For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இந்திய அணி அபார வெற்றி!

07:47 PM Oct 01, 2024 IST | admin
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி  இந்திய அணி அபார வெற்றி
Advertisement

ந்திய & வங்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த டெஸ்ட் தொடர் இன்று முடிவடைந்துள்ளது. 2 போட்டிகள் அடங்கிய இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை வகித்திருந்தது. இதனை தொடர்ந்து கடந்த செப்-27ம் தேதி இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் தொடங்கியது. முன்னரே மழை பொலிவு ஏற்பட்டதால் ஈரப்பதம் காரணமாக போட்டி 1 மணி நேரம் தாமதமாகவே தொடங்கியது. முதல் நாளில் விளையாடிய இரு அணிகளும் ஒருவருக்கொருவர் சவாலாகவே அமைந்தனர். இதனால், முதல் நாள் முடிவில் அந்த போட்டியானது சமநிலையில் முடிந்தது.

Advertisement

அதைத் தொடர்ந்து 2 மற்றும் 3-ஆம் நாட்களில் தீவிரமான மழைப்பொழிவு ஏற்பட்டதால் அன்றைய நாட்களில் போட்டி நடைபெறவில்லை. அதனைத் தொடர்ந்து நேற்று 4-வது நாள் ஆட்டமானது எந்த ஒரு தடையுமின்றி தொடங்கப்பட்டது. அதில் விட்டதிலிருந்து பேட்டிங் செய்த வங்கதேச அணி இந்திய அணியின் பவுலர்களுக்கு சற்று சவாலாக அமைவார்கள் என்று எதிர்பார்த்த போது சறுக்கினார்கள்.இருப்பினும், வங்கதேச அணி தங்களது முதல் இன்னிங்சில் 233 ரன்கள் குவித்தனர். அதைத் தொடர்ந்து நேற்று நாளே பேட்டிங் களமிறங்கிய இந்திய அணி டி20 போட்டிகளில் விளையாடுவது போல அதிரடி காட்டினார்கள். இதனால் மிக விரைவாக இந்திய அணி முன்னிலை பெற்றது. , அப்படி அதிரடியான ஆட்டத்தில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அதிவேக 100, 150, 200 மற்றும் 250 ரன்கள் எடுத்து சாதனைப் படைத்தது. அதில், ஜெய்வால் (72 ரன்கள்), விராட் கோலி (47 ரன்கள்), கே.எல். ராகுல் (68 ரன்கள்) அடித்து பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தி ஸ்கோரை உச்சம் பெற வைத்தனர். அத்துடன் அதிரடியான ஆட்டத்தால் ஜெய்ஸ்வாலும், விராட் கோலியும் தனித்தனியே சாதனைப் படைத்தனர். இதனால், இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 34.4 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட்டை இழந்து 285 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. அப்போது இந்திய அணி வெறும் 42 ரன்கள் முன்னிலையில் இருந்தது.அதைத் தொடர்ந்து, 2-வது இன்னிங்ஸ்க்கு களமிறங்கிய வங்கதேச அணிக்கு இந்திய அணியின் பவுலிங் மிகச்சவாலாக அமைந்தது. மேலும், போட்டியை டிரா செய்வதற்காக வங்கதேச அணி தட்டி தட்டியே விளையாடியது. இருந்தாலும், நேற்றைய நாளில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Advertisement

நேற்றைய நாள் இப்படி நிறைவடைந்த நிலையில் , இன்றுடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. இந்திய அணியின் பவுலர்களான பும்ரா, அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் வங்கதேச அணியால் தட்டி தட்டி கூட ரன்களை எடுக்க முடியாமல் தவித்தது. இதனால், சொற்பரன்களில் அனைத்து பேட்ஸ்மனும் சுருண்டார்கள்.இதன் காரணமாக வங்கதேச அணி 47 ஓவர்களில் 10 விக்கெட் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணிக்கு 95 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மேலும், இன்றைய நாளின் முதல் ஷெசனில் முடிந்து 2-வது செஷன் தொடங்கிய போது பேட்டிங் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா 8 ரன்களுக்கு அவுட்டானார்.அவரைத் தொடர்ந்து கில் 6 ரன்களுக்கு வெளியேற போட்டி சற்று சூடு பிடிக்கத் தொடங்கியது. ஆனால், களத்தில் இருந்த ஜெய்ஸ்வால் தனது தனிப்பட்ட அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் இணைந்து விராட் கோலி பாலுக்கு சமமான ரன்களையும், தேவையான நேரத்தில் பவுண்டரிகளும் அடித்து தட்டி தட்டி ரன்களைச் சேகரித்தார்.

அதிலும் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால், வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அரை சதம் அடித்திருந்த ஜெய்ஸ்வால் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்த படியாக வந்த பண்ட், விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். விராட் கோலி 27 ரன்களும் எடுத்து வெற்றிக்கு தூணாக அமைந்தனர்.இதனால், இந்திய அணி 7 விக்கெட் விதியாசத்தில் வெற்றி பெற்று இந்த 2-வது டெஸ்ட் போட்டியை வெற்றிப் பெற்றது. மேலும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தி இருக்கிறது. மேலும், வங்கதேச அணியுடனான டி20 தொடர்நது வரும் செப்-6 தேதி தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Tags :
Advertisement