தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

குழந்தைகளுக்கு நகைச்சுவையுடன் கழிப்பறை சுகாதாரம் கற்பித்தல்.!

06:39 PM Jan 08, 2024 IST | admin
Advertisement

பெரும்பாலான குழந்தைகளுக்கு குளிக்கும் நேரம் என்பது மிகவும் வேடிக்கையாக இருந்தாலும், கழிப்பறை உபயோகிக்கும் நேரம் வேடிக்கையாக அமைவது அரிதாகுகிறது. உண்மையில், குழந்தைகளின் விஷயத்தில் கழிப்பறை சுகாதாரம் என்பது இன்னும் பல பெற்றோர்கள் போராடும் ஒன்று தான். சரியாக துடைப்பது, கழிப்பறையை ஃப்ளஷ் செய்வது, கைகளை கழுவுவது அல்லது குளியலறையை சுத்தமாக வைத்திருப்பது எப்படி என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தாலும் அது ஏமாற்றம் மற்றும் சண்டைகளுக்கு வழிவகுக்கும் ஒன்றாக இருக்கலாம். அதிலும் மோசமான கழிவறை சுகாதாரம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பல குறிப்பிடத்தக்க வழிகளில் பாதிக்கலாம்: குறிப்பாக வயிற்றுப்போக்கு மற்றும் உடல் வறட்சி அபாயத்தை அதிகரிக்கிறது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கான முக்கிய காரணங்களில் வயிற்றுப்போக்கும் ஒன்றாகும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 525 000 குழந்தைகள் இறக்கின்றனர். கலப்பட உணவு அல்லது அசுத்தமான நீர் கழிவு கூறுகளை உட்கொள்வதால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. பாக்டீரியா, வைரஸ்கள் அல்லது ஒட்டுண்ணிகள் போன்ற நோய்க்கிருமிகளால் கழிவுகள் நிறைந்துள்ளது மற்றும் வயிற்றுப்போக்கு உடல் வறட்சிக்கு வழிவகுக்கிறது, இதற்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால் அதிர்ச்சி, உறுப்பு செயலிழப்பு அல்லது இறப்பு போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும். ஆக, கழிப்பறை சுகாதாரம் மிகவும் அடிப்படையானது மற்றும் மிகவும் எளிமையானது. வலுவாக கட்டாயப்படுத்துதல் மற்றும் அன்பாக கூறுதல் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் பிள்ளைகளுக்கு இந்தப் பழக்கங்களை வளர்த்துக் கொள்ள உதவலாம், இது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சேவை செய்யும்.

Advertisement

இந்நிலையில் , கழிவறை சுகாதாரம் உங்கள் குழந்தைகளின் நம்பிக்கை, சுதந்திரம் மற்றும் பொறுப்பு ஆகியவற்றினை அதிகரிக்கும் அர்த்தமுள்ள செயலில் ஈடுபடுத்த ஒரு சிறந்த வாய்ப்பாகும்.அதுவும் குழந்தைகளுக்கு சிரிப்பது என்பது விருப்பமான ஒன்று.குறிப்பாக வேடிக்கையான மற்றும் கேளிக்கையான விஷயங்களுக்கு அவர்கள் சிரிக்க விரும்புவார்கள். இந்த சிரிப்பு மூலம், கழிப்பறை சுகாதாரம் போன்ற முக்கியமான வாழ்க்கை திறன்களை அவர்கள் கற்றுக்கொள்ள முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? உண்மையை சொல்ல போனால், சலிப்பூட்டும் விரிவுரைகள் அல்லது நினைவூட்டல்களை விட இந்த அணுகுமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Advertisement

கழிப்பறை சுகாதாரத்தை கற்பிக்க நகைச்சுவையை ஏன் பயன்படுத்த வேண்டும்? என்கிறீர்களா? நகைச்சுவை ஒரு விஷயத்தை கற்றுக்கொள்வதற்கும், அதனை நினைவில் வைத்திருப்பதற்கும் உதவும் ஒரு சக்திவாய்ந்த கருவி. ஏனெனில் நகைச்சுவை மூளையின் பல பகுதிகளை செயல்படுத்தி, குறிப்பிட்ட அந்த தலைப்புடன் நேர்மறையான தொடர்புகளை உருவாக்குகிறது. நாம் சிரிக்கும் போது, எண்டோர்பின்கள், டோபமைன் மற்றும் செரோடோனின் ஆகியவற்றை வெளியிடுகிறோம், அவை நம்மை நலமாகவும், நிதானமாகவும், ஊக்கமாகவும் உணரவைக்கும். நமது கற்றல் மற்றும் நினைவாற்றலில் குறுக்கிடக்கூடிய மன அழுத்தம், பதற்றம் மற்றும் அச்சம் ஆகியவற்றை சிரிப்பு குறைக்கிறது. நகைச்சுவை குழந்தைகளை கவனம் செலுத்தவும், தகவலை நினைவில் நிறுத்தவும், கருத்துகளை நன்றாக புரிந்துகொள்ளவும் உதவுகிறது.

