தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள ஜம்மு - காஷ்மீர் தீர்ப்பு: மாநிலங்களின் உரிமைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. - இந்து நாளிதழ்

09:44 PM Dec 12, 2023 IST | admin
Advertisement

ரசியலமைப்பின் 370வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்ததை உறுதிசெய்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு நீதித்துறை அடிபணிந்திருப்பதைக் காட்டுவதோடு மட்டுமல்ல, கூட்டாட்சி, ஜனநாயக நெறிமுறைகள், சட்ட செயல்முறைகளின் புனிதத்தன்மை குறித்த நீதிமன்றத்தின் முந்தைய நிலைப்பாடுகளிலிருந்து பின்வாங்குவதையே குறிக்கிறது.இது சந்தேகத்திற்கு இடமின்றி ஆளும் பா.ஜ.கவுக்கு அரசியல்ரீதியிலான ஊக்கமாகவும், ஆகஸ்ட் 2019ல் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி, அதை மற்ற மாநிலங்களுக்கு இணையாக கொண்டு வருவதற்கான அதன் துணிச்சலான நடவடிக்கைக்கான அங்கீகாரமாகவும் இருக்கும். ஆனால் கூட்டாட்சிக் கொள்கைகளை சிதைப்பதை நியாயப்படுத்தும், வரலாற்றுப் பின்னணியைப் புரிந்து கொள்ளத்தவறிய, அரசியலமைப்பு நடைமுறையின் மதிப்பைக் குறைக்கும் தீர்ப்பாகவும் இது இருக்கிறது.

Advertisement

ஒரு மாநிலம் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் இருக்கும்போது நாடாளுமன்றம், சட்டமியற்றும் மன்றமாகவும் வேறு எதுவாகவும் செயல்பட முடியும் என்பதோடு, மாற்ற முடியாத விளைவுகளைக் கொண்ட முடிவுகளைக்கூட சட்டமன்றத்தின் சார்பாக எடுக்க முடியும் என்கிற மனசாட்சிக்கு ஒப்பாத ஒரு முடிவுக்கு நீதிமன்றம் வந்திருப்பதுதான் கூட்டாட்சித் தத்துவங்களின் மீதான பெரும் தாக்குதலாக இருக்கிறது.

இந்த ஆபத்தான விளக்கம் நீதிமன்றத்தால் வரையறுக்கப்பட்ட அரசியலமைப்பின் ஒரு அடிப்படை அம்சத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கு நெருக்கமாக வருகிறது என்பதோடு மாநிலங்களின் உரிமைகளில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். காரணம், இது தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு இல்லாத நிலையில் பலவிதமான எதிரான, மாற்ற முடியாத நடவடிக்கைகளை அனுமதிப்பதாக இருக்கிறது. அரசியல் சாசன அமர்வு தனது நிலைப்பாட்டை அங்கீகரித்து, மனுதாரர்களின் வலுவான வாதங்களை நிராகரித்திருக்கும் நிலையில், அரசுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் மகிழ்வதற்கான காரணங்கள் நிறையவே இருக்கின்றன. அதிலும் ஜம்மு - காஷ்மீரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு பிரதிநிதியையும் ஈடுபடுத்த வேண்டிய அவசியமின்றி சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்காக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதன் மூலம் அரசு உள்நோக்கத்துடன் செயல்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்க வேண்டும் என்ற ஆளும் பா.ஜ.கவின் நீண்டகால லட்சியத்தை செயல்படுத்துவதற்கு அரசு ஒரு சிக்கலான செயல்முறையை கையாண்டிருந்தது. மாநிலத்தை பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக தரம் குறைத்தது. முழு அரசியலமைப்புச் சட்டமும் ஜம்மு - காஷ்மீருக்கு பொருந்தும் வகையில் ஆகஸ்ட் 5, 2019ஆம் தேதி வெளியிடப்பட்ட ஒரு அரசியலமைப்பு ஆணையுடன் இது தொடங்கியது.

பிறகு, இப்போது கலைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு சபைக்கு பதிலாக மாநில சட்டமன்றமே 370வது பிரிவை ரத்துசெய்ய பரிந்துரைக்கும் வகையில் 370 (3)ல் சில வரையறைகளை மாற்றியது. இறுதியில், ஆகஸ்ட் 5ஆம் தேதி உத்தரவின் சில பகுதிகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. காரணம், அவை நடைமுறையில் 370 வது பிரிவை திருத்துவதற்கு சமமானது என்றும் அதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் சொன்னது. ஆனால் 370வது பிரிவு பற்றிய ஆகஸ்ட் 6 அன்று வெளியான அறிவிக்கை செல்லுபடியாகும் என்று

நீதிமன்றம் சொன்னதோடு, இந்த நடவடிக்கையின் செல்லுபடிதன்மைக்கு வலுவூட்டும் முந்தைய நாள் அறிவிக்கையின் சட்ட அடிப்படைகள் எதுவுமின்றி ஜனாதிபதி அதைச் செய்ய அதிகாரமிருப்பவராக முன்வைத்ததும் விசித்திரமான திருப்பமாக இருந்தது. அதாவது மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை எந்த பரிந்துரையும் இல்லாமல் குடியரசுத் தலைவர் நீக்க முடியும். 1957ல் அரசியலமைப்பு சபை கலைக்கப்பட்ட பிறகு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பயன்பாடு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதாகவும், சிறப்பு அந்தஸ்தை நீக்குவது மாநிலத்தை இந்தியாவுடன் இணைப்பது தொடர்பான செயல்முறையின் உச்சக்கட்டமே தவிர வேறில்லை என்றும் உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.

இந்த வாதம் ஆட்சேபனைக்குரியது இல்லை என்று கருதப்பட்டாலும், அரசியலமைப்பு சபை இல்லாத நிலையில், ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் இறையாண்மைக்கு அடிபணிவதைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, எஞ்சியிருக்கும் அதன் தன்னாட்சியை ஒன்றுமில்லாமல் செய்யும் அரசின் தங்குதடையற்ற நோக்கம், கூட்டாட்சி மற்றும் ஜனநாயகத்தின் அனைத்து விதிகளுக்கும் எதிரானதாகவே இருக்கிறது.

Tags :
Article 370 of the ConstitutionkasmireSC
Advertisement
Next Article