எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு பொருளியல் மற்றும் புள்ளியில் துறை என்பது தமிழக மக்கள் வகைப்பாடு, மனித முன்னேற்றம், பொருளாதாரம் மற்றும் பலதரப்பட்ட விடயங்களில் புள்ளியியல் தகவல்களைத் திரட்டி மக்களிடம் பகிரும் நிறுவனம் ஆகும் இதில் காலியாக உள்ள நிரந்தர முழுக் காவலர், தூய்மைப் பணியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிக்கை வெளியாகியுள்ளது.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் டிசம்பர் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பணி
நிரந்தர முழு காவலர் பணியிடம் ஒன்றும், தூய்மைப் பணியாளர் பணியிடம் இரண்டும் அலுவலக உதவியாளர் பணியிடம் ஆறும் நிரப்பப்பட உள்ளன.
ஊதியம்
15,700 முதல் 58,100 வரை.
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது-18. அதிகபட்ச வயது: பட்டியல் பழங்குடியினருக்கு -37, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் - 32. பொது பிரிவினர் -32.
கல்வித் தகுதி,
8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்)
விண்ணப்பிக்கும் முறை:
des.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் வண்ண புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்கும்போது, ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை விண்ணப்பத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும்
ஆதார் கார்டு, இருப்பிட முகவரி, வயது, கல்வித் தகுதி மற்றும் சாதிச் சான்று குறித்த சான்றுகளின் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். நேர்முகத் தேர்வின்போது மேற்கண்ட சான்றுகளின் அசல் ஆவணங்களை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி :
இயக்குநர்,
பொருள் இயல் மற்றும் புள்ளிஇயல் துறை,
டி.எம்.எஸ்.வளாகம்
தேனாம்பேட்டை , சென்னை - 600006,
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்
5.12.2023 மாலை 5.45 மணி வரை ஆகும். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பதாரர்களுக்கு, விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள முகவரிக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் நாள் குறித்த விவரம் தபால் மூலமாக பின்னர் தெரிவிக்கப்படும்.