தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

டி20 உலகக்கோப்பை 2024 அட்டவணை வெளியானது!!

08:55 PM Jan 05, 2024 IST | admin
Advertisement

ரும் 2024 ஆண்டில் ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடக்கவுள்ளது. ஜூன் மாதன் 1ஆம் தேதியே முதல் போட்டி தொடங்கவுள்ளது. டி20உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் அமெரிக்கா - கனடா அணிகள் மோதவுள்ளன. மொத்தமாக 20 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில், ஒவ்வொரு குரூப்பிலும் 5 அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்கவுள்ளது. இந்த குரூப் போட்டிகள் மட்டும் ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூன் 18ஆம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதை அடுத்து ஒவ்வொரு குரூப்பிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும். இந்த சூப்பர் 8 சுற்று போட்டிகளும் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். அதில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும். இந்த சூப்பர் 8 சுற்று போட்டிகள் ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூன் 24ஆம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஜூன் 26 மற்றும் ஜூன் 27 ஆகிய தேதிகள் அரையிறுதி போட்டிகளும், ஜூன் 29ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதில் இந்திய அணி விளையாடும் குரூப் சுற்று போட்டிகள் அனைத்து அமெரிக்காவிலேயே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டி ஜூன் 5ஆம் தேதி நியூயார்க் மைதானத்திலும், இந்தியா - பாகிஸ்தான் போட்டி ஜூன் 9ஆம் தேதி நியூயார்க் மைதானத்திலும் நடத்தப்படவுள்ளது. அதேபோல் ஜூன் 12ஆம் தேதி இந்தியா - அமெரிக்கா அணிகள் விளையாடும் போட்டியும், ஜூன் 15ஆம் தேதி ஃபுளோரிடாவில் நடக்கும் போட்டியில் இந்தியா - கனடா அணிகளும் விளையாடவுள்ளது.

அதேபோல் இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் இரவு 8.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. அதேபோல் இரு அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டிகளுக்கு ரிசர்வ் டே உள்ளது. சூப்பர் 8 சுற்றாக பார்க்கப்படும் இரண்டாம் சுற்றுக்கு ஏ 1, பி 2, சி 1 மற்றும் டி 2 என்றும், ஏ 2, பி 1, சி 2 மற்றும் டி 1 என்றும் அணிகள் பிரிக்கப்படவிள்ளது. அதேபோல் முதல் அரையிறுதி போட்டி கயானா மைதானத்திலும், 2வது அரையிறுதி ட்ரினிடாட் மைதானத்திலும், இறுதிப்போட்டி பார்படாஸ் மைதானத்திலும் நடத்தப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

T20 World Cup 2024 Schedule Released!!

Tags :
Crikett20T20WorldCup2024
Advertisement
Next Article