தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

‘முதல்வர் மருந்தகங்கள்’: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

06:57 PM Feb 24, 2025 IST | admin
Advertisement

மிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (24.2.2025) சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களுக்கு பொது மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்க செய்யும் வகையில் “முதல்வர் மருந்தகம்” என்ற புதிய திட்டம் மூலம் முதல்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 1000 மருந்தகங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.முன்னதாக, முதலமைச்சர் அமைச்சர் அவர்கள் சென்னை, தியாகராய நகர் - பாண்டி பஜாரில், கூட்டுறவுத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தை பார்வையிட்டு, அதன் விவரங்கள் குறித்து கேட்டறிந்து, பொது மக்களுக்கு முதல்வர் மருந்தகத்தின் மூலம் மருந்துகளின் விற்பனையை தொடங்கி வைத்தார்.

Advertisement

முதலமைச்சர் கடந்த 15.08.2024 அன்று நிகழ்த்திய சுதந்திர தினவிழா உரையில், தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களுக்கான மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளதாலும், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கு தொடர்ந்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதாலும் அதிக செலவுகள் ஏற்படுகின்றன.இதற்கு தீர்வாக பொது மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்க செய்யும் வகையில் “முதல்வர் மருந்தகம்” என்ற புதிய திட்டம் மூலம் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் எனவும், இதை சிறப்பாக செயல்படுத்த மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் மானியம் மற்றும் தேவையான கடனுதவி அரசால் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

Advertisement

அந்த அறிவிப்பிற்கிணங்க, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விருப்பமுள்ள B.Pharm / D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களிடமிருந்து 1000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு தொழில் முனைவோருக்கு தலா 3 இலட்சம் ரூபாய் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் மானியமாக உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் மருந்தகத்திற்கு தேவைப்படும் மருந்துகளில் ஜெனிரிக் மருந்துகளை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமும், பிராண்டட் மருந்துகள், சர்ஜிக்கல், நியுட்ராசூட்டிகல்ஸ் மற்றும் இந்திய மருந்துகளை டாம்ப்கால் மற்றும் இம்காப்ஸ் - இடமிருந்து கொள்முதல் செய்து தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலமாகவும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னை, சாலிகிராமத்தில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தால் மத்திய மருந்து கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், கொள்முதல் செய்து வழங்கும் மருந்துகள் அனைத்து மாவட்டங்களிலும் இருப்பு வைக்க ஏதுவாக 38 மாவட்டங்களில் மாவட்ட மருந்து கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட மருந்து கிடங்குகள் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளான குளிர்சாதன வசதி, குளிர்சாதனப்பெட்டி, ரேக்குகள் மற்றும் கணினி ஆகியவையுடன் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகங்களுக்கு தேவைக்கு ஏற்ப மருந்துகள் உடனடியாக அனுப்பும் வகையில் மாவட்ட மருந்து கிடங்குகளில் மூன்று மாதத்திற்கு தேவையான மருந்துகளின் இருப்பு பராமரிக்கப்படுகிறது. மாவட்ட மருந்து கிடங்கிலிருந்து முதல்வர் மருந்தகங்களுக்கு நகர்வு செய்ய தனியே வாகன வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.முதல்வர் மருந்தகத்திற்கு தேவைப்படும் மருந்துகளை கணினி மூலம் ஆன்லைனில் மருந்தாளுநர்/ தொழில்முனைவோர் கேட்பு பட்டியல் ஏற்படுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

மருந்து தேவைப்பட்டியல் பெறப்பட்ட 48 மணி நேரத்தில் மருந்துகளை வாகனங்கள் மூலம் முதல்வர் மருந்தகங்களுக்கு அனுப்பி வைக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகங்களில் பெயர் பலகை பொருத்தி உட்கட்டமைப்பு வசதிகளான குளிர்சாதன வசதி, குளிர்சாதனப்பெட்டி, ரேக்குகள், கணினி மற்றும் பிரிண்டர் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.முதல்வர் மருந்தகங்கள் சிறப்பாக பணியாற்றும் வகையில் மருந்தாளுநர் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு மருந்தக மென்பொருள் பயிற்சி, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் மருந்தகங்கள் பராமரித்தல் குறித்த பயிற்சி, மருந்து ஆய்வாளர்கள் மூலம் ஆவணங்கள் பராமரிப்பு பயிற்சி மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் நடத்தும் மருந்தகங்களுக்கு நேரடியாக அழைத்து சென்று களப்பயிற்சி உட்பட மூன்று கட்டமாக பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

தொழில்முனைவோர் நடத்தும் அனைத்து முதல்வர் மருந்தகங்களுக்கும் 1.50 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜெனிரிக் மருந்துகளை மானியமாகவும், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் 1.50 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பிராண்டட் மருந்துகள், சர்ஜிக்கல், நியுட்ராசூட்டிகல்ஸ் மற்றும் இந்திய மருந்துகள் உட்பட இதர மருந்துகளையும் முதல்கட்டமாக அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜெனிரிக் மருந்துகள் உட்பட அனைத்து வகையான மருந்துகளும் போதுமான அளவில் முதல்வர் மருந்தகங்களில் இருப்பு பராமரிக்கப்படுகிறது.

மாவட்ட மருந்து கிடங்கிலிருந்து ஜெனிரிக் மருந்துகள், பிராண்டட் மருந்துகள், சர்ஜிக்கல், நியுட்ராசூட்டிகல்ஸ் மற்றும் இந்திய மருந்துகள் உள்ளிட்ட மருந்துகள் 1000 முதல்வர் மருந்தகங்களுக்கும் அனுப்பப்பட்டு பொது மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மருந்தாளுநர் மற்றும் தொழில்முனைவோர் சிறப்பாக பணியாற்றிட அவர்களுக்கு தேவைப்படும் கடனுதவி கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் அளிக்கவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Tags :
cmgeneric medicineslaunchesMK StalinMudhalvar Marundhagamssubsidised ratestamilnadu
Advertisement
Next Article