For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஸ்பெயின் நாட்டின் பட்டத்து இளவரசியானார் லியோனார்! - வீடியோ

08:06 PM Nov 01, 2023 IST | admin
ஸ்பெயின் நாட்டின் பட்டத்து இளவரசியானார் லியோனார்    வீடியோ
Advertisement

ன்றைக்கும் உலகின் பல நாடுகளில் மகாராஜாக்களும் மகாராணிகளுமே ஆட்சி செய்கிறார்கள். ஐ.நா. சபையில் உறுப்பினராக இருக்கும் 191 நாடுகளில் 28 நாடுகள் இன்னமும் மன்னராட்சியில்தான் உள்ளன. சில நாடுகளில் மன்னர் பதவியும் அதையொட்டிய ஆடம்பரங்கள் மட்டுமே இருக்கின்றன. அதிகாரமெல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே இருக்கிறது.

Advertisement

அந்த வகையில்தான் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் முடியாட்சி குடியரசு அமலில் இருந்து வருகிறது. இங்கு மக்கள் தேர்வு செய்யும் அரசு ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், மன்னர் குடும்பத்திற்கு பாரம்பரிய முறைப்படி மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நாட்டின் அரசராக 6வது பிலிப்பி இருந்து வருகிறார். ராணியாக லெட்டிசியா உள்ளார். இவர்களுக்கு கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி இளவரசி லியோனார் பிறந்தார். இவரது முழு பெயர் லியோனார் டி தோடாஸ் லாஸ் சாண்டோஸ் டி போர்பான் ஒய் ஆர்ட்டிஸ் என்பதாகும். அந்நாட்டு மன்னர் குடும்ப முறைப்படி 18 வயது பூர்த்தி ஆகும் போது இளவரசன் அல்லது இளவரசி நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் படி பொறுப்பேற்றுக்கொள்வது வழக்கம்.

Advertisement

அந்த வகையில் தனது 18வது வயதை பூர்த்தி செய்த இளவரசி லியோனார் அதிகாரபூர்வமாக இளவரசியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் மூலம் அவர் வருங்கால ராணியாக பொறுப்பேற்க உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக இதற்காக ராணுவ பயிற்சி மேற்கொண்டு வந்த லியோனார் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரபூர்வமாக பட்டத்து இளவரசியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவரது தந்தை 6வது பிலிப்பி கடந்த 37 ஆண்டுகளாக மன்னராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. புதிய பட்டத்து இளவரசியாக லியோனார் பொறுப்பேற்று கொண்டுள்ளதை அடுத்து, ஸ்பெயின் நாட்டில் பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாட்டங்களில் குதூகலித்துக் கொண்டிருக்கிறார்கள்

Tags :
Advertisement