For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சுப்ரீம் கோர்ட் லீடிங் & பேமஸ் லாயர் பாலி நாரிமன் காலமானார்!

01:44 PM Feb 21, 2024 IST | admin
சுப்ரீம் கோர்ட் லீடிங்   பேமஸ் லாயர் பாலி நாரிமன் காலமானார்
Advertisement

சுப்ரீம் கோர்ட்டின் மிகப் பிரபலமான வழக்கறிஞர்களில் ஒருவரும், அரசியல் சாசன சட்ட நிபுணரும், முன்னாள் கூடுதல் சொலிசிடர் ஜெனரலுமான பாலி எஸ்.நாரிமன் இன்று (பிப்.21) அதிகாலை 12.45 மணியளாவில் காலமானார். அவருக்கு வயது 95. 1929 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி பிறந்த அவர் சட்டம் பயின்று சிறந்த வழக்கறிஞராகத் திகழ்ந்தார். இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக அவர் இன்று அதிகாலை இயற்கை எய்தினார். அவருக்கு சட்டத்துறை சார்ந்தோரும், தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் இன்று நீதிமன்ற நடவடிக்கை தொடங்கியதுமே நாரிமன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். நேற்றிரவு வரை அவர் அரசியல் சாசன அமர்வு ஒன்றுக்கு நாரிமன் தனது கருத்துகளைப் பதிவு செய்து கொண்டிருந்தார் என்று மூத்த வழக்கறிஞர் ஒருவர் நினைவு கூர்ந்தார். நாரிமனின் மகன் ரோஹின்டன் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

🦉1929ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி ரங்கூனில் பிறந்தவர் பாலி நாரிமன். இவரது ஆரம்ப கல்வி அங்கும், சிம்லாவிலும் கற்றார்.

பின்னர் பொருளாதாரம் மற்றும் வரலாற்றில் மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றார்.

1950ம் ஆண்டு மும்பை அரசு சட்டக்கல்லூரியில் சட்டம் படித்தார். வழக்கறிஞர்கள் தேர்வில் முதலிடம் பெற்றதற்காக தங்கப்பதக்கமும், பரிசும் பெற்றார்.

முன்னதாக பம்பாய் ஐகோர்ட்டில் 22 ஆண்டுகள் வழக்கறிஞராக இருந்தார். 1961ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இவர் 1999ம் ஆண்டு குடியரசுத்தலைவரால் ராஜ்யசபா எம்பியாக நியமிக்கப்பட்டார். ஆறு ஆண்டுகள் அங்கு இருந்தார்.

1970களில் இவர் கூடுதல் சொலிசிடர் ஜெனரலாகவும் இருந்தார்.

ஒரு வழக்கறிஞராக சிறுபான்மையினர் மற்றும் மனித உரிமைக்காக குரல் கொடுத்தார்.

இவர் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நிறைய தலைமை பொறுப்பு வகித்துள்ளார்.

இந்திய பார் கவுன்சிலின் தலைவராக இருந்துள்ளார். ஆசிய, பசிபிக் சட்ட சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார்.

மனித உரிமை நிரந்தர குழுவின் நிறுவன தலைவராக இருந்தார்.

சர்வதேச சட்ட கமிஷசனின் நிர்வாக அதிகாரியாக இருந்தார்.

இதுபோல் பல்வேறு உயர் பதவிகளில் இருந்துள்ளார்.

இவர் பார் கவுன்சிலுக்கு நியமிக்கப்பட்டபோது, பல்வேறு கமிட்டிகளில் பணியாற்றினார். விதிகள் கமிட்டி, அறம் கமிட்டி, வெளியுறவுத்துறைக்கான ஆலோசனை கமிட்டி, வெளியுறவுத்துறைக்கான நிலைக்குழு ஆகியவற்றில் பணியாற்றினார்.

இவர் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.

1955ம் ஆண்டு பாப்சி நாரிமன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இவர் எழுதிய புத்தகங்கள்

Democracy as a Way of Life

The Indian Constitution - An Experiment in Unity and Diversity

Zoroastrianism - the Faith of the Parsis in India

Judicial Power and its Impact on Legislation

Preventive Detention and Persecution of Political Opponents

Primacy of the Chief Justice of India

Freedom of Information and the Press

Freedom of Expression and World Peace

Judicial Aspects of Human Rights Protection in India

Trends in the Internationalism of Human Rights Law

Judges and Lawyers in the USSR Changing Perceptions

Illegality of the Constitution 59th Amendment - Are Courts the Only Safeguards?

Judicial Valour and Legal Aid

கவனம் பெற்ற வழக்குகள்:

போபால் விஷவாயு வழக்கு, ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு, டிஎம்ஏ பை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வாதாடியிருக்கிறார்.

Tags :
Advertisement