சரியான முறையில் கையாண்டால் நகைச்சுவையானது கழிப்பறை சுகாதாரத்தை மிகவும் வேடிக்கையாகவும், சங்கடம் இல்லாததாகவும் மாற்றும், இல்லையெனில் குழந்தைகள் அதை பற்றி பேச வெட்கப்படுவார்கள். நகைச்சுவை, கதைகள், கார்ட்டூன்கள் அல்லது நகைச்சுவையை உள்ளடக்கிய விளையாட்டுகளை பயன்படுத்துவதன் மூலம், குழந்தைகள் நல்ல குளியலறை பழக்கங்களை கற்றுக்கொள்வதற்கும் பயிற்சி செய்வதற்கும் பாதுகாப்பான மற்றும் வசதியான சூழலை உருவாக்கலாம். விபத்துகள், மலச்சிக்கல் அல்லது படுக்கையில் சிறுநீர் கழித்தல் போன்ற சிரமங்கள் அல்லது சவால்களை குழந்தைகள் எளிதில் சமாளிக்க நகைச்சுவை கைகொடுக்கும்.

அது சரி கழிப்பறை சுகாதாரத்தை நகைச்சுவை மூலம் கற்பிப்பது எப்படி?

குழந்தைகளின் வயது, திறன் மற்றும் விருப்பங்களை பொறுத்து, கழிப்பறை சுகாதாரம் குறித்து கற்பிக்க நகைச்சுவையை பல வழிகளில் பயன்படுத்தலாம். கழிப்பறை பயன்பாடு மற்றும் சுகாதாரக் கல்வியில் நகைச்சுவையை எப்படி இணைக்கலாம் என்பதற்கான சில உதாரணங்கள் இங்கே:

நகைச்சுவையான வழிமுறையில் கழிப்பறை சுகாதாரத்தை பற்றி கற்றுக் கொள்ளும் கதாபாத்திரங்கள் கொண்ட வேடிக்கையான புத்தகங்கள் அல்லது வீடியோக்களை பயன்படுத்தவும். உதாரணத்திற்கு டரோ கோமியின் எவரிஒன் பூப்ஸ் புத்தகம்( Everyone Poops ), அயல்சா சதின் கபுசிலியின் தி பாட்டி புக் ( The Potty Book )அல்லது வெர்னர் ஹோல்ஸ்வர்த்தின் தி ஸ்டோரி ஆஃப் தி லிட்டில் மோல் ஹூ நியூ இட் வாஸ் நன் ஆஃப் ஹிஸ் பிஸ்னஸ்( The Story of the Little Mole Who Knew It Was None of His Business ), ஹோப் வெஸ்டர்கார்டின் பாட்டி அனிமல்ஸ் ( Potty Animals )ஆகிய புத்தகங்களை படிக்க செய்யலாம். சீசேம் ஸ்டீர்ட்:பாட்டி டைம்( Sesame Street: Potty Time ) அல்லது டேனியல் டைகர்ஸ் நெய்பர்ஹூட்: பாட்டி டைம் ( Daniel Tiger’s Neighborhood: Potty Time )ஆகியவற்றை காண செய்யலாம்.

கழிப்பறையை சுத்தம் செய்வது, கைகளை கழுவுவது அல்லது சரியாக சுத்தம் செய்வது போன்ற கழிப்பறை சுகாதாரம் சம்பந்தப்பட்ட காட்சிகளை பொம்மைகள் அல்லது கைப்பாவைகளை பயன்படுத்தி செயல்படுத்தி காட்டலாம். பொம்மைகளை கொண்டு வேடிக்கையான சத்தங்களை எழுப்பியோ அல்லது வேடிக்கையான விஷயங்களை சொல்லியோ குழந்தைகளை சிரிக்கவும் செய்து அதே நேரத்தில் கற்றுக் கொள்ளவும் செய்யலாம்.

