For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

அரசு பணிகளில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு - தமிழக அரசு முடிவு!

09:27 PM Sep 13, 2021 IST | admin
அரசு பணிகளில் பெண்களுக்கு 40  இட ஒதுக்கீடு   தமிழக அரசு முடிவு
Advertisement

அரசு பணி நியமனங்களில் பெண்களுக்காக தற்போது வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடான 30 சதவிகிதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும், அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடம் தகுதி தேர்வில் கட்டாயமாக்கப்படும் எனவும் மனித வள மேலாண்மைத்துறையின் 2021- 2022ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பான மனித வள மேலாண்மை துறை அறிவிப்பில், தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணி இடங்கள் அனைத்திலும் தமிழ் இளைஞர்களை 100% நியமனம் செய்யும் பொருட்டு தேர்வுகள் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடம் தகுதி தேர்வில் கட்டாயமாக்கப்படும். கொரனோ தோற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள். தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.

Advertisement

அதாவது, வேலை வாய்ப்புகங்கள் வழியாக நிரப்பப்படுகின்றன அரசுப் பணியிடங்களில் இந்த பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கொரொனா பெருந்தொற்று காரணமாக பணியாளர் தெளிவு முகமைகளால் நடத்தப்படும் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானதால் நேரடி நியமன வயது உச்ச வரம்பு 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும். அரசு பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீட்டினை 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும்.

அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் மற்றும் ‘அ’ மற்றும் ‘ஆ’ பிரிவு அடிப்படை பயிற்சி நிலையத்தில் கணினி ஆய்வகத்தின் பதிப்பிக்கும் பொருட்டு என்பது ஒரு லட்ச ரூபாய் செலவில் கணினி அச்சுப்பொறி மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும். முதன்மைப் பயிற்சி நிறுவனமான அண்ணா மேலாண்மை நிலையத்தில் மாநில மத்திய அரசு மற்றும் பொதுப்பணித் துறை நிறுவன அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

பல்வேறு இடங்களிலிருந்து வரும் பயிற்சியாளர்கள் அண்ணா மேலாண்மை நிலையத்தை வந்தடையும் அங்கிருந்து பயிற்சி தொடர்பான தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல இடங்களில் செல்லவும் பயிற்சியாளர்களுக்கு போக்குவரத்து வசதிக்காக 40 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு மினி பேருந்துகள் வாங்கப்படும். அண்ணா மேலாண்மை நிலையத்தில் காட்சி ஊடக பாதை செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக ஒரு படப்பிடிப்புத் தளம் அமைக்கப்படும் அதற்கான அனைத்து உபகரணங்களும் வாங்கப்படும்.

மாநில அரசு பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் முதல் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வரை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு பணியாளர்கள், அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் பணிபுரியும் அரசு விடுதி காப்பாளர்கள் மற்றும் முறையான பயிற்சி பெறாத அனைத்து துறை பணியாளர்களுக்கும் அண்ணா மேலாண்மை நிலையத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் அதற்காக இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

‘அ’ மற்றும் ‘ஆ’ பிரிவு அரசுப் பணியாளர்களில் 53 வயது உட்பட்டவர்களே பிரத்யேக பயிற்சி நடத்தப்படுகிறது. இதற்கு மாறாக 53 வயதை கடந்த அலுவலர்களுக்கு பொதுவான தலைப்புகள், ஆனால் மனித வள மேலாண்மை நேர மேலாண்மை தலைமைப் பண்புகள் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு போன்ற பிரிவுகளில் அவர்களின் வயது மற்றும் பணி முயற்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு வகுப்பறைகளில் நடத்துவதற்கு கூடுதலாக இரண்டு கோடி ரூபாய் அண்ணா மேலாண்மை நிலையத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

அண்ணா மேலாண்மை நிலையத்தில் 2005 ஆம் ஆண்டில் பணியாளர்களுக்காக ஆறுவகை குடியிருப்புகள் கட்டப்பட்டன தற்போது கூடுதல் பணியாளர்களுக்காக அண்ணா மேலாண்மை நிலைய வளாகத்திலேயே 3.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் பணியாளர்கள் குடியிருப்பு அமைக்கப்படும். மாநிலத்தின் முதன்மை பயிற்சி நிறுவனமான அண்ணா மேலாண்மை நிலைத்திருக்க சீரான மின்சாரம் பெறுவது உறுதி செய்ய 500 கிலோ வாட் திறன் கொண்ட ஸ்விட்ச் கியர் அமைப்பு மின்மாற்றிகள் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கத்தின் புலனாய்வுகளை கூர்மைப்படுத்தி மென்பொருள் மற்றும் வல்லுனர்கள் சேவை 1.10 கோடி செலவில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கத் வழக்கு விசாரணைகளில் இணைய வழி வங்கிச் சேவையின் வாயிலான பரிமாற்றம் மற்றும் பறவைகளின் பகுப்பாய்விற்கு மென்பொருள் நிறுவுவது நிபுணத்துவம் பெற்ற பட்டய கணக்கர் இணையதள தடவியல் நிபுணர் ஓய்வு பெற்ற வங்கி அலுவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற வருமானவரி ஆய்வாளர் அலுவலர்கள் ஆகியோரின் சேவைகளும் பயன்படுத்தப்படும்.

Advertisement