தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

டீன்ஸ்- விமர்சனம்!

10:59 PM Jul 13, 2024 IST | admin
Advertisement

கோலிவுட்டில் புதுப் பாதைப் போட்ட பெரிய மனுஷன் சிறுவர்களை மட்டுமே வைத்து டீன்ஸ் என்ற டைட்டிலில் ஒரு படம் எடுத்திருப்பதும் அதில் பேசியிருக்கும் விசயங்களும் பேய் பிசாசுகளுக்குப் பதிலாக ஒரு புதுமையை வைத்திருப்பதும் வரவேற்புக்குரியவை.வழக்கம் போல் புதிய முயற்சியாக இப்படத்தை கொடுத்து இருக்கும் பார்த்திபன், அதற்கான திரைக்கதையில் ஏனோ அவர் தடுமாறி இருப்பத்தால் பெயில் மார்க் வாங்கி விட்டது

Advertisement

ஸ்கூலில் படிக்கும் சில சிறுவர்கள், வெளிநாடுகளைப் போல் நம் நாட்டிலும் பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் எனத் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். ஒரு கட்டத்தில் ஒரே குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் சிறுவர்கள் சிலர் ஒன்றுக்கூடி பெரியவர்கள் போல் அனைத்து விசயங்கள் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சிறுமி ஒருவர் தனது பாட்டி வசிக்கும் கிராமத்தின் அழகு மற்றும் அங்கு பேய் கூட இருப்பதாக சொல்கிறார். உடனே இளவயசு ஆர்வப்படி அந்த பேயை நேரில் போய் பார்க்கலாம், என்று முடிவு செய்யும் சிறுவர்கள் பெற்றோர்களுக்கு தெரியாமல் அந்த வில்லேஜூக்கு செல்கிறார்கள்.அப்படி போகும் போது சாலையில் நடக்கும் போராட்டத்தால் சிறுவர்கள் செல்லும் பேருந்து தொடர்ந்து பயணிக்க முடியாமல் போக, சிறுவர்கள் காட்டுப்பாதையில் நடந்து செல்கிறார்கள். அப்போது அவர்களில் ஒருவர் திடீரென்று காணாமல் போக, அவரை தேடும் போது ஒவ்வொருவராக மாயமாகிறார்கள்.இதை அடுத்து என்ன நடக்கிறது என்று புரியாமல் பயத்தில் அங்கும் இங்குமாக சிறுவர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி பேயைப் பார்க்கப் போய்ச் சிக்கலில் மாட்டும் சிறுவர்கள், பேயைப் பார்த்தார்களா? அல்லது யாரைப் பார்த்தார்கள் என்பதில் ஓர் ஆச்சரியம் வைத்து கிளைமாக்ஸில் வழக்கம் போல் பார்ட் டூ மிரட்டலுடன் சொல்லி இருப்பதுதான் பார்த்திபனின் டீன்ஸ் ஸ்டோரி .

Advertisement

மிகவும் வித்தியாசமான முயற்சியாக இந்த திரைப்படத்தின் முதல் பார்வை திரையரங்குகளில் வெளியானது உலகிலேயே இதுதான் முதல் முறை, அதுவும் சர்வதேச அளவில் , அதுவும் தணிக்கை சான்றிதழோடு..!அத்துடன் இப்படம் எடுத்த பார்த்திபன் குறித்து முன்பொரு முறை சீனியர் ஜர்னலிஸ்ட் வேணுஜி சொன்னதை இப்போது நினைவு கூர்வது பொருத்தம். அதாவது மனித மூளையின் சராசரி எடை 1370 கிராம் என்றால் இயக்குனர் நடிகர் (இன்னும் என்னென்னவோ...) ராதாகிருஷ்ணன் பார்த்திபனுக்கு மட்டும் 1470 கிராம் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இச்சை மிஞ்சிப்போய் இம்சையாகி விடும் அளவுக்கான அவரது அறிவாற்றலின் சான்றுகள், அவ்வப்போது வெளி வரும் அவரது படங்கள் மட்டும் இல்லாமல் வருடம் தோறும் அவரிடமிருந்து வரும் பரிசுகளும்தான்.இந்த வருடமும் ஒரு சுவர்க் கடிகாரத்தை பரிசளித்திருக்கிறார். அதில் என்ன விசேஷம் என்றால் 12 மணி நேரம் காட்டுவதற்கு பதிலாக 24 மணி நேரம் காட்டுகிறது. ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்று நாம் தெரிந்து வைத்திருப்பது இயல்பான விஷயம்தான் - அதைத்தானே கடிகாரத்திலும் வைத்திருக்கிறார் என்று இயல்பாகக் கடந்து போகிற விஷயம் இல்லை இது.இதில் மணி பார்க்க, இன்னொரு நார்மல் வாட்சைக் கையில் வைத்துக்கொண்டால்தான் முடியும் என்கிற கையறு நிலை.மணிக் கணக்குக்கு இந்த 24 மணி நேரம் நமக்கு ரயில்வே அட்டவணைப்படி புழக்கத்தில் இருக்கும் ஒரு விஷயம்தான். ஆனால் நிமிடம் என்று வந்து விட்டால் அதை இந்த கடிகாரத்தில் பொருத்தி வைப்பது என்பது ஆப்பக் கல்லில் தோசை வார்ப்பது போன்ற அஜால் குஜால் வேலையாக இருக்கிறது.

