மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கியது சுப்ரீம்.கோர்ட்!
மதுபானக் கொள்கை வழக்கில் கைதாகி 17 மாதங்களாக சிறையில் இருக்கும் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ இரு அமைப்புகளும் தனித்தனியாக பதிவு செய்த வழக்குகளில் ஜாமின் வழங்கப்பட்டதால் அவர் சிறையில் இருந்து வெளியே வர உள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி மாநில முன்னாள் முதல்வருமான மணீஷ் சிசோடியா மீது மதுபான கொள்கை முறைகேடு புகார் பதியப்பட்டு சிபிஐயும், மதுபான கொள்கை புகாரில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து இருந்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி அப்போதைய டெல்லி மாநில முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சுமார் 17 மாதங்கள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணையில் உள்ளார்.
கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட் தொடரப்பட்டிருந்த வழக்கு விசாரணை முடிந்து இன்று உத்தரவு வழங்கப்பட்டது. அதில் , மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து 17 மாதங்கள் கழித்து சிறையில் இருந்து வெளியில் வரவுள்ளார் மணீஷ் சிசோடியா.
இதே டெல்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.