தமிழ் நாடு தினமின்று!.
மதராஸ் என்றழைக்கப்பட்டு வந்த நிலையில் அறிஞர் அண்ணாவால் 1968 ஆம் ஆண்டு இதே ஜூலை 18ஆம் நாள்தான் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, நம் நாட்டுக்கு தமிழ்நாடு என்று மாற்றிபெயரிடப்பட்ட இந்த நாள்தான் தமிழ்நாடு தினம்.
பெயர் கடந்த 1969 -ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி வைக்கப்பட்டது. அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த அண்ணாதுரை “மதராஸ் ஸ்டேட்” என்ற பெயரில் இருந்து தமிழ்நாடு என்ற பெயரை கொண்டு வந்தார்.
மொழி வழி மாநிலம் அமைய பெரும் பாடு பட்டவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், தோழர் ஜீவா, சிலம்புச் செல்வர், சங்கரலிங்கனார், நேசமணி, சி.பா.ஆதித்தனார் போன்ற தலைவர்கள். அதற்காக பல போராட்டங்கள் நடைபெற்றன. அந்தக் காலத்தில் "மதராஸ் ஸ்டேட்" என்று அழைக்கப்பட்டு வந்தது.மொழிவழி மாநிலங்கள் பிரிந்த போதும், "தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட மறுத்தது
சென்னை மாநிலம் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்ட வேண்டுமெனக் கோரி சங்கரலிங்கனார் 1957ல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கத் துவங்கினார். உண்ணாவிரதம் துவங்கிய 76வது நாள் அவர் உயிரிழந்தார். இதற்குப் பிறகு தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கை மிகவும் தீவிரமடைந்தது. இதற்குப் பிறகு தமிழில் மட்டும் தமிழ்நாடு என்றும் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் குறிப்பிடத் தீர்மானிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு 1961 பிப்ரவரி 24ஆம் தேதி சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது. ஆனால், ஆங்கிலத்திலும் தமிழ்நாடு என்றே அழைக்கப்பட வேண்டுமென தி.மு.க. வலியுறுத்தியது.
இந்நிலையில் அறிஞர் அண்ணா என்ற பெருந்தகை இந்த நாட்டின் முதலமைச்சர் ஆனவுடன்தான் தன் தாய் நாட்டுக்கு தன் அன்னைக்கு 14.1.1969 அன்று தமிழ்நாடு என பெயர் சூட்டி கலைவாணர் அரங்கில் பெயர் பலகை திறந்து வைத்த நாள் இந்த நாள்! (18.7.1967 அன்று சென்னை மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றத் தீர்மானத்தை சட்டமன்றம் நிறைவேற்றியது)
இதனையடுத்து, கடந்த 2021-ஆம் ஆண்டு முதல், ஜூலை 18-ம் தேதி ‘தமிழ்நாடு நாளாக’ கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், அந்த ஆண்டில் இருந்து ஆண்டுதோறும், ஜூலை 18-ஆம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நிலையில், தமிழ்நாடு நாளை ஒட்டி “தமிழ்நாடு வாழ்க” என்று எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மறைந்த முன்னாள் முதலவர் அண்ணாதுரை பேசிய பழைய காணொளியையும், தான் பேசியுள்ள காணொளியையும் இணைத்துள்ளார்.
அதில் பேசியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ” களங்கண்டு, கலை கண்டு, கவின் கொண்ட தமிழ்நாடு வாழ்..உடல்கொண்டு உரங்கொண்டு உயர்வாண்ட தமிழ்நாடு வாழ்க..ஜூலை 18 தமிழ்நாடு நாள் தமிழ்நாடு திருநாள் என்று சொல்லும்போதே நமது உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒரு ஆற்றல் பிறக்கிறது. தமிழ்நாடு வாழ்க…தமிழ்நாடு வாழ்க…தமிழ்நாடு வாழ்க” என பேசியுள்ளார்.