For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

பொங்கல் ஜல்லிகட்டில் எகிறி பாய்ந்த ஸ்டண்ட் சில்வா!

01:54 PM Jan 24, 2024 IST | admin
பொங்கல் ஜல்லிகட்டில் எகிறி பாய்ந்த ஸ்டண்ட் சில்வா
Advertisement

2024-ல் தை பிறந்ததும் வெளியாகும் திரைப்படங்களில் எந்த படம் நம் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யும் என்று அதிகம் எதிர்பார்ப்போம்.அதில் ஏதாவது சில படங்கள் முன் வரிசையிலும் மற்றும் ஒரு சில படங்கள் அடுத்த வரிசையிலும் இருப்பதை நாம் சிறுவயது முதல் பார்த்திருக்கிறோம்.இந்த தை பொங்கலில் வெளிவந்த படங்களான கேப்டன் மில்லர்,அயலான்,மெரி கிரிஸ்மஸ்,ஹனுமான் மற்றும்  மிஷன் சாப்டர்-1ஆகிய படங்களில் அதிகமாக ரசிகர்களின் மனதை கவர்ந்த அதிரடி ஆக்‌ஷன் படமாக மிஷன் சாப்டர்-1 இடம் பெற்றுள்ளது.மிஷன் சாப்டர் 1 ஆக்க்ஷன் காட்சிகளை  பார்க்கும் பொழுது ஹாலிவுட் படம் பார்ப்பது போல் பிரம்மிப்பாக உள்ளது என்று பலரும் குறிப்பிட்டார்கள்.

Advertisement

பொதுவாக படத்தில் சண்டை என்றால் ஹீரோவுடன் ஒருவர் அல்லது   நான்கு ஐந்து பேர் மோதலாம் இதில் நூற்றுக்கணக்கான ஸ்டண்ட்  நடிகர்களை வைத்து ஸ்டண்ட் சில்வா அமைத்திருக்கும் சண்டை காட்சிகள்  படம் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.ரசிகர்கள் படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வரும்போது படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால் படத்தில் சண்டை காட்சிகள் பின்னி எடுத்திருக்காங்க என்றும்,சண்டைக் காட்சிகள்  மிகப் பிரமாண்டமாக இருக்கின்றது என்றும்  ஒட்டுமொத்த ரசிகர்களும் சொல்கிறார்கள். இப்படத்தில் ஜெயிலராக நடித்திருக்கும் எமி ஜாக்சனும் அதிரடி ஆக்க்ஷனில் அனல் பறக்க விடுகிறார். இதற்கு காரணம் சண்டை பயிற்சி இயக்குனர்  'ஸ்டண்ட் சில்வா தான்!

Advertisement

ஸ்டண்ட் சில்வா,இவர் இந்திய சினிமாவில் ஒரு மிக சிறந்த ஸ்டண்ட் இயக்குனர்,ஸ்டண்ட் நடிகர், மற்றும் திரைப்பட இயக்குநரும் ஆவார்.இந்தியாவின் மிக சிறந்த வெற்றிபட இயக்குனரான S.S.ராஜமௌலி இயக்கத்தில் ஜுனியர் NTR நடிப்பில் வெளி வந்து ஆக்‌ஷனில் மிக பெரிய வெற்றி அடைந்த 'எமதொங்கா' படத்தின் மூலம் ஸ்டண்ட் இயக்கனராக அறிமுகமாகி தமிழ்,தெலுங்கு,மலயாளம்,கன்னடம்,ஹிந்தி,மராட்டி,பெங்காலி,மற்றும் சிங்களம் என பல மொழிகளிலும் 300 படங்களுக்கு மேலாக சண்டைபயிற்சியாளராக பணியாற்றி பல அரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.இவர் சண்டை பயிற்சி அளிப்பது மட்டுமின்றி பல படங்களில் நடித்து நல்ல ஸ்டண்ட் நடிகர் என ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

'தல' அஜித் நடிப்பில் வெளிவந்த 'மங்காத்தா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் தான் இந்த ஸ்டண்ட் சில்வா.பிறகு அதே தல அஜித்துடன்  அருண் விஜய் நடிக்கும் 'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளை பற்றி சொல்லவே வேண்டாம் சும்மா திரையில் அதிர வைத்திருப்பார்.இன்னும் ஒரு படி மேலே சொல்ல வேண்டுமென்றால் நடிகர் அருண் விஜய்க்கு இந்த  திரைப்படம் மூலம்தான் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அந்தஸ்து கிடைத்து தொடர்ந்து பிசியான நடிகராக வலம் வருவதற்கு இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் ஒரு உதாரணம் என்றே சொல்லலாம்.

பொதுவாகவே அன்றைய காலகட்டத்தில் இருந்து இன்றைய காலகட்டம் வரைக்கும் சினிமாவில் வில்லனாக நடிக்கும் எல்லோரும் நிஜத்தில் நல்லவர்கள்தான் அந்தவிதத்தில் ஸ்டண்ட்சில்வாவும் இதற்க்கு விதிவிலக்கு அல்ல. பார்ப்பதற்கு நூடுல்ஸ் தலையுடன் முகத்தில் தழும்புடன் கரடு முரடாக காட்சியளிக்கும் இந்த ஸ்டண்ட் சில்வாவின்   மனம் ஒரு பச்சை குழந்தை போன்றது,இது பார்ப்பவர்களுக்கு  தெரியாது,ஆனால்  அவருடன் பழகியவர்களுக்கு மட்டும்தான் தெரியும் அவர் ஒரு சொக்கத்தங்கம் என்று.இதற்கு சான்றாக இவர்  தமிழில் இயக்கிய முதல் திரைப்படம்  ‘சித்திரை செவ்வானம்’ சமுத்திரக்கனி மற்றும் பிரபல நடிகை சாய் பல்லவியின்  தங்கை பூஜா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியாகி பார்த்த அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்து மிகபெரிய எமோஷனல் வெற்றி படமாக  அமைந்தது.

இத்திரைபடத்தின் மூலமாக சமூகத்தில் பெண் பிள்ளைகளை எவ்வாறு  பாதுகாப்பாக   வளர்க்க வேண்டும்  என்றும் சோஷியல் மீடியாவை எப்படி கையாளவேண்டும் என்றும் ஒரு உன்னதமான கருத்தை சொல்லி,இந்த படத்தை ஒரு சாதாரண படமாக இல்லாமல்   மிகபெரிய பாடமாக செதுக்கியிருந்தார்.சித்திரை செவ்வானம் படத்தை இயக்கிய பிறகு  ஏற்கனவே ஒப்புக்கொண்ட  பல  படங்களின் ஸ்டண்ட் இயக்குனர் பணி இருந்ததால் உடனே  படங்கள் இயக்க முடியவில்லை.

இந்த 2024 ஆம் ஆண்டு மிக பிரமாண்டமான  சூப்பரான அதிரடி ஆக்க்ஷன் திரைப்படத்தை இயக்க போகிறார் ஸ்டண்ட் சில்வா.

Tags :
Advertisement