இலங்கை பிரதமரான கலாநிதி ஹரிணி அமரசூரிய & புதிய அமைச்சர்கள் மற்றும் இலாகா விபரம்!
ஸ்ரீலங்கா என்றழைக்கப்படும் இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவரது தேசிய மக்கள் சக்திக்கு அப்போதைய நாடாளுமன்றத்தில் வெறும் 3 எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர். பெரும்பான்மை இல்லாததால், நாடாளுமன்றத்தை கலைத்து திசாநாயக்க உத்தரவிட்டார். புதிய நாடாளுமன்றத்தை தேர்வு செய்வதற்கான தேர்தல் நவம்பர் 14-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவில் அநுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றது.
இந்நிலையில், அநுர குமார திசாநாயக்க தலைமையில் புதிய அமைச்சரவைக்கான பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. அதில் இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றிருக்கிறார்அவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். மேலும், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.
தற்போது இலங்கையின் 16 வது பிரதமராகப் பதவி ஏற்றிருக்கிறார். ஹரிணி அமரசூரியவை பொறுத்தவரை தெற்காசியாவிலேயே எந்த ஒரு அரசியல் குடும்ப பின்னணியும் இல்லாமல் பிரதமர் ஆன முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெறுகிறார்.இவருக்கு உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வித்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இலங்கையின் 3-வது பெண் பிரதமர் என்கிற பெருமையை ஹரிணி அமரசூரிய பெற்றிருக்கிறார். கலாநிதி ஹரிணி அமரசூரிய டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியில் சமூகவியலும், ஆத்திரேலியாவின் மக்குவாரி பல்கலைக்கழகத்தில் மானிடவியலும் படித்திருக்கிறார். இலங்கை திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் பிரிவில் விரிவுரையாளராகப் பணியாற்றி இருக்கிறார்.
சமூக நலன், எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள் நலன் ஆகிய துறைகளில் ஆர்வலராக இருந்திருக்கிறார். மேலும், அவர் இலங்கையில் உள்ள சமூக சுகாதார அமைப்பான Nest-இன் இயக்குநராகவும், தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். அரசியல் பின்புலம் ஏதும் இவருக்கு இல்லை. 2019 ஆம் ஆண்டு அநுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தியில் இணைந்து தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டிருக்கிறார்.
அதிபர் அனுர குமார திசாநாயக்க: நிதி, டிஜிட்டல் & பாதுகாப்பு அமைச்சர்
ஹரிணி அமரசூர்ய: பிரதமர் & கல்வித்துறை அமைச்சர்
நலிந்த ஜயதிஸ்ஸ: சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர்
கே.டி லால்காந்த: வேளாண்மை, கால்நடை மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர்
விஜித ஹேரத்: வெளிநாட்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்
பேராசிரியர் சந்தன அபேரத்ன: பொது நிர்வாகம், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார: நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்
சரோஜா சாவித்திரி போல்ராஜ்: மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர்
அனுர கருணாதிலக: நகர்ப்புற வளர்ச்சி, கட்டுமானம் மற்றும் வீட்டு வசதி அமைச்சர்
இராமலிங்கம் சந்திரசேகர்: கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வள அமைச்சர்
பேராசிரியர் உபாலி பன்னிலகே: கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு, சமூக அபிவிருத்தி அமைச்சர்
சுனில் ஹந்துன்நெத்தி: கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர்
ஆனந்த விஜேபால: பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர்
பிமல் ரத்னாயக்க: துறைமுகங்கள் அமைச்சர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்
பேராசிரியர் சுனில் செனவி: புத்தசன, சமய, கலாசார அலுவல்கள் அமைச்சர்
சமந்த வித்தியரத்ன: பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்
சுனில் குமார கமகே: விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்
வசந்த சமரசிங்க: வர்த்தகம், வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன: விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்
பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ: தொழிலாளர் அமைச்சர்
குமார ஜெயக்கொடி: எரிசக்தி அமைச்சர்
தம்மிக்க படபாண்டி: சுற்றுச்சூழல் அமைச்சர்