மேற்படி கடிகார பாணியில் தன் புதுப் படத்தில் சிறுவர், சிறுமியர்களின் வயதுக்கு மீறிய பேச்சையும் , நடவடிக்கைகளையும் எக்ஸ்போஸ் செய்து இருக்கிறார் . குறிப்பாக, குழந்தைத் தனம் நீங்காத பொடிசுக்களுக்குள் உள்ள லவ்வையும், கொஞ்சூண்டு ரொமான்ஸையும், காதல் பாடலையும் கூட வைத்திருக்கிறேன் என்ற சமிஞ்சை அனுப்பி இருந்தார் . இதை எல்லாம் விட, அவர்களை கள் குடிப்பவர்களாக காட்சிப்படுத்தியிருப்பத்தெல்லாம் டூ மச் .முதல் பாதி ஆரம்பிக்கும் பொழுது ஏதோ ஒரு புதுமையான விஷயத்தை இப்படம் கொடுக்கப் போகிறது என்ற உணர்வு பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்தி போக போக அட போங்கப்பூ என்ற உணர்வைக் கொடுத்து ஏமாற்றுவதில் டிஸ்டிங்ஷன் வாங்கி விடுகிறார் .காட்சிகளில் எங்கும் திருப்பங்கள் இல்லாமல் ஒரே பிளாட்டாக நகர்ந்து அதே சமயம் கதையிலும் தெளிவில்லாமல் குழப்பமாக நகர்ந்து பார்ப்பவர்களை சற்றே சோதிக்கவும் வைத்திருக்கிறது.

ஆனாலும் பார்த்திபனின் இந்தப் புதிய முயற்சியையும் கண்டிப்பாக பாராட்டலாம் ஆனால், இந்தப் புதிய முயற்சிக்கு அவர் கொடுத்த முக்கியத்துவத்தை சற்றே திரைக்கதையிலும் கொடுத்திருக்கலாம்.  காட்சிக்கு காட்சி ஒருவர் காணாமல் போவது, அதையறிந்து சுற்றியிருப்பவர்கள் அலறுவது, கத்துவது, அழுவது, மீண்டும் நடப்பது இடையில் காதல் என ரீபீட் காட்சிகளால் தேங்கி நிற்கிறது திரைக்கதை. சீரியஸான காட்சியின்போது வரும் புரபோஸல் போன்றவை செயற்கை எமோனஷனல் திணிப்பு.

கேமராமேன் கௌமிக் ஆரி பங்களிப்பு அபாரம். டி இமான் இசையமைத்திருக்கும் பாடல்கள் எல்லாமே கேட்கும் ரசித்து வண்ணம் உள்ளது.  குறிப்பாக  பிப்பிலி பிலி  பிலி  பாடல் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதில் ஸ்கோர் செய்து விடுகிறது.

மொத்தத்தில் டீன்ஸ் -விடலைத்தனமான சினிமா

மார்க் 3/5

Tags :
‘Teenz’Akira ProductionsbioscopeD. ImmanmovieRadhakrishnan ParthibanreviewTamilடீன்ஸ்பார்திபன்விமர்சனம்
Advertisement
Next Article