்கு அவரது "என்ட்ரி" பிரமாண்டமாக இருக்கலாம், ஆனால் "கிளைமாக்ஸ்" வெற்றியாக அமைய வாய்ப்பு 7.50% மட்டுமே.

குறிப்பு: இது ஆந்தை ரிப்போர்ட்டர் நியூஸ் சேனலின் சூறாவளி சர்வே அறிக்கை; நிலைமை மாறுபடலாம் என்பதால் மாதம்தோறும் இச்சர்வே எடுக்க ஆந்தையார் குழு முடிவு

சீப் ரிப்போர்ட்டர் நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement