தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

டயாலிசிஸ் சிகிச்சைக்கு ஆளாமல் உடலைப் பேணிக் கொள்ளுங்க!

08:59 PM Feb 11, 2025 IST | admin
Advertisement

மிழகத்தில் சிறுநீரக பாதிப்பைச் சந்திப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. 2024-ம் ஆண்டில் மட்டும் தமிழகம் முழுவதும் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் 4.25 லட்சம் ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. டயாலிசிஸ் என்பது ரத்தம் சுத்திகரிக்கும் ஓர் ஆதரவு சிகிச்சை. மனித உடலில் சிறுநீரகம் என்ற உறுப்பு செய்யும் பெரும்பாலான வேலைகளை, வெளியில் இருந்து செய்வதுதான் இந்த சிகிச்சை. சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டு முற்றிய நிலையில் இருப்பவர்களுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்படும்.

Advertisement

பிரபலமான மருத்துவமனைல ஒரு ஷிப்டுக்கு டயாலிஸிஸ் பண்றவங்களோட எண்ணிக்கை கிட்டதட்ட 100 பேர்... ஒரு நாளைக்கு மொத்தம் 4 ஷிப்ட்.. ஒரு மருத்துவ மனையில் ஒரு நாளைக்கு 400 பேர் டயாலிஸிஸ் பண்றாங்க... அப்போ ஒட்டு மொத்தமா எவ்வளவு பேருக்கு கிட்னி பாதிப்பு இருக்கும்...!

Advertisement

ஒரு டயாலிஸிஸ்க்கு 2500 ரூபாய். வாரம் 2 அல்லது 3 தடவை பண்ணனும்... அதுவும் ஆயுள் முழுவதும்.சரி.. டயாலிஸிஸ் பண்ண வருகிறவர்கள் எல்லோரும் வயசானவங்கன்னு நினைச்சீங்களா? அதுவும் இல்லை.. 5 வயது குழந்தைல இருந்து 2 க்கு எக்ஸாம் எழுத போற பையன், கை குழந்தையோட வர்ற தாய் என வயது வித்தியாசம் இல்லாம பாதிக்கப்பட்டு இருக்காங்க..

2 பையன் டயாலிஸிஸ் பண்ணிட்டு எக்ஸாம் எழுத போறான்.. நான் 1000க்கு மேல மார்க் வாங்குவேன்னு சொல்றான். எதனால கிட்னி பெயிலியர்ன்னு அவுங்க அம்மாகிட்ட கேட்டேன்... சிறு வயதுல இருந்தே அதிகமான மாத்திரை (காய்ச்சல், ஆஸ்துமா) கொடுத்து இருப்பதாலாம்..கல்லூரி விரிவுரையாளர் ஒரு பெண் கல்யாணம் ஆகி 5 வயது பையன் இருக்கான். எதனால இந்த பிரச்சினைன்னு காலேஜ்ல பாத்ரூம் நல்லா இருக்காதாம். யூரினை அடக்கிட்டே இருப்பாங்களாம். அதனால கிட்னி பெயிலியர். மூச்சுத் திணறல் வந்து அவங்க படும்பாடு வெளிய சொல்ல முடியாது.. பெரிய கொடுமை...!

இதனிடையே டயாலிசிஸ் என்பது வாழ்நாளுக்கான மரண தண்டனை என்பது போல் பலர் கருதுகின்றனர். டயாலிசிஸ் என்பது மரண தண்டனை அல்ல. சிறுநீரகம் செயலிழந்ததன் விளைவுகளால் பாதிக்கப்படாமல் ஒரு நோயாளி வாழ்க்கையை வாழ நம் அறிவியல் கொடுத்த இரண்டாவது வாய்ப்பு. உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக டயாலிசிஸ் மூலம் வாழ்ந்து வருபவர்கள் இதற்கு சான்று.

