தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

வானுக்குப் போன சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சிக்கல்!

08:52 PM Jun 29, 2024 IST | admin
Advertisement

ர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அருகே ரஷ்யாவின் செயற்கைக்கோள் வெடித்துச் சிதறியது.இதுகுறித்து நாசா தெரிவிக்கையில், கடந்த புதன் கிழமை, ரஷ்யாவின் ரிசர்ஸ் என்ற செயற்கைக்கோள் வெடித்து 100க்கும் மேற்பட்ட பாகங்களாக வெடித்துச் சிதறியது. இதையடுத்து, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விஞ்ஞானிகள் பாதுகாப்பாக, விண்கலத்திற்கு உள்ளே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ரிசர்ஸ் செயற்கைக்கோளின் பாகங்கள் , சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அருகே காணப்படுவதால், அங்கே இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisement

சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்வெளி வீரர்களைஅனுப்ப ‘ஸ்டார்லைனர்’ என்றகேப்சூல் விண்கலத்தை போயிங்நிறுவனம் தயாரித்தது. பரிசோதனை முயற்சியாக இந்த ஸ்டார்லைனர் விண்கலம் அட்லஸ் 5 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து கடந்த 5-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பப்பட்டது. இதில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு பலமுறை சென்று வந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் அனுப்பப்பட்டனர். 25 மணி நேர பயணத்துக்குப்பின் சர்வதேச விண்வெளி மையம் சுற்றிக் கொண்டிருக்கும் சுற்றுப்பாதையை ஸ்டார்லைனர் விண்கலம் சென்றடைந்தது. விண்வெளி மையத்தை, விண்கலம் சென்றடைந்ததும், அதிலிருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று அங்கு ஏற்கனவே தங்கியிருக்கும் வீரர்களுடன் சேர்ந்து பணியாற்றினர்.

Advertisement

விண்வெளி மையத்துடன் பொருத்தப்பட்ட ஸ்டார்லைனர் விண்கலத்தை ஆய்வு செய்தபோது, அதில் நிரப்பப்பட்டிருந்த ஹீலியம் எரிவாயு 5 இடங்களில் கசிவது கண்டறிப்பட்டது. இதனால் விண்கலத்தை இயக்கும்‘த்ரஸ்டர்’ எனப்படும் 5 கருவிகள் வேலை செய்யவில்லை. இவற்றை சரிசெய்யும் பணியில்நாசா பொறியாளர்கள் ஈடுபட்டதில் தற்போது 4 த்ரஸ்டர்கள் இயங்குகின்றன. விண்கலத்தை உந்தி தள்ள மொத்தம் 28 த்ரஸ்டர்கள் உள்ளன. விண்கலம் பூமி திரும்பும் முன் அதன் செயல்பாடு மற்றும் பாதுகாப்பை நாசா பொறியாளர்கள் முழுவதுமாக ஆய்வு செய்வர். இந்த பணி காரணமாக ஸ்டார்லைனர் விண்கலத்தை மீண்டும் பூமி திரும்ப வைக்கும் முயற்சி ஜூலை 2-ம் தேதிக்கு பின் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

இதனால் 9 நாட்கள் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஆய்வுகள் நடத்தி திட்டமிட்டபடி கடந்த 22-ம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும்.தற்போது, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் வாயு கசிவு , தொழில் நுட்ப கோளாறுகள் சரி செய்ய குறந்தது 30 நாட்களுக்கு மேல் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் இருவரும் மேலும் 30 நாட்களுக்கு மேல் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அத்துடன், அவரை எப்படி பூமிக்கு திருப்பிக் கொண்டு வருவது என்ற சிக்கல்கள் எழுந்துள்ளன. அவர் சென்ற ஸ்டார்லைனர் விண்கலம் சரிசெய்யப்பட்டு , அழைத்து வரப்படுவாரா இல்லை , எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் அழைத்து வரப்படுவார் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.

Tags :
spaceSunita Williamstrouble returning . earth!சுனிதா வில்லியம்ஸ்விண்வெளி
Advertisement
Next Article