வீதி அரசியல் V வீட்டிற்குள் அரசியல்!
35 ஆண்டுகாலமாக மக்களுக்கு களமாடிய விசிகவையும் அதன் தலைவர் திருமாவளவனையும் கூட்டணிக்கு அழைக்கும் அளவுக்கு விஜய்யிடம் அப்படி என்ன இறுமாப்பு இருக்கிறது என தெரியவில்லை. விசிக கூட்டணி தேவை என்றால் விஜய் தான் அவரது அலுவலக வாசலை அடைய வேண்டுமே தவிர, கதைவை திறந்து வைத்து இருக்கிறேன் என சொல்வதெல்லாம் அகங்காரத்தின் உச்சம். இத்தனை அகங்காரம் கொண்டவர் கையிலெல்லாம் அம்பேத்கர் புத்தகம் படாதபாடு படுகிறது.
தேமுதிக தொடங்கிய நிலையில், விஜய்காந்த் மிகத்தெளிவாக கூறினார். தனது பலத்தை தெரிந்துகொள்ள முதல் தேர்தலில் கூட்டணி இல்லை என மிகத்தெளிவாக கூறினார். 10% வாக்குகள் பெற்று தான் மிகப்பெரிய சக்தி என நிரூபித்தப் பிறகே கூட்டணிக்கு கதவை திறந்தார். அந்த அளவுக்கு கூட அரசியல் தெளிவில்லாமல் விஜய் இருக்கிறார்.
அதுகூட எனக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை. ஆனால், அவருக்கு அரசியல் ஆலோசனைக் கொடுப்பவர்களும் முதிர்ச்சியற்ற நிலையில் இருக்கின்றனர் என்ற தகவல்தான் அதிர்ச்சி அளிக்கிறது.விஜயகாந்தின் அரசியலில் எல்லாம் எனக்கு இப்போதும் உடன்பாடில்லை.ஆனால், அவரிடம் இருந்த அந்த நேர்மையை கொஞ்சம் கூட விஜய் கற்றுக்கொள்ளவில்லையே என்ற கவலைதான் எனக்கு. ஜெயித்துவிட்டுப் பேசுங்கள் விஜய்… அது வரை பேசாமல் செயல்படுங்கள்.
அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
இரண்டும் இருந்தால் பேரைவாங்கலாம்
பேரைவாங்கினால் ஊரை வாங்கலாம்..
என எம்ஜிஆர் பாடல் ஒன்று இருக்கிறது. இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், சினிமாவில் ஆரம்பகட்டத்தில், உங்களுக்கு அறை எடுத்துக்கொடுக்கவில்லை என இயக்குநரிடம் கூட சொல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நீங்கள் கோபித்துக் கொண்டு வந்துவிட்டீர்கள். இந்த தகவலை அறிந்த உங்கள் தந்தை உங்களுக்கு ஒரு அரை கொடுத்துவிட்டு, நேரடியாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்து வந்து இயக்குநரிடம் மன்னிப்பு கேட்க வைத்தார் என பேட்டிகளில் கேட்டறிந்தேன்.அப்படி பண்புகளை சொல்லிக் கொடுத்த அந்த அய்யா எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போதும் விஜய்க்கு ஒரு அரை விட்டு ‘கூட்டணி வேண்டுமென்றால் விசிக அலுவலக வாசலுக்கு நீ ஓடு’ என பண்பையும் அறிவுரையும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.