For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பத்திரிக்கை அலுவலகம் மீது தெலுங்கு தேச தொண்டர்கள் தாக்குதல்!

06:27 PM Jul 11, 2024 IST | admin
பத்திரிக்கை அலுவலகம் மீது தெலுங்கு தேச தொண்டர்கள் தாக்குதல்
Advertisement

டெக்கான் குரோனிக்கிள் பத்திரிக்கை விசாகப்பட்டினம் எஃகு ஆலையை தனியார் மயமாக்குவது குறித்து ஒரு கட்டுரையை வெளியிட்டது. இந்த கட்டுரையால் ஆத்திரமடைந்த தெலுங்கு தேசம் கட்சியினர் விசாகப்பட்டினத்தில் உள்ள பத்திரிகை அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். இந்த தாக்குதலுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் புதிய அரசாங்கத்தின் கீழ் ஜனநாயகம் தொடர்ந்து சிதைந்து வருகிறது. இதற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தான் பொறுப்பேற்க வேண்டும் என கோபத்துடன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

இதற்கு பதிலளித்த ஆந்திர மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் நாரா லக்கேஷ் , ஆங்கில நாளிதழ் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் குரலாக செயல்பட்டு தவறான செய்தியை வெளியிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் விசாகப்பட்டினம் உருக்கு தொழிற்சாலையை தனியார் மயமாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்காக பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. தெலுங்கு தேசம் கட்சியினர் பொறுமை காக்க வேண்டும் என்றார்.

இந்த தாக்குதலுக்கு இந்திய பத்திரிகையாளர் சங்கம் மற்றும் பிற பத்திரிகையாளர்கள் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. லோக்சபா தேர்தலுடன் ஆந்திராவில் சட்டசபை தேர்தலும் நடந்தது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டியிடம் இருந்து தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். லோக்சபா தேர்தலிலும் ஜெகன் மோகன் கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். கட்சி அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Tags :
Advertisement