தமிழக அரசு புதிய 200 பஸ்களில் இவ்ளோ வசதிகளா?
எஸ்இடிசி எனப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 200 பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. விரைவில் இந்த பேருந்துகள் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. புதிய பிஎஸ் 6 தொழில் நுட்பம் கொண்ட இந்த பஸ்களில், பயணிகளுக்கும் பல்வேறு சொகுசு வசதிகள் உள்ளன.
தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தொலை தூரங்களுக்கு பேருந்துகளையே இயக்கி வருகிறது. எஸ்.இ.டிசி எனப்படும் இந்த பேருந்துகள் சென்னையில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, கோவை, சேலம், திண்டுக்கல், திருச்செந்தூர் என தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டும் இன்றி அண்டை மாநிலங்களுக்கும் எஸ்.இ.டி.சி சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை தனியார் ஆம்னி பஸ்களுக்கு இணையாக அரசு பஸ்களும் உள்ளன. அந்த வகையில், புதிதாக பிஎஸ் 6 ரக பேருந்துகளும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளன.
இந்த நிலையில் தான் புதிதாக இயக்கப்பட இருக்கும் பேருந்துகளில் சிலவற்றில் கீழ் தளத்திலும் படுக்கை வசதி உள்ளது. புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்துகளில் பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பேனிக் பட்டன் வசதிகள் உள்ளது. அதேபோல் மின்விசிறி மற்றும் மொபைல் போன் சார்ஜர், ரீடிங்க் லைட் போன்றவை உள்ளன. இதன் மூலம் தொலை தூரம் செல்லும் பயணிகள் தங்கள் செல்போனை சார்ஜ் செய்து கொள்ள முடியும். விரைவில் வழித்தடத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் பேருந்துகள் டெப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படடங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அதேபோல பிஎஸ் 6 தொழில் நுட்பம் கொண்ட இந்த பேருந்துகள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளதாகவும், காருக்கு நிகரான தொழில்நுட்பம் கொண்டதாகவும் புதிய பேருந்துகள் உள்ளதாக ஒட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்.