தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

ஸ்டாலின் அரசில் தமிழக பாஜகவினர் அடுத்தடுத்த கைதுகள் -. விசாரிக்க கட்சி ரீதியில் கமிட்டி அமைத்தார் ஜேபி நட்டா!

10:17 AM Oct 23, 2023 IST | admin
Advertisement

மிழ்நாட்டில் நேற்று முன்தினம் தமிழக பாஜக முக்கிய நிர்வாகியும், ஃபைனான்ஸூருமான அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டு அவருக்கு வரும் நவம்பர் 3ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை , பனையூர் பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டருகே பாஜக கொடி கம்பம் வைப்பது தொடர்பான விவகாரத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட புகார் தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தகவல் வந்தது

Advertisement

நேற்று தூத்துக்குடியை சேர்ந்த பாஜக நிர்வாகி ஜான் ரவி, சமூக வலைத்தளத்தில் முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாக கூறி அவர் மீது மதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று தூத்துக்குடி பாஜக நிர்வாகி ஜான் ரவியை காவல்துறையினர் கைது செய்தனர்.இதற்கு முன்னரும், சர்ச்சை கருத்துக்கள் கூறியதாக மேலும் சில பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்ட்டுள்ளனர்.

Advertisement

இதனால், தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்ள பாஜக தேசிய தலைமை புதிய குழுவை நியமித்துள்ளது. இந்த குழுவானது தொடர்ச்சியாக எந்த காரணத்திற்காக பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்படுகிறார்கள் என ஆய்வு செய்து கட்சி தலைமைக்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.

அந்த குழுவில் முன்னாள் கர்நாடக முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சதானந்த கவுடா, எம்பியும், மும்பையின் முன்னாள் காவல் கண்காணிப்பாளருமான சத்ய பால் சிங், ஆந்திரா பாஜக மாநில தலைவர் புரந்தேஸ்வரி, எம்பி பி.சி. மோகன் ஆகியோர் உள்ளனர். இந்த குழு பற்றிய விவரத்தை பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டு உள்ளார்.

Tags :
investigateJP Nattamembersparty-wise committeeStalin's governmentSubsequent arrestsTamil Nadu BJP
Advertisement
Next Article