For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஸ்பெயின் மீண்டும் வென்றது யூரோ கோப்பை சாம்பியன் பட்டம் !

08:06 AM Jul 15, 2024 IST | admin
ஸ்பெயின் மீண்டும் வென்றது யூரோ கோப்பை சாம்பியன் பட்டம்
Advertisement

யூரோ தொடரில் முறையே 1964, 2008, 2012, ஆகிய ஆண்டுகளில் ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் நடப்பு 2024 யூரோ கோப்பை கால்பந்து தொடரிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஸ்பெயின் அணி. . இதன் மூலம் அதிக முறை (4) யூரோ கோப்பை பட்டம் வென்ற அணியாகவும் உருவெடுத்துள்ளது.

Advertisement

கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த யூரோ கோப்பை தொடரின் இறுதி போட்டியில் ஸ்பெயின் அணியும், இங்கிலாந்து அணியும் மோதியது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த போட்டியானது இன்று பெர்லினில் உள்ள ஒலிம்பியாஸ்டேடியத்தில் நடைபெற்றது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியின் முதல் பாதியான 45 நிமிடத்தில் எந்த அணியும் கோல் அடிக்காமல் இருந்தனர். முதல் பாதி விறுவிறுப்பாக தொடங்கினாலும், சற்று தோய்வுடனே சென்றது. அதன்பிறகு தொடங்கிய 2-ஆம் பாதியில் 2 அணிகளும் மிக தீவிரமாக கோல் அடிக்கும் முனைப்பில் விளையாடினார்கள்.

Advertisement

சரியாக 47’வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் வீரரான நிகோ வில்லியம்ஸ் அசத்தல் கோல் அடித்து கோல் கணக்கை தொடங்கி வைப்பார். இதன் மூலம் ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெரும். அதனை தொடர்ந்து போட்டியின் 73’வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் வீரரான பால்மர் மிரட்டலாக சமன் கோலை அடிப்பார். இதன் மூலம் 1-1 என போட்டியானது சமநிலையில் சென்று கொண்டிருக்கும், போட்டியின் 86’வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் வீரரான குக்குரெல்லா அமைத்து கொடுத்த அருமையான வாய்ப்பை ஸ்பெயின் அணியின் சக வீரரான ஒயர்சபால் அசத்தலான கோலை அடிப்பார்.

இதனால் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெரும், மீதம் இருந்த 4 நிமிடங்களில் இங்கிலாந்து அணி முயற்சி செய்தும் கோல் அடிக்க முடியாமல் போனது. இதனால், 90′ நிமிடம் முடிந்து போட்டி முடிவடையும் போது ஸ்பெயின் அணி 2-1 என போட்டியை வெற்றி பெற்றது. இதன் காரணமாக ஸ்பெயின் யூரோ கோப்பை 2024 தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றனர். மேலும், ஸ்பெயின் அணி இந்த யூரோ கோப்பை தொடரில் 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளனர்.

நடப்பு தொடரில் குரோஷியா, இத்தாலி, அல்பேனியா அணிகளை குரூப் சுற்றிலும், ஜார்ஜியா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தை நாக் அவுட் சுற்றிலும் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஸ்பெயின். இந்த தொடரில் மொத்தம் 15 கோல்களை ஸ்பெயின் பதிவு செய்துள்ளது. யூரோ தொடரில் 7 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தையும் வென்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது. களத்தில் துடிப்புடன் செயல்படும் இளம் வீரர்கள் அதிகம் கொண்ட அணியாக ஸ்பெயின் உள்ளது.

தொடரின் சிறந்த இளம் வீரருக்கான விருதை ஸ்பெயின் அணியின் 17 வயது வீரர் லாமின் யாமல் வென்றார். தொடரின் சிறந்த வீரருக்கான விருதை ஸ்பெயினின் ரோட்ரி வென்றார்.

Tags :
Advertisement