For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

தமிழக போலீஸ் டிப்பார்ட்மெண்டில் ஜூனியர் ரிப்போர்ட்டர் ஜாப் ரெடி!

07:24 PM Mar 19, 2024 IST | admin
தமிழக போலீஸ் டிப்பார்ட்மெண்டில் ஜூனியர் ரிப்போர்ட்டர் ஜாப் ரெடி
Advertisement

மிழ்நாடு காவல்துறையில் உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

பணி விவரம்

இளநிலை நிருபர் (Junior Reporter)

Advertisement

Tamil Nadu State Police Subordinate Service- கீழ் உள்ள SBCID அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடத்திற்கு Police Shorthand Bureau வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது இளநிலை நிருபரின் பணி அனைத்து மாவட்டங்கள் நகரங்களுக்கு சென்று களப்பணி மேற்கொள்ள வேண்டும். அரசியல் கட்சிகள் நடத்தும் பொது நிகழ்ச்சிகள், கருத்தரம் உள்ளிட்ட நிகழ்சிக்களை பதிவு செய்து காவல்துறை தலைமை அதிகாரியிடம் அறிக்கை சமர்பிக்க வேண்டும். இந்த வேலைக்கு குறிப்பிட்ட பணி காலம் என்றில்லை. பொது நிகழ்ச்சிகள் என்பதால் இரவும் வேலை இருக்கும். இந்த பணிச் சூழலுக்கு முழு விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்த பணியிடங்கள்

 54

கல்வி மற்றும் பிற தகுதிகள்

12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். தமிழ் மொழிப் பாடத்தை தெரிவு செய்து படித்திருக்க வேண்டும்.

அரசு அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்ப கல்வி( English Shorthand by Higher Grade / Senior Grade (120 w.p.m).) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

தெரிவு செய்யப்படும் முறை

திறனறிவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஊதிய விவரம்

ரூ.36,200 - ரூ.1,14,800 மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.

தேர்வு பாடத்திட்டம்

விண்ணப்பிக்கும் முறை

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் அஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

The Chairman,
Selection Committee,
Police Shorthand Bureau, HQ, 2nd floor,
Old Coastal Security Group Building,
DGP office complex,
Mylapore,
Chennai-4

விண்ணப்பிக்க கடைசி தேதி

 15.04.2024

இது தொடர்பான மேலதிக தகவலுக்கு ஆந்தை வழிகாட்டி/ வேலைவாய்ப்பு-- என்ற லிங்க்-கை க்ளிக் செய்து இணைப்பை காணவும்.

Tags :
Advertisement