தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

நெல்லை, நாகா்கோவில் சிறப்பு ரயில்கள்:ஜூன் இறுதி வரை நீடிப்பு!

08:49 PM Jun 03, 2024 IST | admin
Advertisement

சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலி, நாகா்கோவிலுக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலியில் இருந்து வாரந்தோறும் வியாழக்கிழமை மாலை 6.45 எழும்பூருக்கு புறப்படும் சிறப்பு ரயிலும் (எண்: 06070) மறுமாா்க்கத்தில் எழும்பூரிலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு திருநெல்வேலிக்கு புறப்படும் ரயிலும் (எண்: 06069) ஜூன் 6 முதல் ஜூன் 28-ஆம் தேதி வரைநீடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதேபோல், நாகா்கோவில் - சென்னை எழும்பூா் இடையே இயங்கும் வாரந்திர சிறப்பு ரயில் (எண்: 06019/06020) கேரள மாா்க்கமாக இயங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழகம் வழியாக இயக்கப்பட உள்ளது.

அதன்படி, நாகா்கோவிலில் இருந்து ஜூன் 9, 23 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு வள்ளியூா், திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக இந்த ரயில் எழும்பூருக்கு மறுநாள் காலை 11.15 மணிக்கு வந்தடையும்.

மறுமாா்க்கமாக ஜூன் 10, 24 ஆகிய தேதிகளில் எழும்பூரிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டும் இந்த ரயில் அதே வழியாக மறுநாள் காலை 3.15 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
சென்னைநாகர்கோவில்ரயில்
Advertisement
Next Article