தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பத்திர பதிவிற்கான முத்திரைத்தாள் கட்டணம் கடும் உயர்வு!!

06:16 AM Nov 03, 2024 IST | admin
Advertisement

மிழ்நாடு அரசு முன்பை விட இப்பொழுது பத்திர பதிவிற்கான கட்டணங்களை பெரும் அளவு உயர்த்தி இருக்கிறது. இது மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.பத்திர பதிவுத்துறையில் 20 வகையான பதிவு தாள்களின் கட்டணம் மிகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண செட்டில்மெண்ட் மற்றும் வாடகை ஒப்பந்தங்களுக்காக 20 ரூபாய் கொடுத்து வாங்கப்படும் முத்திரை பத்திரம் இனி செல்லாது எனவும், 200 ரூபாய் கொடுத்து வாங்கும் முத்திரை பத்திரம் மட்டுமே இனி செல்லும் என்றும் தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.

Advertisement

இவை மட்டுமின்றி, வீடு, நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் செட்டில்மென்ட் என பல்வேறு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அதுபோல, செட்டில்மென்ட் பத்திரங்களுக்கான பதிவுக் கட்டணம் ரூ.10 ஆயிரம், முத்திரைத் தீர்வை கட்டணம் ரூ. 40 ஆயிரம், பொது அதிகார ஆவணங்களுக்கான கட்டணம் ரூ.10 ஆயிரம், லீஸ், ரத்து ஆவணம், பவர் பத்திரம் உள்ளிட்ட சிறிய அளவிலான பண மதிப்புடைய முத்திரைத்தாள் ஆவணங்களுக்கு, கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு கடந்த வருடம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், இந்த வருடமும் கட்டண உயர்த்தப்பட்டு இருப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

குறிப்பிட்ட சில இனங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.,. இதுவரை குறைந்தபட்ச கட்டணம் ரூ.20 என இருந்த நிலையில், அந்த கட்டணம் தற்போது ரூ.100, 200, 500 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் பத்திரப்பதிவு கட்டணங்களை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
hikeregistrationstamp paper
Advertisement
Next Article