சுந்தரா டிராவல்ஸ் படத்தின் பார்ட் - 2 -" சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட் " !
முரளி மற்றும் வடிவேலு இணைந்து நடித்து 2002 ஆம் ஆண்டு வெளியான " சுந்தரா டிராவல்ஸ்" படம் பட்டி தொட்டி எங்கும் மாபெரும் வெற்றி பெற்று மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று அன்று முதல் இன்று வரை யாராலும் மறக்க முடியாத படமாக இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு " சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட் " என்று தலைப்பிட்டுள்ளனர். கருணாஸ் மற்றும் கருணாகரன் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். மற்றும் ஆடுகளம் முருகதாஸ், சாம்ஸ், ரமா, வின்னர் ராமச்சந்திரன், சிசர் மனோகர், டெலிபோன் மணி, வினோத் குமார் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் இவர்களுடன் தயாரிப்பாளர் செவன்த் சேனல் நாராயணன் இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இளம் ஜோடிகளாக விக்னேஷ் - அஞ்சலி இருவரும் அறிமுகமாகிறார்கள்.
ஒளிப்பதிவு - செல்வா.R
இசை - ஹரிஹரன்
பாடல்கள் - கவிப்பேரரசு வைரமுத்து
எடிட்டிங் - P.C. மோகன்
கலை இயக்கம் - மோகன மகேந்திரன்.
ஸ்டில்ஸ் - குமார்
தயாரிப்பு நிர்வாகம் - கணேசன்.M
பத்திரிகை தொடர்பு - மணவை புவன்
இணை தயாரிப்பு - S. சிவமுருகன்
இயக்கம் - கருப்பு தங்கம்
படம் பற்றி இயக்குனர் கறுப்பு தங்கம் கூறியதாவது...
இந்த கதையில் பஸ் தான் ஹீரோ அதை மையப்படுத்தி தான் அனைத்து கதாபாத்திரங்களையும் உருவாக்கி இருக்கிறோம். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் அந்த பஸ்சை பல லட்சம் ரூபாயில் சொந்தமாக வாங்கி அதை படத்திற்கு ஏற்றார் போல தயார்படுத்தி படப்பிடிப்பை நடத்தி வருகிறோம்.கொடைக்கானல், பன்றிமலை போன்ற இடங்களில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளிலும், தென்காசி காரைக்குடி மற்றும் சென்னை நெல்லிக்குப்பம் போன்ற பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்.தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றார் இயக்குனர் கருப்பு தங்கம்.ரசிகர்களின் கனிவான கவனத்திற்கு சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்டில் விரைவில் அனைவரும் பயணிக்கலாம்.