சுழல் 2 - விமர்சனம்!
சுழல் முதல் பாகம் வெப் சீரிஸ் போன 2023இல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி மெகா ஹிட் அடித்தது பெற்றது. புஷ்கர் காயத்ரி வழங்கிய அந்த சீரிஸ் ரசிகனின் நேரத்தை கபளிகரம் பண்ணும் நோக்கில் பஞ்சமில்லாத ஸ்கீர்ன் பிளே, ஃப்ரபெக்டான் ஆக்டர்கள் , அபாரமான கலை இயக்கம், சாம்.சி.எஸ்ஸின் துள்ளல் இசை என ‘வெப் சீரீஸ்’ ரசிகர் களுக்குப் பெரும் தீனியாக அமைந்தது. அத்துடன் தமிழில் பிரம்மாண்டமானதோர் இணையத் தொடர் இல்லையே என்கிற குறையை நீக்கியது. அந்த எதிர்பாரா வெற்றியை தொடர்ந்து புஷ்கர் - காயத்ரி கூட்டணி தற்பொழுது நாயகன் கதிர் மற்றும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டும் முதல் பாகத்திலிருந்து அப்படியே எடுத்துக் கொண்டு இந்த இரண்டாம் பாகத்தில் வைத்து புதியதாக மற்றும் ஒரு மர்டர் மிஸ்டரி கதையை உருவாக்கியிருக்கி மீண்டும் சக்சஸ் ஆக முயன்றிருக்கிறார்கள்.
சுழல் ஃபர்ஸ்ட் பார்ட்டில் ஐஸ்வர்யா ராஜேஷ் குற்றம் செய்தவரை துப்பாக்கியால் சுடுவதுடன் சீரிஸ் முடியும். இந்த செகண்ட் பார்ட்டில் அந்த கொலை குற்றத்துக்காக ஜெயிலில் ஐஸ்வர்யா ராஜேஷ் இருப்பது போன்று ஆரம்பிக்கிறது. இந்த வழக்கை பொதுநல வழக்கறிஞர் லால் கையில் எடுத்து ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நியாயம் கிடைக்க போராடுகிறார். போலீஸ் அதிகாரியான கதிரும் அவருடன் துணை நிற்கிறார். இது இப்படி இருக்க மர்மமான முறையில் அந்த வழக்கறிஞர் லால் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.மேலும் அந்த கொலையை நாங்கள்தான் செய்தோம் என எட்டு பெண்கள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைகின்றனர். இதனால் இந்த கொலை கேஸ் மிகவும் முக்கியமான வழக்காக மாறுகிறது. இதை துப்பு துலக்க சீரிஸ் லா படி கதிர் நியமிக்கப்படுகிறார். அவர் இந்த கொலையை செய்தது யார்? இந்த கொலைக்கான மோட்டிவ் என்ன? இது கொலையா அல்லது தற்கொலையா? போன்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடிப்பதே சூழல் 2 கதையாகக் கோர்க்கப்பட்டுள்ளது.

உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழையாமை தொடங்கி அதனால் துளிர்க்கும் ஈகோ, கடுங்கோபம் என போலீஸ் கேரக்டரில் இந்த செகண்ட் சீசனிலும் ஸ்கோர் செய்கிறார் கதிர். குற்றவுணர்ச்சியின் சுழலில் சிக்கித் தவிப்பவராக மனதில் பதியும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். சமூகத்தின் அக்கறை கொண்டு உழைப்பவராகவும், துணிந்து பல செயல்களை நிகழ்த்துபவராக மீண்டும் நடிப்பில் ஆழத்தைத் தொட்டிருக்கிறார் லால். சக்கரையுடன் பயணிக்கும் காவல் அதிகாரியாக மூர்த்தி கதாபாத்திரத்தில் சரவணன் சுனாமியில் நீந்தும் திமிங்கிலமாக அதிரடி காட்டியிருக்கிறார். சக்கரையுடனான ஈகோ சண்டை, அதனை மறந்து அடுத்த நிமிடமே எதுவுமே நடக்காதது போல வழக்கிற்குள் திரும்ப வருவது என தன்னால் முடிந்த அளவு எதார்த்தமாக பேலன்ஸ் செய்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் சிறையில் அடைபட்ட கைதியாக வருகிறார். இவரது கதாபாத்திரம் கிட்டத்தட்ட ஐந்து எபிசோடு வரை சைலண்டாகவே செல்கிறது. இவருக்கு இதில் வாய்ப்பு குறைவு போல் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது ஆறாவது எபிசோடு முதல் ஐஸ்வர்யாவின் நடிப்பு அதகளம் தொடங்குகிறது.லாலை கொன்றதாக எட்டு இளம்பெண்கள் விசாரணை கைதிகளாக சிறையில் அடைக்கப்படுவதும் அவர்களை ஐஸ்வர்யா ராஜேஷ் கண்காணித்து போலீசுக்கு அதாவது தனது காதலர் கதிருக்கு துப்பு கொடுப்பதற்காக செய்யும் சி ஐ டி தனமான வேலைகள் காட்சிகளை விறுவிறுப்பாக்குகிறது.
மொத்தம் எட்டு எபிசோடுகளாக இழுத்துக் கொண்டே இதில் ஒவ்வொரு எபிசோடுகளின் முடிவிலும் ஒவ்வொரு டிவிஸ்ட்களை வைத்து அடுத்தடுத்த எபிசோடுகளை எதிர்பார்க்கும் டெம்ட்டேஷனை உருவாக்கி அடுத்தடுத்து கொலையாளி யார் என்பதை விறுவிறுப்பாக வெளிச்சத்திற்கு கொண்டு வர ட்ரை பண்ணி பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார்கள். ஆனாலும் ஃபர்ஸ்ட் பார்ட்டில் இருந்த விறுவிறுப்பும் பரபரப்பும் இந்த இரண்டாம் பாகத்தில் நிறையவே மிஸ்ஸிங். கதை ஆரம்பித்து போகப்போக ஆமை வேகத்தில் நகர்ந்து 4ல் இருந்து 5 மணி நேரம் சீரிஸை இழுக்க வேண்டுமே என்பது போல் காட்சிகளை உருவாக்கி மெதுவாக அதை நகர்த்துவது கொட்டாவி வரவழைப்பதை தவிர்க்க முடியவில்லை.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்க வேண்டும், அதன் கதைக்களத்தில் முதல் பாகத்தின் கருப்பொருள் இருக்க வேண்டும், ஆனால், முதல் பாகத்தின் சாயல் இல்லாமல், அதே சமயம் பலவித கதாபாத்திரங்கள் மற்றும் திருப்பங்களுடன் பயணிக்கும் தொடர் பார்வையாளர்களுக்கு எந்தவித குழப்பமும் இன்றி புரிய வேண்டும், என்று பல சவால்களில் தேறி விட்டார்கள் எனினும் இன்னும் கொஞ்சம் அக்கறைக் காட்டி இருக்கலாம்!
மார்க் 3.25/5