கழிப்பறை சுகாதாரம் குறித்து குழந்தைகளுக்கு கற்றுத்தர ,அவர்களை ஈர்க்கும் வகையிலான வரிகளை கொண்டு பாடல்களை உருவாக்கலாம். உதாரணமாக ”திஸ் இஸ் தி வே வீ ஃபிளஷ் தி டாய்லெட்”(This is the Way We Flush the Toilet) என்ற பாடலை “ஹியர் வி ஹோ ரவுண்ட் தி மல்பெரி புஷ்”(Here We Go Round the Mulberry Bush) என்ற பாடலின் இசையில் பாடலாம் அல்லது ”வாஷ் யுவர் ஹேண்ட்ஸ்” (Wash Your Hands)என்பதை ”ரோ,ரோ, ரோ யுவர் போட்”(Row, Row, Row Your Boat) என்ற பாடலின் இசையில் பாடலாம். மலம், சிறுநீர் கழித்தல், கழுவுதல் உள்ளிட்ட வார்த்தைகளை எதுகை மோனை முறையில் கொண்டு புதிய பாடல்களை நீங்கள் உருவாக்கலாம்.

விளையாட்டுகள் அல்லது பயிற்சி பட்டறைகள் மூலம் அதாவது பிங்கோ, மெமரி, ட்ரிவியா அல்லது சாரேட்ஸ் ஆகியவற்றை நகைச்சுவையான முறையில் விளையாடலாம். இதற்கு கழிப்பறை சுகாதாரத்தின் பல்வேறு அம்சங்களை காட்டும் வகையில் கழிப்பறைகள், சோப்பு, துண்டுகள், தூய்மை செய்வதற்கான பொருட்கள் ஆகியவை கொண்ட அட்டைகள் அல்லது படங்களை பயன்படுத்தலாம்.கழுவுதல், துடைத்தல் அல்லது தூய்மை படுத்தும் செயல்கள் போன்ற கழிப்பறை சுகாதாரம் தொடர்பான வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களை பயன்படுத்தி விளையாடலாம். சரியான பதிலுக்கு வெகுமதி அல்லது தவறான பதிலுக்கு அபராதம் என ஜாலியான முறையில் விளையாடும் போது மாணவர்கள் மனதில் எளிதாக பதியும்.

கழிப்பறை பற்றி நகைச்சுவையான முறையில் நையாண்டி செய்யலாம் அல்லது விடுகதைகள் போடலாம். உதாரணமாக, “குளியலறைக்கு செல்ல வேண்டிய மீனை நீங்கள் எப்படி அழைப்பீர்கள்? ஒரு பீ-லாஜிம் மீன்!” (“What do you call a fish that needs to go to the bathroom? A pee-lagic fish!")அல்லது ஒரு கழிப்பறை மற்றும் குளிர்சாதனப் பெட்டியை கடக்கும் போது உங்களுக்கு என்ன கிடைக்கும்? கூல் ஃப்ளஷ்”( “What do you get when you cross a toilet and a fridge? A cool flush!")அல்லது கழிப்பறையை பயன்படுத்தும் கரடியை எப்படி அழைப்பீர்கள்? வின்னி தி பூஹ்”( “What do you call a bear that uses the toilet? Winnie the Pooh!”). கழிப்பறை சுகாதாரம் தொடர்பான வார்த்தைகளை பயன்படுத்தி மாணவர்களையே சொந்தமாக புதிர்களை உருவாக்க ஊக்குவிக்கலாம்.

கழிப்பறை சுகாதாரம் குறித்து பள்ளிகளில் கற்றுத்தருவது:

நிச்சயமாக பள்ளிகளில் கற்றுத்தர வேண்டிய முக்கியமான விஷயம் கழிப்பறை சுகாதாரம். நல்வாய்ப்பாக, இந்தியா இந்த திசையில் முன்னேறி வருகிறது. ஸ்வச் பாரத் மிஷனில் உள்ள முதலமைச்சர்களின் துணைக் குழு, வீட்டில் போதிய விழிப்புணர்வை பெற முடியாத குழந்தைகளுக்கான இடைவெளியை குறைக்க பள்ளிகளில் கழிப்பறை சுகாதார பாடத்திட்டத்தை சேர்க்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.இந்தியாவில் பல குடும்பங்கள் தற்போது தான் வீடுகளுக்குள் கழிப்பறைகளை மாற்றி பயன்படுத்தி வருகின்றனர் என்பதால், நிச்சயமாக இது கவனிக்கப்பட வேண்டிய பிரச்னை.

டாக்டர். செந்தில் வஸந்த்

Tags :
alertchildrenhealthhumor.hygieneteachingtoilet
Advertisement
Next Article