தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட உத்தரவை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட் - முதலமைச்சர் வரவேற்பு!

09:09 PM Feb 29, 2024 IST | admin
Advertisement

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட உத்தரவை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய மக்களுக்கும், நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் “தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நமது அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய மக்களுக்கும், நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது! எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களைக் காப்போம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

முத்து நகரமான தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் தெரிவில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி சென்னை ஐகோர்ட் 2020-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட் மேல் மேல்முறையீடு செய்தது.

Advertisement

இந்த மேல் மேல்முறையீடு வழக்கின் விசாரணை இன்று நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, மக்கள் பயன்படுத்தும் நீரிலும் ஸ்டெர்லைட் கழிவுகள் கலந்துள்ளது உறுதியாகியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை 20 ஆண்டுகளாக உரிய அனுமதி மற்றும் உரிமங்களை புதுப்பிக்காமல் செயல்பட்டது. 9 ஆண்டுகளாக உரிய அனுமதியின்றி கழிவுகளை கொட்டி வைத்ததாக ஸ்டெர்லைட் ஆலை மீது தமிழ்நாடு அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட் வேதாந்தா நிறுவனத்தின் மேல் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில், "மீண்டும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை விதி மீறலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டதால் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது. தொடர் விதிமீறல், பாதிப்புகளை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே, நாட்டின் வளர்ச்சிக்கு ஸ்டெர்லைட் பங்களிப்பு செய்தாலும், மக்களின் நல்வாழ்வு அதிக முக்கியத்துவம் வேண்டும். உள்ளூர் மக்கள் நலனை பாதுகாப்பதில் மாநில அரசுக்கு பொறுப்பு அதிகம் உள்ளது.ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சென்னை ஐகோர்ட் விசாரித்ததில் வரம்புமீறல் இருந்ததாக கருதவில்லை. ஐகோர்ட் முடிவில் தலையிட விரும்பவில்லை. ஸ்டெர்லைட் வழக்கில் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது” என்று சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது. இதை வரவேற்றே முதல்வர் செய்தி வெளியிட்டுள்ளார்

Advertisement
Next Article