தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

FIDE கிராண்ட் ஸ்விஸ் தொடரில் தமிழக வீராங்கனை வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றார்!

01:09 PM Nov 06, 2023 IST | admin
Advertisement

பிரிட்டனில் உள்ள ஐல் ஆஃப் மேன் பகுதியில் ஃபிட் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியானது நடைபெற்றது. அக்டோபர் 23ம் தேதி முதல் நவம்பர் 6ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டி, உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதிச்சுற்றின் ஒரு பகுதியாகும். இப்போட்டியில் அனைத்து கண்டங்களில் இருந்தும் 164 வீரர்கள் பங்கேற்கின்றனர். சுவிஸ் பிரிவின் கீழ் 11 சுற்றுகள் விளையாடப்படும். கிராண்ட் ஸ்விஸ்ஸில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வீரர்கள், 2024 பெண்கள் கேண்டிடேட் தொடருக்குத் தேர்வு பெறுவார்கள். இதில் மகளிர் பிரிவில் இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டரும், 2023 உலக கோப்பை செஸ் தொடரில் இரண்டாம் இடம் பிடித்த ஆர்.பிரக்ஞானந்தாவின் மூத்த சகோதரியான வைஷாலி கலந்து கொண்டு விளையாடினார்.

Advertisement

ஃபிட் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் ஒன்பதாவது சுற்றில் முன்னாள் உலக சாம்பியனான பல்கேரியாவின் அன்டோனெட்டா ஸ்டெபனோவா மற்றும் 10வது சுற்றில் முன்னாள் மகளிர் உலக சாம்பியனான சீனாவின் டான் ஜாங்கியையும் எதிர்கொண்டு வெற்றியடைந்தார்.

Advertisement

இதனால் 8 புள்ளிகளை பெற்று முன்னிலைக்கு வந்த வைஷாலி, கனடாவில் நடைபெற உள்ள மகளிருக்கான 2024 செஸ் கேண்டிடேட் தொடரில் விளையாட தேர்வானார். இதையடுத்து, மகளிர் பிரிவில் 11-வது மற்றும் இறுதி சுற்று நேற்று நடைபெற்றது. இதில் மங்கோலிய வீராங்கனை பத்குயாக் முங்குதுலை தமிழக வீராங்கனை வைஷாலி எதிர்கொண்டார். இந்த போட்டியானது டிராவில் முடிவடைந்தது. ஆனால் ஃபிட் கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரில் 8.5 புள்ளிகளை வைஷாலி பெற்றியிருந்ததால், சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார். தற்போது வைஷாலி 2497.1 லைவ் ரேட்டிங்கைப் பெற்றுள்ளார்.

Tags :
ChessFIDE Grand Swiss SeriesplayerTamil Nadutitlevaishaliwon
Advertisement
Next Article