For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

புரோபா-3 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்!- இஸ்ரோ அறிவிப்பு!

10:24 PM Dec 05, 2024 IST | admin
புரோபா 3 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்   இஸ்ரோ அறிவிப்பு
Advertisement

ந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் 2 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்டின் விண்வெளி பயணம் புதன்கிழமை தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது.

Advertisement

ஐரோப்பிய விண்வெளி நிறுவனமான இஎஸ்ஏ, சூரியனின் ஒளிவட்டப் பாதையை ஆய்வு செய்வதற்காக பிரோபா 3 என்ற செயற்கைகோளை வடிவமைத்தது.550 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஏவுதளமான, ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நேற்று (டிச.4ம் தேதி)) மாலை 4.08 மணிக்கு பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இதையடுத்து செயற்கைகோளை ராக்கெட்டில் பொருத்துவது, எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு ராக்கெட் ஏவுதலுக்காக இறுதிக்கட்ட பணியான 25 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று முன்தினம் தொடங்கியது. ராக்கெட் மற்றும் செயற்கைகோள்களின் நிலையை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

கவுன்ட்டவுன் முடிவதற்கு முன்பாக புரோபா-3 செயற்கைகோளில் கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுதல் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தெரிவித்தது. பிஎஸ்எல்வி சி59 ராக்கெட்டில் எந்த பிரச்னையும் இல்லை என்றும் செயற்கைகோளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே ஏவுதல் நிறுத்தப்பட்டதாகவும் இஸ்ரோ தெரிவித்தது.

செயற்கைகோளின் உந்துவிசை கலனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த உந்துவிசை கலன் செயற்கைக்கோளின் சுற்றுப்பாதை கட்டுப்பாட்டு துணை அமைப்பின் ஒரு பகுதி. இது விண்வெளியில் நோக்குநிலை மற்றும் சுட்டிக்காட்டுதலை கணிக்க பயன்படுகிறது. இன்று மாலை 4.04 மணிக்கு ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்திருந்த நிலையில் பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் இன்று சரியாக மாலை 4.04 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

இதை அடுத்து பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் மூலம் இரு செயற்கைக் கோள்களும் சரியான பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் செய்யப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். 61வது முறையாக பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டுள்ளது என்றும் சூரிய ஒளிவட்டப் பாதையை ஆய்வு செய்யும் புரோபா-3 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக புவியின் நீள்வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு தனது பாராட்டுகளையும் அவர் குறிப்பிட்டார்.

Tags :
Advertisement