டயாலிசிஸ் சிகிச்சையில் இருப்பவர் பயணம் செய்ய முடியாது என்று பலர் கருதுகின்றனர். டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்பவர்கள், வீட்டை விட்டு நீண்ட தூரம் பயணிக்க பயப்பட வேண்டியதில்லை. நாம் எங்கு சென்றாலும், அந்த பகுதியில் நம்பகமான டயாலிசிஸ் மையத்தைக் கண்டறிய சிறிது ஆராய்ந்தால் போதும், அது உங்கள் பிரச்சனையை தீர்க்கும்.

டயாலிசிஸ் சிகிச்சையில் இருப்பவர்கள் சாதாரண உணவை உண்ண முடியாது என்பதும் பொய்யான நம்பிக்கை தான். ஆரோக்கியமான உணவை உட்கொள்ள எந்த தடையும் இல்லை. உணவில் உப்பு, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் குறைந்த அளவில் இருக்க வேண்டும். அதிக புரதங்கள் எடுக்க கூடாது. சிகிச்சைக்கு உகந்த உணவுத் திட்டத்தை மருத்துவர் அல்லது nutritionist-இன் வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள்.

டயாலிசிஸ் செய்யும் போது உடற்பயிற்சி செய்ய முடியாது என்று சிலர் கருதுகின்றனர். மருத்துவரின் வழிகாட்டுதல்களின் படி, டயாலிசிஸ் நோயாளிகள் உடற்பயிற்சி செய்யலாம் என்பதே உண்மை. உடற்பயிற்சி உங்கள் உடலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் (உள்ளே அல்லது வெளியே), பனிச்சறுக்கு, ஏரோபிக் நடனம் போன்ற பயிற்சிகளை தயங்காமல் தேர்வு செய்யலாம். எந்தவொரு உடற்பயிற்சி திட்டத்தை தொடங்குவதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்வது கட்டாயம்.

சரி இப்போ வராம தடுக்க சில விஷயங்களை சொல்லட்டுமா?...

1 எப்பவுமே சிறுநீரையோ, மலத்தையோ அடக்காதீங்க..
2. தாகம் எப்பவெல்லாம் எடுக்குதோ அப்பவெல்லாம் தண்ணீர் குடிங்க..
3. பசித்தால் மட்டும் உணவை எடுத்துக்கோங்க..
4. உணவை உமிழ்நீரோட சேர்த்து நல்லா வாயை மூடி மென்று சாப்பிடுங்க..
5. கடைகளில் விற்கின்ற பாக்கெட் அயோடின் உப்பை பயன்படுத்தாதீங்க.. தெருவுல கடல் உப்பு கொண்டு வருவாங்க.. அதை பயன்படுத்துங்க. அல்லது இந்துப்பை பயன்படுத்துங்க..
7. பிஸ்கட், பாக்கெட்ல அடைச்சது.. கூல்ட்ரிங்ஸ் அறவே தவிர்த்திடுங்க.
8. வசதி இருக்குன்னு கடையில் போய் இனிப்பு பண்டங்கள், நூடுல்ஸ், செயற்கை நிறமூட்டி உள்ள எந்த பொருளையும் வாங்கி சாப்பிடாதீங்க...
10. ரசாயனம் கலக்காத இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே உண்ணுங்க...
11. மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி, பழங்கள் வாங்குவதை அறவே தவிர்த்திடுங்க...
12. வலி மாத்திரைகளை தவிர்த்திடுங்க... தலைவலி காய்ச்சல் வந்தா தாங்கிப்பழகுங்க.. வீட்டு வைத்தியமே பாருங்க.
13. உடல் கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றுங்க..
14. டென்ஷன் இல்லாம, சரி விகித உணவு எடுப்பதன் மூலமே பல்வேறு நோய்களை தவிர்க்க முடியும்.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
dialysiskidneyTake careTreatmentundergoingகிட்னிசிறுநீரகம்டயாலிஸிஸ்
Advertisement
Next Article