இலங்கை அதிபர் தேர்தல்:ஒவ்வொரு வேட்பாளரும் ரூ.187 கோடி செலவு செய்ய அனுமதி!
இலங்கையில் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 42 ஆண்டு கால இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் இந்த அளவுக்கு அதிகமானோர் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பது இதுவே முதல்முறை. இதனிடையே பொருளாதார சிக்கலில் சிக்கி சின்னாபின்னான அந்நாட்டு தேர்தலில் வேட்பாளர்கள் செலவிடும் தொகைக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் யார் யார்?
கீழ்க்கண்ட 39 பேர் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க
சஜித் பிரேமதாஸ
அநுரகுமார திஸாநாயக்க
நாமல் ராஜபக்ஸ
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா
விஜயதாஸ ராஜபக்ஸ
திலித் சுசந்த ஜயவீர
சரத் மனமேந்திர
பா.அரியநேத்திரன்
மயில்வாகனம் திலகராஜ்
அபுபக்கர் மொஹமட் இன்பாஸ்
ஏ.எஸ்.பி.லியனகே
பானி விஜேசிறிவர்தன
பிரியந்த புஸ்பகுமார விக்ரமசிங்க
அஜந்த டி சொய்சா
பத்தரமுல்லே சீலரத்ன தேரர்
நுவன் சஞ்ஜீவ பேபகே
ஹிட்டிஹாமிலாகே தோன் ஓஷல லக்மால் அனில் ஹேரத்
ஜனக்க பிரியந்த குமார ரத்நாயக்க
கே.கே.பியதாஸ
சிறிபால அமரசிங்க
சரத் கீர்த்திரத்ன
கே.ஆனந்த குலரத்ன
அக்மீமன தயாரத்ன தேரர்
கே.ஆர்.கிஷான்
பொல்கம்பொல ராலலாகே சமிந்த அநுருத்த
அநுர சிட்னி ஜயரத்ன
சிறிதுங்க ஜயசூரிய
மஹிந்த தேவகே
மொஹமட் இல்லியாஸ்
லக்ஸ்மன் நாமல் ராஜபக்ஸ
அன்டனி விக்டர் பெரேரா
கீர்த்தி விக்ரமரத்ன
மரக்கலமானகே பிரேமசிறி
லலித் டி சில்வா
பி.டபிள்யூ.எஸ்.கே.பண்டாரநாயக்க
டி.எம்.பண்டாரநாயக்க
அகம்பொடி பிரசங்க சுரஞ்ஜீவ அனோஜ் டி சில்வா
அநுருத்த ரணசிங்க ஆராய்ச்சிகே ரொஷான்
ரூ.187 கோடி செலவளிக்க அனுமதி
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்ட தேர்தல் செலவுகள் ஒழுங்காற்று சட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசிதழில் கூறப்பட்டுள்ளதாவது:–
இந்தத் தேர்தலில் பிரசாரத்துக்காக நாடு முழுவதும் வேட்பாளர் ஒவ்வொருவரும் வாக்களருக்கு அதிகபட்சமாக தலா ரூ.109 வரை செலவழிக்க அனுமதிக்கப்படுகிறது. அதன்படி, ஒரு வேட்பாளர் மொத்தம் ரூ.186.83 கோடி வரை செலவழிக்கலாம்.
இதில் 60 சதவீதத்தை வேட்பாளர்கள் தங்கள் சொந்த நிதியிலிருந்தும் 40 சதவீதம் கட்சிகளிடமிருந்து பெற்றும் செலவழிக்கலாம். தேர்தல் முடிந்து 21 நாள்களுக்குள் இதற்கான செலவுக் கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.