For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

டெலிகிராம் ஆப் நிறுவனர் பாவெல் துரோவ் கைது! .

12:07 PM Aug 25, 2024 IST | admin
டெலிகிராம் ஆப் நிறுவனர் பாவெல் துரோவ் கைது
Advertisement

லகமெங்கும் பலரால் பயன்படுத்தப்படும் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மாதிரியான சமூக ஊடகங்களுக்கு இணையாக வளர்ந்து வருகிறது செய்தி பரிமாற்ற செயலியான டெலிகிராம். குறிப்பாக ரஷியா, உக்ரைன் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் குடியரசுகளில் டெலிகிராம் செல்வாக்கு பெற்றதாக இருக்கிறது. இது அடுத்த ஆண்டில் ஒரு பில்லியன் பயனர்களை உருவாக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது.

Advertisement

இந்த ஆப்-பை ரஷ்யாவில் பிறந்த துரோவ் துபாயை தளமாகக் கொண்ட டெலிகிராம் செயலியை தனது சகோதரருடன் இணைந்து 2013ஆம் ஆண்டு தொடங்கினார்.

Advertisement

இந்நிலையில் டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், பிரான்ஸ் போலீசாரால் நேற்று மாலை கைது செய்யப் பட்டுள்ளார். பிரான்சில் உள்ள போர்கேட் விமான நிலையத்தில் வைத்து காவல்துறை அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். முன்னதாக பாவெல் துரோவ் தனது பிரைவேட் ஜெட்டில் அர்பைஜான் நோக்கி சென்ற நிலையில் பாரீஸ் காவல்துறை கைது செய்துள்ளனர்.

தீவிரவாத இயக்கங்களுக்கு உதவி செய்தது, போதை பொருள் விநியோகம், மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப் பட்டுள்ளதாகவும், துரோவ் தனது தளத்தின் குற்றவியல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கத் தவறியதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக டெலிகிராம் ஆப்பை மேம்படுத்தாமல் பணமோசடி, போதை பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்கள், ஆபாச மற்றும் பாலுணர்வைத் தூண்டும் வகையில் பதிவுகள் வெளியிட உடந்தையாக இருந்தது போன்ற புகார்களினால் பிரான்ஸ் கைது வாரண்ட் பிறப்பித்து இருந்தது.

துரோவ் இன்று நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே துரோவ் கைதுக்கு எலான் மஸ்க் உட்படப் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement