சொர்க்கவாசல் பிரஸ் மீட் ஹைலைட்ஸ்!
சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, செல்வராகவன், நட்டி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘சொர்க்கவாசல்’.இப்படம் உண்மையை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.. சென்னை மத்திய சிறையில் 1990-களில் நடந்த கலவர சம்பவத்தில் பல கைதிகள் சிறையை விட்டு தப்பித்ததாக கூறப்படுகிறது. இந்த படம் நவம்பர் 29ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் சென்னை லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் படக்குழுவினரை பத்திரிகையாளர்கள் சந்தித்தனர். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தி பேசினர்..!
''ரேடியோ ஆர் ஜே வாக இருந்து இன்று சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை அடைந்திருக்கிறார். பாலாஜி அவருக்கு என் வாழ்த்துக்கள்.. அவருடைய நடிப்பில் இந்த படம் ஒரு புதிய பரிமாணத்தை கொடுக்கும்'' என்று இருவரும் வாழ்த்தி பேசினர். ‘’நான் ‘சொர்க்கவாசல்’ படத்தை பார்த்த பிறகு ‘கைதி 2’ படத்தின் காட்சிகளை எடுக்க வேண்டும்.. காரணம் அந்த படத்தில் ஜெயில் காட்சிகளும் இந்த ஜெயில் காட்சிகளும் ஒன்றாக இருந்து விடக்கூடாது’’ என்று சீரியஸாக பேசினார் லோகேஷ் கனகராஜ்.
சித்தார்த் விஸ்வநாத் பேசும்போது..''இந்தப் படம் முழுக்க முழுக்க சிறை கைதிகளை பற்றிய படமாகும்.. இந்தப் படத்தை எடுக்க எங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக கமல்ஹாசன் மற்றும் வெற்றிமாறன் இருவரும் இருந்த அவர்களுக்கு எங்கள் நன்றி. இந்த விழாவிற்கு வந்து எங்களை வாழ்த்திய அனிருத் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவருக்கும் நன்றி.. லோகேஷ் பிஸியாக இருந்தாலும் எங்களுக்காக வந்து வாழ்த்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி.. அதுபோல பகல் 12 மணிக்கு அனிருத் ஸ்லீப்பிங் டைம்.. இரவு உழைத்து பகலில் ஓய்வெடுப்பார்.. ஆனாலும் இந்த நேரத்தில் வந்து எங்களை வாழ்த்தி அவர் சென்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தப் படத்தில் கதையின் நாயகன் ஆர் ஜே பாலாஜி பேசும்போது.. ''இந்தப் படத்திற்கு என்னுடன் பிரமோஷன் பணிகளில் உறுதுணையாக இருந்தவர் நாயகி சானியா ஐயப்பன்.. இதற்கு முன்பு நான் நடித்த ‘சிங்கப்பூர் சலூன்’ நாயகி மீனாட்சி புரமோஷனுக்கு பெரிதாக வர முடியவில்லை.. காரணம் அவர் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகிவிட்டார். ஜாவா சுந்தரேசன் போல ஒவ்வொரு படங்களிலும் அவருக்கு பெரிய வாய்ப்பு வந்தது.. எனவே அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.. ஆனால் இந்த படத்தின் சானியா என்னுடன் எல்லா ப்ரோமோஷனல் கலந்து கொண்டார்.. நான் மட்டுமே எப்போதும் தனியாக பிரமோஷன் செய்து கொண்டிருக்கிறேன்.. இந்த படத்தில் அவர் எனக்கு உறுதுணையாக இருந்தார்.
இந்தப் படத்தில் விநியோக உரிமையை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.. அவர்கள் எனக்காக வாங்கி இருப்பதாக பலர் பேசி வருகிறார்கள்.. அவர்களின் அடுத்த படத்தை (சூர்யா நடிக்கும்) நான் இயக்க உள்ளதால் அப்படியான பேச்சு வருகிறது.. ஆனால் அவர்கள் எனக்காக அந்த படத்தை வாங்கவில்லை.. ‘சொர்க்கவாசல்’ படத்தை பார்த்துவிட்டு அவர்கள் இந்த விநியோக உரிமை பெற்று இருக்கிறார்கள்.. அவர்களுக்கு என் நன்றி.
என்னை சில சிலர் பாவாடை என்கிறார்கள் அப்படி இல்லை என்றால் சங்கி என்று அழைக்கிறார்கள்.. நான் பாவாடையும் இல்லை சங்கியும் இல்லை.. நீங்கள் அரசியல் செய்ய நினைத்தால் அது அரசியல்வாதிகளிடம் செய்து கொள்ளுங்கள்.. இது திரையுலகம் திரையுலகில். அரசியல் வேண்டாம்.. ''என்று பேசினார்.
மேலும்.. ''ஒரு உணவுப் பொருள் பிஸ்கட் தயாரித்து அது மக்களிடம் சேரும்போது ஒருவர் அந்த பிஸ்கட் சரியில்லை என்பார் ஒருவர் பக்கம் பக்கமாக அந்த பிஸ்கட் பற்றி எழுதிக் கொண்டிருப்பார்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும்.. அது போல ஒரு படம் மக்கள் கையில் சென்று விட்டால் அந்த படத்தை அவர்கள் விமர்சிக்கும் உரிமை இருக்கிறது.
அனைவரிடமும் மொபைல் போன் இருக்கிறது.. நாம் ஒவ்வொருவரிடம் மொபைல் போனை பிடுங்கி கொண்டிருக்க முடியாது.. அது அவர்களின் உரிமை.. ஆனால் இந்த சொர்க்கவாசல் படம் நிச்சயம் உங்களை முழு திருப்தி அடைய செய்யும் படமாக உருவாகியுள்ளது.. ஒரு நல்ல படைப்பை நிச்சயமாக ஏற்றுக் கொள்வார்கள்.. நல்ல படைப்பை கொடுக்க நாங்கள் முன் வந்திருக்கிறோம்.. அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.” என்று பேசினார் ஆர்.ஜே பாலாஜி.