தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

டி20 : தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்கு தேர்வு!

12:41 PM Jun 24, 2024 IST | admin
Advertisement

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 பிரிவு போட்டி ஆன்ட்டிக்குவா மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஏற்கனவே தென்னாப்பிரிக்கா அணி அரை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்த போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி களம் இறங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

Advertisement

இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில், ரோஸ்டன் சேஸ் 52 ரன்களும், கைல் மேயர்ஸ் 35 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் சிறப்பாக பந்து வீசிய டப்பிரைஸ் ஷாம்சி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்த ஆட்டம் இழந்து வெளியேறினர். இதனிடையே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சற்று நேரம் தடைபட்டது.பின்னர் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி ஆட்டம் 17 ஓவராக குறைக்கப்பட்டு, தென்னாபிரிக்க அணிக்கு 123 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மீண்டும் போட்டி துவங்கிய போது தென்னாப்பிரிக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இருப்பினும் 16.1 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் என்ற இலக்கை அந்த அணி எட்டியது. இதன் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இந்த தோல்வியை தொடர்ந்து போட்டியை நடத்தும் மேற்கிந்திய தீவுகள் அணி இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

Advertisement

வீழ்ச்சி, எழுச்சி என மாறி மாறி இரண்டு அணிகளும் ஆடிய பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் இதுவரை உலகக்கோப்பையை வெல்லாத தென்னாப்பிரிக்கா அரையிறுதி செல்கிறது.

குறைவான இலக்கை வைத்து இறுதி ஓவர் வரை கொண்டு வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் விடாமுயற்சி பாராட்டத்தக்கது. பேட்டிங்கில் 52 ரன்கள் என்றால் பவுலிங்கிலும் 3 விக்கெட் வீழ்த்தி ஆட்டத்தை கடைசி வரை உயிர்ப்புடன் வைத்திருந்த ரோஸ்டன் சேஸ் உழைப்பு இறுதியில் வலியில் முடிந்தது. கிளாசன், மோட்டி க்கு எதிராக ஆடிய 20 ரன்கள் ஓவரே இப்போட்டியை தென்னாப்பிரிக்கா பக்கம் கொண்டு வந்தது என நினைக்கிறேன். ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் பொறுமையும், நிதானமும், யான்சனின் பினிஷிங்கும் தென்னாப்பிரிக்காவிற்கு வெற்றியைத் தேடி தந்துள்ளது. இப்போட்டித்தொடரில் தோல்வியே சந்திக்காத அணியாக, ஏழு வெற்றிகளுடன் அரையிறுதிக்கு செல்கிறது.

இரண்டு முறை சாம்பியனும், போட்டித்தொடரை நடத்தும் அணியான வெஸ்ட் இண்டீஸ் வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிருப்தியை அளித்திருக்கும்.

ராஜேஷ்

Tags :
qualifiedsemi-finalsSouth Africat20World cupடி 20தென்னாப்பிரிக்கா
Advertisement
Next Article