For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சோசியல்மீடியாக்களில் பொய் வீடியோள் பரப்புவது குற்றம்!

07:01 PM Aug 14, 2024 IST | admin
சோசியல்மீடியாக்களில் பொய் வீடியோள் பரப்புவது குற்றம்
Advertisement

மிழக அரசு அனைத்து மக்களும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக நிதி உதவி வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு மாதம் தோறும் கலைஞர் உரிமைத்தொகை மூலம் ரூ.1,000-ம், அரசு பள்ளியில் படித்த மாணவிக்கு, கல்லூரி படிப்பின்போது மாதம் ரூ.1,000-ம் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் மற்றும் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் தவப்புதல்வன் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தப்படுகிறது.இந்த திட்டங்களால் மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றப்படுகிறது என்று தமிழக அரசு கூறுகிறது. ஆனால் இந்த திட்டங்களால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் கேள்வி குறியாகி விட்டது. இந்த நிதி உதவியால் மக்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை.

Advertisement

இதுபோன்ற உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கியதில் இருந்தே டாஸ்மாக் வருமானம்தான் அதிகரித்து உள்ளது. அரசின் பணம், அரசுக்குதான் செல்கிறது என்று சமூக வலைதளங்களில் தொடர்ந்து சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதற்கு வலுசேர்க்கும் வகையில் சிலர் பெண்கள் மற்றும் மாணவர்கள் மதுகுடிக்கும் வீடியோக்களை பரவவிடுகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான தகவல்களை வெட்ட வெளிச்சமாக்க வாட்ஸ்-அப்பில் TNFACT CHECK என்ற ஒரு சேனலை தொடங்கி உள்ளது. அதில் தவறான தகவல்கள் குறித்து அதற்கு அரசின் விளக்கமும் பதிவிடப்படுகிறது. அந்த வகையில் பஸ்சில் போட்டி போட்டு கொண்டு பீர் குடிக்கும் மாணவிகள், மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து டாஸ்மாக் மூலம் மீண்டும் வாங்கும் அரசு என்று ஒரு வீடியோவுடன் சமூகவலைத்தளத்தில் பரவிய பதிவுகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை பதிவு வெளியிட்டுள்ளது.

Advertisement

அதில் கூறியிருப்பதாவது:-–

இந்த வீடியோ கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே எடுக்கப்பட்டது. ஆனால் 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட புதுமைப்பெண் திட்டம் கல்லூரி மாணவிகளுக்கானது. பள்ளி மாணவிகளுக்கு அல்ல. மேலும் இந்த வீடியோ வெளியான போதே, பள்ளிக்கல்வித்துறை மற்றும் குழந்தைகள் நல அலுவலர்கள் தரப்பில் மாணவிகளுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டது. மாணவர்களின் அடையாளங்களை மறைக்காமல் பழைய வீடியோவை சமூகவலைதளங்களில் பரப்புவது சட்டப்படி குற்றமாகும்.- இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
Advertisement