ரஜினியை ஏமாற்றிய இலங்கை பெருந்தோட்ட சமூகம்- ஆராயும் அரசு!
இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களாக உள்ள தமிழர்களை குறிப்பிடும் வகையில் இலங்கையின் பெருந்தோட்ட சமூகம் உள்ளது. இந்தியாவில் இருந்து இலங்கை சென்று 200 ஆண்டுகளுக்கும் மேலாக தேயிலைக் காடுகளில் உழைத்து வரும் தமிழர்களுக்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதாகும். அதே சமயம் பொருளாதார நெருக்கடி, சுகாதார பிரச்னைகள், போதியளவு கல்வி கற்கும் வசதிகள் இல்லாமை, போக்குவரத்து பிரச்னைகள் என பல்வேறு சிரமங்களை கடந்த 200 வருடங்களாக அனுபவித்து வரும் மலையக தமிழர்கள், இன்றும் தமக்கென்று ஒரு முகவரி இன்றி வாழ்கின்றனர்.தமது அயராத உழைப்பின் மூலம் தேயிலை செய்கையை உலகறிய செய்து, இலங்கைக்கே உரித்தான சிலோன் டீ என்ற நாமத்துடனான முகவரியை பெற்றுக்கொடுத்த மலையக மக்கள், இன்றும் முகவரி இன்றி வாழ்ந்து வருகின்றமை வருத்தமளிக்கும் விடயமாகும்.
மலையகத்தில் பிறக்கும் ஒவ்வொருவரும் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர். முகவரி இல்லாமையினால், பிறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்வதிலிருந்து, இறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்வது வரை பல்வேறு பிரச்னைகளை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். அத்துடன், பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுமதிக்க சிரமப்படுகின்றமை, புலமை பரிசில்களை பெற்றுக்கொள்ள முடியாமை, சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியாமை, அடையாளஅட்டையை பெற்றுக்கொள்ள முடியாமை, திருமண பதிவுகளை செய்ய முடியாமை என நாளாந்தம் பல சவால்களை இந்த மக்கள் சந்தித்து வருகின்றனர்;.
அத்துடன், தமது தங்காபரணங்களை வங்கிகளில் அடகு வைத்து, அதனை மீள திருப்பிக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளமைக்கு முகவரி இல்லாமையே பிரதான காரணமாக அமைந்துள்ளது.இப்பேர்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் பெருந்தோட்ட சமூகம். இதன் 200வது ஆண்டை கொண்டாடும் வகையில் நினைவு முத்திரை வெளியிடப்பட்டுள்ளது. இதன் முதல் நினைவு முத்திரையை அந்த அமைப்பின் நிர்வாகி நடிகர் ரஜினிகாந்திடம் நேரில் சந்தித்து கொடுத்துள்ளார்.
பெரும்பாலான மலையக தமிழர்கள், பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான காணிகளிலுள்ள லயன் அறைகளில் வசித்து வருகின்றமையினால், அவர்களுக்கென முகவரியொன்று இதுவரை வழங்கப்படவில்லை.குறிப்பாக பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் ஒருவருக்கு கடிதமொன்றை அனுப்ப வேண்டும் என்றால், அந்த கடிதம் பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகத்திற்கே முதலில் செல்லும். அதன்பின்னர், அங்கிருந்து பெருந்தோட்ட மக்களுக்கு, தோட்ட நிர்வாகம் பகிர்ந்தளிக்கும் வகையிலேயே இந்த நடைமுறை அமைந்துள்ளது. இந்நிலையில் இப்படி முகவரி இல்லாதோர் அமைப்பின் சார்பில் உருவாகி இருக்கும் இந்த நினைவு முத்திரைப் புகைப்படத்தை ரஜினி ரசிகர் ஒருவர் யாரையோ பிடித்து வழங்கி கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த முத்திரையை முன்னரே சிலருக்கு வழங்கியுள்ள நிலையில் முதல் முத்திரை ரஜினிக்கு என்ற பெயரில் செய்தி பரப்புவதன் பின்னணியை அரசு ஆராயத் தொடங்கியுள்ளது.