For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்: இந்தியா 21 தங்கப் பதக்கங்களுடன் முதலிடம்!

05:21 PM Sep 14, 2024 IST | admin
தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்  இந்தியா 21 தங்கப் பதக்கங்களுடன் முதலிடம்
Advertisement

ந்திய தடகள சங்கம் மற்றும் தமிழ்நாடு தமிழ்நாடு தடகள சங்கம் இணைந்து நடத்திய 4-ஆவது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. செப்டம்பர் 11-ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டி செப்டம்பர் 13-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.நடைபெற்ற தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பூடான், நேபால், வங்கதேசம், மாலத்தீவு என 7 நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்று தங்களுடைய திறமையை நிரூபித்தனர்.

Advertisement

நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்போட்டி, ஈட்டி எறிதல், பட்டியறிதல், குண்டு எறிதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட வகையான போட்டிகள் ஆண் பெண்களுக்கு தனித்தனியே நடத்தப்பட்டன. மொத்தமாக 28 வகையான விளையாட்டுகளில் 210 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.இந்தியாவில் இருந்து மட்டும் 62 வீரர்கள் பங்கேற்ற நிலையில், தமிழ்நாட்டில் இருந்து 9 பேர் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.

Advertisement

சென்னை நேரு விளையாட்டரங்கில் கடந்த 11-ம் தேதி தொடங்கி இதன் நிறைவு நாளான நேற்று பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா மொத்தம் 21 தங்கம்,22 வெள்ளி, 5 வெண்கலம் என 48 பதக்கங்களைக் கைப்பற்றி முதலிடத்தைப் பிடித்தது.இலங்கை 9 தங்கம், 9 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களை வென்று 2-வது இடத்தைக் கைப்பற்றியது.

முன்னதாக ஆடவருக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் பிரியன்ஷு பந்தய தூரத்தை 3:53.2 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான ராகுல் சர்னாலியா வெள்ளிப் பதக்கம் வென்றார். மகளிருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் தீபிகா 54.98 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான பூனம் (51.21) வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றினார். மகளிருக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் தமன்னா (14.43) தங்கப் பதக்கமும், பூஜா குமாரி (14.02) வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

மகளிர் 4 X 400 தொடர் ஓட்டத்தில் சச்சின் சாங்லி, சந்திரா மோள் சாபு, கனிஸ்டா டீனா, நீரு பாதக் ஆகியோர் அடங்கிய அணி முதலிடம் பிடித்து தங்கம் வென்றது. இலங்கை அணி 2-வது இடத்தையும், வங்கதேச அணி 3-வது இடத்தையும் பிடித்தது. மகளிர் பிரிவு 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை வினீதா குர்ஜார் முதலிடமும், மற்றொரு இந்திய வீராங்கனை லக்சிதா வினோத் சாண்டிலியா 2-வது இடத்தையும், இலங்கையின் துலான்ஜி 3-வது இடத்தையும் பிடித்தனர்.

Tags :
Advertisement