அடடே..-கூகுள் நிறுவனத்தில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த சுந்தர் பிச்சை!
தமிழகத்தில் உள்ள தூங்கா நகரமான மதுரையில் ஸ்டெனோகிராஃபரான லக்ஷ்மி மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரான ரெகுநாத பிச்சை ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் சுந்தர் பிச்சை. இவர் ஐ.ஐ.டி. காரக்பூரில் சேருவதற்குமுன் தன் பள்ளிப் படிப்பு மற்றும் குழந்தைப் பருவம் முழுவதையும் சென்னையில் தான் கழித்துள்ளார். அதாவது சுந்தர்ராஜன் பிச்சை தான் இவரது முழுப் பெயர். சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் படித்த இவர் பின்னர் ஐ.ஐ.டி. கரக்பூரில் பொறியியல் பட்டமும், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டமும், பென்சில்வேனியாவில் உள்ள வார்டன் கல்லூரியில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர்.கூகுள் நிறுவனத்தில் சேரும் முன் மெக்கென்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார். இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ் ஆகிய பிரவுசர்களில் கூகுள் சர்ச்சை எளிமையாக்க உதவும் டூல்பார் உருவாக்கும் ஒரு சிறிய அணியில் தான் பிச்சைக்கு பணி கிடைத்தது. ஆனால்,, நாம் ஏன் மற்ற பிரவுசர்கள் பின்னால் அலைய வேண்டும், நாமே ஒரு பிரவுசரை உருவாக்கலாமே என தனது அதிகாரிகளிடம் பிச்சை தெரிவித்தார். முதலில் இது தேவையில்லாத வேலை என கூகுள் நினைத்தது. ஆனால், அதன் பலன்களை எடுத்துச் சொல்லி பிரவுசரை உருவாக்கும் திட்டத்துக்கு வலு சேர்த்தார். இவர் மீது நம்பிக்கை வைத்த லாரி பேஜ், அந்த வேலையை பிச்சையிடமே தர, அடுத்த ஓராண்டில் கூகுள் குரோமை வெளியிட்டது பிச்சையின் டீம். இப்போது உலகில் 32 சதவீதம் பயன்படுத்தப்படும் பிரவுசர் குரோம் தான்!
தற்போது தலைமை துணைத்தலைவராக இருக்கும் இவர், ஆண்ட்ராய்ட், கூகுள் குரோம், கூகுள் என்ஜினியரிங், ஆப்ஸ், ஜிமெயில், கூகுள் டாக்ஸ் உள்ளிட்ட பிரிவுகளைக் கவனித்து வந்தவர். 2008ம் ஆண்டு பிச்சை தலைமையிலான குழு தான் குரோம் பிரவுசரை உருவாக்கியது. இந் நிலையில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக அறிவிக்கப்பட்ட்டார். தற்போது உலகின் முன்னணி தேடு தளமான கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் ஆகியவற்றின் தலைமை நிர்வாக அதிகாரியாக தற்போது பணியாற்றுகிறார்.
முன்னதாக இவர் 2004 ஏப்ரல் 26 தினத்தன்று கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். தற்போதைய தலைமை பதவிக்கு 2015-ல் அந்த நிறுவனத்தின் இணை நிறுவனரும், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான லாரி பேஜால் நியமிக்கப்பட்டார்.தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒருவர் சேர்ந்தார்போன்று சில வருடங்கள் பணியாற்றுவது சவாலாக மாறிவரும் காலத்தில், தமிழகத்தின் சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் வெற்றிகரமாக 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.
2004ல் கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மை மற்றும் மேம்பாட்டு பிரிவின் தலைவராக சேர்ந்த சுந்தர் பிச்சை, இத்தனை ஆண்டுகளில் கூகுள் குரோம் மற்றும் குரோம் ஓஎஸ் உருவாக்குதல் மற்றும் ஜிமெயில் மற்றும் கூகுள் மேப்ஸ் போன்ற அப்ளிகேஷன்களின் மேம்பாடு போன்ற முன்னணி திட்டங்களின் வெற்றிக்கு பங்களித்துள்ளார். கூகுள் டிரைவை உருவாக்குவதற்கும் அவர் பொறுப்பு வகித்துள்ளார்.
மேலும் பெரும்பாலான உலக மக்கள் தங்களது வசம் உள்ள ஒற்றை மொபைல்போனை கையாளவே பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டு வரும் நிலையில் ஒரே நேரத்தில் சுமார் 20 போன்களை தான் பயன்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். தனது பணி நிமித்தமாக இத்தனை மொபைல்போன்களை பயன்படுத்த வேண்டி இருப்பதாக குறிப்பிடுகிறார். பல்வேறு சாதனங்களில் கூகுள் புராடெக்ட்களின் இயக்கம் எப்படி என்பதை சோதிக்கவும், அப்டேட்டில் இருக்கவும் இதை செய்வதாக தெரிவித்துள்ளார். அப்போது தான் பயனர்களுக்கு தேவையான புதிய அம்சங்கள் மற்றும் கூகுள் நிறுவனம் புதுமையை கொண்டு வரவும் முடியும் என நம்புகிறார்.
இது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவருக்குப் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம் மைக்ரோசாப்ட் ஆதரவுடன் OpenAI கடந்த ஆண்டு ChatGPT ஐ அறிமுகப்படுத்தியது, இதற்கு போட்டியாக கூகுள் நிறுவனமும் அதேபோன்ற மாடல் ஒன்றை உருவாக்க களமிறங்கியது. ஆனால் எதிர்பாரா விதமாக ஜெமினி திட்டத்தில் மிகப்பெரியத் தோல்வியை கூகுள் நிறுவனம் தழுவியது. கூகுள் AI துறையின் இந்த தோல்வியானது உலகளவில் முன்னனி தொழிற்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றாக இருக்கும் கூகுள் நிறுவனம் பொதுமக்களின் கிண்டல்கள் மற்றும் கேலிகளுக்கு உள்ளாக்கியது. மேலும் இதனால் சமூக வலைதளங்களில் பல சர்ச்சைகள் கிளம்பின என்பதும் குறிப்பிடத்தக்கது.