For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதித் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!

01:31 PM Mar 21, 2024 IST | admin
1 முதல் 9 ம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதித் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு
Advertisement

நாடெங்கும் 2024 பாராளுமன்றத் தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஏப்ரல் 19ல் தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கேற்ப பள்ளி, கல்லூரிகளில் ஆண்டு இறுதித் தேர்வுகளும், செமஸ்டர்களும் திட்டமிடப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை முதல்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு முன்கூட்டியே ஏப்.2 முதல் 12 வரை ஆண்டுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடர்ந்து ஏப்ரல் 13 முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Advertisement

AanthaiReporter TN Schools Exam 2024

தற்போது தமிககக் கல்வி வாரியத்தின்கீழ் படிக்கும் மாணவர்களுக்கு 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளையுடன் (மார்ச் 22) தேர்வு முடிகிறது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, முன்கூட்டியே தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில், 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு எப்போது நடைபெறும் என்று கேள்வி எழுந்தது. இதையடுத்து 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு முன்கூட்டியே ஏப்.2 முதல் 12 வரை ஆண்டுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

அதன்படி 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்.2 முதல் 12 வரை ஆண்டுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. குறிப்பாக ஏப்ரல் 2ஆம் தேதி மொழித் தேர்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் 3ஆம் தேதி ஆங்கிலப் பாடத்துக்கான ஆண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. அதேபோல ஏப்ரல் 5ஆம் தேதி கணிதப் பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது.

தொடர்ந்து 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10ஆம் தேதி அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் 12ஆம் தேதி சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதில், ஏப்ரல் 8ஆம் தேதி சிறுபான்மையின மாணவர்களுக்கான மொழிப்பாடத் தேர்வு நடைபெறுகிறது.


6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு விபரம்?

அதேபோல 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்.2 முதல் 12 வரை ஆண்டுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. குறிப்பாக ஏப்ரல் 2ஆம் தேதி மொழித் தேர்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் 3ஆம் தேதி ஆங்கிலப் பாடத்துக்கான ஆண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. அதேபோல ஏப்ரல் 4ஆம் தேதி உடற்கல்வி பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது.

தொடர்ந்து மாணவர்களுக்கு ஏப்ரல் 5ஆம் தேதி கணிதத்துக்கும் ஏப்ரல் 8 விருப்பப் பாடத்துக்கும் தேர்வு நடைபெறுகிறது. ஏப்ரல் 10ஆம் தேதி அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் 12ஆம் தேதி சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது.

இதைத் தொடர்ந்து ஏப்ரல் 13 முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Tags :
Advertisement